Published:Updated:

`இது கார்ப்பரேட்டுகளுக்கே சாதகமாக உள்ளது!' - மரபணு மாற்ற உணவுகளுக்கான வரைவு குறித்து ஆர்வலர்கள்

மரபணு மாற்ற உணவு
News
மரபணு மாற்ற உணவு

``உணவுகளின் தரத்தை சோதனை செய்ய ஒழுங்குமுறை செய்ய சுயாதீனமான அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் இதில் எதுவும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களே தங்களுடைய பொருட்கள் குறித்த தர அறிக்கையை சோதனை செய்து தருவதும் அதை அங்கீகரிப்பதும் சரியான நடைமுறை அல்ல."

மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கான வரைவை உணவு பாதுகாப்பு மற்று தர நிர்ணய அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த வரைவு மரபணு மாற்றப்பட்டு உணவுகள் குறித்த தெளிவான விதிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாகவும் மரபணு மாற்றப்பட்ட உணவு எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.

Genetically modified food (Representational Image)
Genetically modified food (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அனந்துவிடம் பேசினோம். ``எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டுள்ள மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கான வரைவில் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான தெளிவான விதிமுறைகள் எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை விளைவிப்பதற்கான அனுமதி இல்லையென்றாலும் (பருத்தி தவிர), பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைத்து நாடெங்கும் விற்கப்படுகிற பல்வேறு உணவுப் பொருட்கள், எண்ணெய்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஒழுங்குமுறை செய்வதற்கான முயற்சி இந்த வரைவில் இருப்பதாகத் தெரியவில்லை.

உணவுகளின் தரத்தை சோதனை செய்ய ஒழுங்குமுறை செய்ய சுயாதீனமான அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் இதில் எதுவும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களே தங்களுடைய பொருட்கள் குறித்த தர அறிக்கையை சோதனை செய்து தருவதும் அதை அங்கீகரிப்பதும் சரியான நடைமுறை அல்ல.

அதுமட்டுமல்லாமல் இந்த வரைவை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே வெளியிட்டுள்ளது. பிராந்திய மொழிகளில் வெளியிடாமல் மக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. எப்படி இந்த மொழிகள் தெரியாத பரவலான மக்கள் வரைவில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வார்கள். வரைவு வெளியிடுவதற்கு முன்பே கார்ப்பரேட் தரப்புகளின் கருத்துகளை வாங்கியிருக்கிறது. இந்த வரைவின் மீதான கருத்துகளை தெரிவிக்க ஜனவரி 15-ம் தேதி கடைசி தேதி எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் கருத்துகளைப் பெற முடியாது.

Genetically modified food (Representational Image)
Genetically modified food (Representational Image)
Pixabay

எனவே பிராந்திய மொழிகளிலும் வரைவை வெளியிட வேண்டும். கருத்துகளைத் தெரிவிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மேலும் பருத்தியை உணவுப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்தியாவில் பருத்திப் பால் என்பது பரவலாக அருந்தப்பட்டு வருகிறது. எனவே எதன் அடிப்படையில் பருத்தியை உணவு பட்டியலிலிருந்து நீக்க முடியும் என்ற கேள்வியும் உள்ளது.

இப்படி கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்திருக்கும் சூழலில் விதிமுறைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது" என்று அவர் கூறினார்.