Published:Updated:

கால்நடைகளையும் கொரோனா பாதிக்குமா?

கால்நடை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை

ஆலோசனை

கால்நடைகளையும் கொரோனா பாதிக்குமா?

ஆலோசனை

Published:Updated:
கால்நடை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை
கொரோனா வைரஸ் தொற்று உலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சீனாவில் தொடங்கிய இந்தத் தொற்று இத்தாலி, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகின்றன. மரண பயத்தால் ஒட்டுமொத்த மனிதகுலமும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் `ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் இந்தத் தொற்று பாதிக்க வாய்ப்பிருக்கிறதோ...’ என்ற அச்சம் கலந்த கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து, கால்நடை மூலிகை மருத்துவரும் தஞ்சாவூரிலுள்ள மரபுசார் கால்நடை மூலிகை மருத்துவ மையத்தின் முன்னாள் தலைவருமான மருத்துவர் புண்ணியமூர்த்தியிடம் பேசினோம். இது குறித்தும், பொதுவாகக் கால்நடைகளைப் பாதிக்கக்கூடிய நோய்த் தொற்றுகளுக்கான தடுப்பு முறைகள், கோடைக்காலப் பாதிப்புகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் வழங்கினார்.

கால்நடைகளையும்  கொரோனா பாதிக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கோவிட்-19 தொற்று மனிதர்களிடமிருந்து ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கோ, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கோ பரவியதாக இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்தத் தொற்று பரவக்கூடும் எனவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கால் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான நன்மை நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, செல்லப்பிராணியான நாய் வளர்ப்பவர்கள் பெரும்பாலும் பணி நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கமாக இருந்தது. இதனால் அவை ஏக்கத்தோடும் தவிப்போடும் இருந்தன. தற்போது ஊரடங்கால் அவர்கள் வீட்டிலேயே இருப்பதால், செல்லப்பிராணிகள் மகிழ்ச்சியோடு இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நாய்களுக்குத் தொற்றுநோய்கள் வராமல் தடுக்கவும், ஒருவேளை அவற்றுக்கு ஏதேனும் தொற்றுநோய்கள் வந்திருந்தால், அவை மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்கவும் சுகாதாரத்தை நன்றாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றுக்கு உணவு வைக்கும் தட்டு, தண்ணீர்வைக்கும் பாத்திரம், படுக்கை விரிப்புகள் உட்பட அனைத்துப் பயன்பாட்டு உபகரணங்களையும் வெந்நீரில் சுத்தமாகக் கழுவி வெயிலில் காயவைக்க வேண்டும்.

செல்லப் பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்தத் தொற்று பரவக்கூடும் என இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ‘மேய்த்தல் பாதி... தேய்த்தல் பாதி’ என்று கிராமப்புறங்களில் ஒரு சொல்லாடல் உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீடுகளில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பவர்கள் சோப்பு, ஷாம்பூ ஆகியவற்றைப் பயன்படுத்தி அடிக்கடி குளிப்பாட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். வயது, ரகம், காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து கால்நடை மருத்துவரின் பரிந்துரைப்படி குளிப்பாட்ட வேண்டும். தினமும் பிரஷ்ஷால் மெதுவாகத் தேய்த்து, சுத்தப்படுத்தி இவற்றைச் சுகாதாரமாகப் பராமரிப்பது அவசியம்’’ என்றவர் மாடுகள் பராமரிப்பு தகவலுக்குள் புகுந்தார்.

