நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தண்டோரா

பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை விகடன்

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

நம்மாழ்வார் நினைவேந்தல்!

100 கி.மீ வாகனப் பேரணி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நம்மாழ்வார் நினைவு தினத்தை அனுசரிக்கும்விதமாக டிசம்பர் 30-ம் தேதி, ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் 6-ம் ஆண்டு நினைவேந்தல் படத்திறப்பும், 100 கி.மீ வாகனப் பயணமும் நடைபெற உள்ளன.

பயணம், தாமல் அருகிலுள்ள `வையகம்’ இயற்கைப் பண்ணையில் (கிளையாறு) தொடங்கி கடும்பாடியிலுள்ள தமிழ்நிலம் தமிழ்ப் பண்ணையில் முடிவடைய இருக்கிறது. சிறப்பு விருந்தினராக நடிகர் பொன்வண்ணன், சித்த மருத்துவர் திருதணிகாச்சலம் கலந்துகொள்கின்றனர்.

தண்டோரா

செயற்பாட்டாளர் காஞ்சி அமுதன், முன்னோடி விவசாயிகள் இறையழகன், பேரின்பன், ‘எழில்சோலை’ மாசிலாமணி போன்றவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் இயற்கை உழவர்கள் பண்ணைகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 94452 69610, 94436 38545.

பாரம்பர்ய விதைகள்

விழுப்புரம் மாவட்டம், கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபத்தில், டிசம்பர் 30-ம் தேதி பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பாக ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் நினைவு தினம், `பாரம்பர்ய விதை தினமா’கக் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் 1,000 விவசாயிகளுக்கு பீர்க்கன், கீரை, கத்திரி தக்காளி, பாகல், புடலை ஆகிய பாரம்பர்ய விதைகள் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 78118 97510, 97903 27890.

இலவசப் பயிற்சி

பாரம்பர்ய திருவிழா

காந்தி வேர்ல்டு ஃபவுண்டேஷன் சார்பில் சென்னை, எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் ‘பாரம்பர்ய திருவிழா’ நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பாரம்பர்ய விதைகள், மூலிகைகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 90430 21069.

கட்டணப் பயிற்சிகள்

பூச்சிவிரட்டி தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 28-ம் தேதி ‘வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் தயாரித்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’; ஜனவரி 4-ம் தேதி ‘இயற்கை உரங்கள் தயாரித்தல்’; 25-ம் தேதி ‘அசோலா தயாரிப்பு மற்றும் சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

மதிப்புக்கூட்டல்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 2-ம் தேதி ‘நிலக்கடலைச் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 3-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் கோடைக்கால மேலாண்மை நுட்பங்கள்’, 8-ம் தேதி ‘ஆடு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்’, 10-ம் தேதி ‘பாலில் மதிப்புக்கூட்டல்’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தண்டோரா

மேலும், ஜனவரி 6-ம் தேதி ‘உளுந்துச் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 7-ம் தேதி ‘நெல்லில் மதிப்புக்கூட்டல்’ 13-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

மூலிகை முற்றம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெற உள்ளது.

மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.