Published:Updated:

தண்டோரா

மீன் வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
மீன் வளர்ப்பு

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின் பயண ஏற்பாடுகளைச் செய்யவும். - ஆசிரியர்
கட்டணப் பயிற்சிகள்

சமையல் எரிவாயு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 21-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

காளான் வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 31-ம் தேதி ‘உள்நாட்டு மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

இயற்கை உரம்

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, ஸ்ரீரமணா பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 15-ம் தேதி, முனைவர் உதயகுமார் வழங்கும் ‘இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.100.

தொடர்புக்கு, செல்போன்: 78450 70500 / 97888 56276.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 16-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் மண் மற்றும் நீர் மேலாண்மை’ பயிற்சி இலவசப் பயிற்சியாக நடைபெறவுள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், மார்ச் 18-ம் தேதி ‘இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

மூலிகை முற்றம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெறவுள்ளது.

மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகேயுள்ள குடும்பம் - கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது.

முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.

தொடர்புக்கு: தொலைபேசி: 0431 2331879, 98424 33187.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இலவசப் பயிற்சிகள்

மரம் வளர்ப்போர் விழா!

கோயம்புத்தூர், ஆர்.எஸ் புரத்தில் உள்ள மத்திய அரசின் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் மார்ச், 10, 11 தேதிகளில் ‘மரம் வளர்ப்போர் விழா’ நடைபெற உள்ளது. இந்த விழாவில் மரச்சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஆகியவை இடம்பெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன் 94871 69036.

கறவை மாடு வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 17-ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘பசுந்தீவனச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.