புதுசு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் பயிர்களில் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்திவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 13 புதிய பயிர் ரகங்களை வெளியிட்டிருக்கிறது. இரண்டு நெல் ரகங்கள், இரண்டு சிறுதானிய ரகங்கள், ஆறு தோட்டக்கலைப் பயிர்கள், கரும்பு, பருத்தி, உளுந்து வகைகளில் தலா ஒரு ரகம் வீதம் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதிக மகசூல், வறட்சியைத் தாங்கும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்கெனவே இருக்கும் ரகங்களில் மேம்படுத்தப்பட்ட ரகங்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரகத்தைப் பற்றிய விவரமும் இங்கே…

நெல் (கோ-53)

தமிழ்நாட்டில் வறட்சி பாதிப்புக்குள்ளாகும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்ற ரகம். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய குறுகியகால ரகம். வயது 115-120 நாள்கள். மானாவாரியில் நேரடி விதைப்புக்கு ஏற்றது. சராசரி நெல் மகசூல் ஹெக்டேருக்கு 3,866 கிலோ. இது வறட்சியைத் தாங்கி வளர்வதுடன், மேட்டூர் அணை நீர் திறப்பதற்குக் காலதாமதமானாலும் பயிரிட ஏற்ற ரகம்.

நெல் (ஏடிடி (ADT)-54)

ஹெக்டேருக்கு சராசரி 6,307 கிலோ மகசூல் தரக்கூடிய மத்தியகால ரகம். வயது 130-135 நாள்கள். வெள்ளை நிற, மத்திய சன்ன அரிசி ரகம். அதிக அரவைத்திறன் (72.3%) உடையது. தமிழ்நாட்டில் பின் சம்பா, தாளடிப் பருவங்களுக்கு ஏற்றது.

கரும்பு (கோ.க-13339)

அதிக மகசூலாக ஹெக்டேருக்கு 141.6 டன் கரும்பு மகசூலும், 18.2 டன் சர்க்கரையும் தந்துள்ளது. வயது 330-360 நாள்கள். நடுப்பட்டம் மற்றும் பின்பட்டத்துக்கு ஏற்றது. கடந்த 20 ஆண்டுகளாகப் பயிரிடப்படும் கோ.86032 கரும்பு ரகத்துக்கு மாற்று ரகமாக கோ.க.13339 வெளியிடப்பட்டிருக்கிறது.

மரவள்ளி (ஒய்.டி.பி-2)

ஹெக்டேருக்கு 46.2 டன் கிழங்குகளை மகசூலாகக் கொடுக்கிறது. 30 சதவிகிதம் மாவுச்சத்து இருக்கிறது.

உளுந்து [வம்பன்-11 (வி.பி.என்-11)]

மஞ்சள் தேமல் நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. வயது 70-75 நாள்கள். நான்கு பட்டங்களிலும் (ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் சித்திரை) பயிரிடலாம். மானாவாரியில் ஹெக்டேருக்கு 865 கிலோவும், இறவையில் 940 கிலோவும் கொடுக்கவல்லது.

பருத்தி (கோ-17)

ஹெக்டேருக்கு 2,504 கிலோ விதைப் பருத்தி மகசூலாகக் கிடைக்கிறது. வயது 130 நாள்கள். ஒரே சமயத்தில் காய் முதிர்வடைதல், செடிகள் அதிகக் கிளைகள் இல்லாமல் இருத்தல், குறுகிய காய் பிடிக்கும் கிளைகள் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். தமிழ்நாட்டின் நெல் தரிசு, குளிர்கால மானாவாரி மற்றும் கோடைக்கால நீர்ப்பாசனப் பகுதிகளுக்கு ஏற்றது. மேலும், இது அடர் நடவு முறைக்கும், இயந்திர அறுவடைக்கும் ஏற்ற ரகம்.

