Published:Updated:

தண்டோரா

பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை விகடன்

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இலவசப் பயிற்சிகள்

கெண்டை மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 20-ம் தேதி ‘காளான் வளர்ப்பு, நெல் மற்றும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த மேலாண்மை’, 21-ம் தேதி ‘கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சுகள் பொரிப்புத் தொழில்நுட்பம்’, 22-ம் தேதி ‘முயல் வளர்ப்பு’, 23-ம் தேதி ‘பால் மதிப்புக்கூட்டல்’, 24-ம் தேதி ‘அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

பால் பொருள்கள்

சென்னையை அடுத்த கொடுவேளியிலுள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் ‘பால் பொருள்கள் மற்றும் உணவுப் பதனிடுதல் தொடர்பான தொழில் நிறுவனம் அமைக்கும் வழிமுறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27680214, செல்போன்: 99949 36544

மதிப்புக்கூட்டல்

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் ‘காய்கறி மற்றும் பழங்களில் மதிப்புக்கூட்டல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு: 04286 266345.

பொங்கல் திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி கிராமத்தில் தமிழகம் இயற்கை விவசாய மையம் சார்பில் ஜனவரி 18-ம் தேதி, ‘காஞ்சி விவசாயிகளின் பொங்கல் திருவிழா’ நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாரம்பர்ய விளையாட்டுகள், நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், விவசாயப் பொருள்கள் கண்காட்சி ஆகியவை இடம்பெற இருக்கின்றன. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு: 98942 22459

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டணப் பயிற்சிகள்

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகேயுள்ள குடும்பம் - கொழிஞ்சிப் பண்ணையில் ஜனவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.

தொடர்புக்கு, 0431 2331879, 98424 33187.

மதிப்புக்கூட்டல்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 28-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 29-ம் தேதி ‘பாலில் மதிப்புக்கூட்டல்’, 30-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.

தொடர்புக்கு: 04285 241626.

நாட்டுக்கோழி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 13-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

பெங்களூரில் தோட்டக்கலைக் கண்காட்சி

கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ள ஹெசரகட்டா, இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு ‘தேசிய தோட்டக்கலைக் கண்காட்சி’ நடைபெறவுள்ளது. தோட்டக்கலை மையத்தின் மூலம் வெளியிடப்பட்ட கொய்யா, பப்பாளி, மா, ரம்புஸ்தான், சீத்தா ஆகிய பழப் பயிர்களின் ரகங்களும், கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கேரட் ஆகிய காய்கறிப் பயிர்களின் விதைகளும், மலர்கள் மற்றும் அழகு மலர்கள் சாகுபடி, மூலிகைப் பயிர்களின் விதைகள், கன்றுகள், தொழில்நுட்பங்கள் அவற்றைச் சாகுபடி செய்வதற்கான இயற்கை உரங்கள் உள்ளிட்டவை கிடைக்கும். அதோடு தோட்டக்கலை வேளாண் விஞ்ஞானிகளின் நேரடி அறிவுரைகளும் ஆலோசனைகளும் கிடைக்கும்.

கண்காட்சியின் ஓர் அங்கமாக, `நகர தோட்டக்கலை’ என்ற பெயரில் மாடித்தோட்டம், வெர்ட்டிகல் கார்டன் பற்றிய ஒருநாள் கட்டணப் பயிற்சி வகுப்பும் நடைபெறவுள்ளது. இதோடு வேளாண் பல்கலைக்கழங்களின் அரங்குகள், மேம்படுத்தப்பட்ட ரகங்களின் நேரடி விளக்கம், நர்சரிகள் தொடங்குவதற்கான ஆலோசனைகள், விவசாயத்தில் நாட்டமுடைய தொழில்முனைவோர்களுக்கான உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட இருக்கின்றன. அனுமதி இலவசம். விவசாயக் குழுக்களாக வரவிருப்பவர்கள் முன்கூட்டியே தகவலளித்தால் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்படும்.

தொடர்புக்கு,

செல்போன்: 96637 96473

இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஹெசரகட்டா, பெங்களூரு-560 089

தொலைபேசி: 080 28466420/23. இணையதளம்: www.iihr.res.in

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.