தினை {ஏ.டி.எல்-1 (அத்தியேந்தல்)}

ஹெக்டேருக்கு 2,117 கிலோ தானியம் மற்றும் 2,785 கிலோ தட்டை மகசூலாகக் கிடைக்கும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யப் பயன்படுகிறது. பயிரிடுவதற்கு குறைந்த செலவே ஆகிறது. ஆனால் வருமானம் இரு மடங்காகிறது.

வாழை (கோ-2)

வீரிய ஒட்டு வாழை ரகம். நெய்பூவன் போன்ற தோற்றத்தில் இருக்கும். ஹெக்டேருக்கு 32 டன் மகசூல் கிடைக்கும். இந்த வாழை, நூற்புழு மற்றும் வாடல் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. இது வாழை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

மணத்தக்காளி (கோ-1)

ஹெக்டேருக்கு 30-35 டன் கீரை மகசூலாகக் கிடைக்கும். இது வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் மிகுந்த கீரை; மருந்துத்தன்மைக்காகவும் பயன்படுத்த உகந்தது. வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித்தோட்டத்தில் வளர்க்க ஏற்றது.

சின்ன வெங்காயம் (கோ-6)

வெங்காயத் தாள்கள் (Onion Bulbs) மற்றும் விதை உற்பத்தி செய்ய ஏற்ற ரகம். ஹெக்டேருக்கு 19.1 டன் வெங்காயம் மகசூல் கிடைக்கும். விதை மகசூலாக ஹெக்டேருக்கு 300 கிலோ கிடைக்கும். அதிக நாள்கள் சேமித்து வைக்கலாம். தற்போது பயிரிடப்பட்டு வருவது கோ.5 ரகம். குறைவான சேமிப்புத்திறன் கொண்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கோ.6 ரகம் தமிழ்நாட்டில் பெரம்பலூர், நாமக்கல், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்றது.

தக்காளி (கோ-4)

வீரிய ஒட்டு ரகத் தக்காளி. காம்பை ஒட்டிய பகுதி பழுக்கும்போது பச்சை நிறம் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்துடன் இருப்பதால் அதிக தூரம் எடுத்துச் செல்லவும், அதிக நாள்கள் சேமிக்கவும் பயன்படும். நீண்ட நாள்கள் மகசூல் தரவல்லது. ஹெக்டேருக்கு 92.3 டன் மகசூல் கிடைக்கும். பழங்களில் அமிலத்தன்மை அதிகம்.

கொடுக்காப்புளி (பி.கே.எம்-2)

ஆண்டுதோறும் சீராகக் காய்த்து அதிகபட்சமாக ஒரு மரத்துக்கு 90 கிலோவும், ஹெக்டேருக்கு 13.5 டன் பழங்களையும் மகசூலாகக் கொடுக்கும். குறைந்த இடுபொருள்கள் போதும். வறட்சியைத் தாங்கி வளரும். இதன் பழங்கள் சத்துகள் நிறைந்தவை. பழத்தின் வெளிப்புறம் இளஞ்சிவப்பு நிறத்திலும், சதைப்பகுதி சிவப்பு நிறத்திலும் இருக்கும். தமிழ்நாட்டின் களர், உவர் நிலங்களுக்கும் மற்றும் மானாவாரி நிலங்களுக்கும் உகந்தது. நகர்ப்புறப் பழமுதிர் நிலையங்களில் கொடுக்காப்புளி கிலோவுக்கு 200–250 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

சோளம் (கோ-32)

மானாவாரியில் தானிய மகசூலாக ஹெக்டேருக்கு 2,445 கிலோவும், உலர் தட்டை மகசூலாக 6,490 கிலோவும் கிடைக்கும். இதன் தானியம் அதிக புரதச்சத்தும் (14.6%), நார்ச்சத்தும் (5.80%) கொண்டது. மானாவாரி மற்றும் இறவையில் தமிழகம் முழுவதும் பயிரிடலாம்.

மேலும் விவரங்களுக்கு, இயக்குநர், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல்துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். தொலைபேசி: 0422 6611215.