கால்நடை
கால்நடை

மாடுகளுக்குக் கோமாரி உள்ளிட்ட தொற்றுநோய்கள் வராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரைப்படி விவசாயிகள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். அதனுடன், முன்னெச்சரிக்கைத் தற்காப்பு நடவடிக்கையாக தலா 10 கிராம் வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, அரைக்க வேண்டும். அதனுடன் 2 பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள்தூள், 100 கிராம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து அரைத்து, அதோடு ஒரு மூடித் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து வாய்வழி மருந்தாகக் கொடுக்க வேண்டும். இது ஒரு மாட்டுக்கான ஒரு வேளைக்கான அளவு. நாள் ஒன்றுக்கு ஒரு வேளை வீதம் இரண்டு நாள்களுக்குக் கொடுக்க வேண்டும். கோடைக்காலம் முடியும் வரை 15 நாள்களுக்கு ஒரு முறை இதுபோல் தர வேண்டும். ஆடுகளுக்கும் இதைக் கொடுக்கலாம். மேலே சொன்ன அளவு நான்கு ஆடுகளுக்கு ஒரு வேளைக்குப் போதுமானது. இது வருமுன் காப்போம் நடவடிக்கை. ஒருவேளை கோமாரி உள்ளிட்ட தொற்றுநோய்கள் வந்துவிட்டால், மேற்சொன்ன மருந்தை தினமும் மூன்று வேளை வீதம் ஐந்து நாள்களுக்குக் கொடுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடு வளர்ப்பில் ‘மேய்த்தல் பாதி...தேய்த்தல் பாதி’ என்று கிராமப்புறங்களில் ஒரு சொல்லாடல் உண்டு. வைக்கோல் அல்லது தேங்காய்நாரைத் தண்ணீரில் நனைத்து, மாடுகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். இதனால் தொற்றுப் பரவாமல் தடுக்கப்படும்; ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடலில் ஏதேனும் சிறு பாதிப்புகள் இருந்தாலும் அது நம் கண்ணுக்குப் புலப்படும். உன்னி உள்ளிட்டவையும் நீங்கும். தன்னை வளர்ப்பவர் நேசிப்போடு இருப்பதாக உணர்ந்து, மாடுகள் உள்ளார்ந்து மகிழ்ச்சியடையும். இதனால் அவற்றின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கால்நடை
கால்நடை

தற்போது வெயில் கடுமையாகச் சுட்டெரிக்கிறது. இரவு நேரங்களிலும்கூட வெப்பம் தணியாமல் வாட்டி எடுக்கிறது. இதனால் கால்நடைகளின் உடலில் உஷ்ணம் அதிகரித்து, ஏதேனும் உபாதைகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாடுகளை தினந்தோறும் குளிப்பாட்ட வேண்டும். வெயில் வருவதற்கு முன்னரே, காலை 8-9 மணிக்குள் குளிப்பாட்டிவிட வேண்டும். வெயில் வந்த பிறகு குளிப்பாட்டினால், உஷ்ணத்தைக் கிளப்பிவிடும். நாட்டு மாடுகள் அதிக வெயிலையும் தாக்குப்பிடித்து வளரும் என்பதால், சில விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் குளிப்பாட்டுகிறார்கள். தினமும் குளிப்பாட்டினால்தான் உடல் உஷ்ணம் அதிகமாகாமல் தவிர்க்கலாம். நாட்டு மாடுகளாக இருந்தாலும்கூட, மேய்ச்சலிலும் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும். வெயில் வருவதற்கு முன்னதாக, காலை 10 மணிக்குள் மேய்ச்சலை முடித்துவிட வேண்டும். மாலையில் வெயில் மறைந்த பிறகு மீண்டும் மேய்ச்சலுக்கு மாடுகளை அனுப்பலாம். கோடைக்காலத்தில் மாடுகளுக்கு தினமும் ஐந்து வேளை தண்ணீர் வைக்க வேண்டும். இரவு 8 மணியளவில் அவற்றுக்கு தாகம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் அவசியம் தண்ணீர் கொடுக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் மாட்டுக்கொட்டகையில் தீவனத்தொட்டி மட்டுமல்லாமல், மாடுகள் எளிதாகத் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற வகையில் தனியாகத் தொட்டி அமைத்து நிரந்தரமாகத் தண்ணீர் வைக்கலாம். அது குளிர்ந்த நீராக இருக்க வேண்டும். அவ்வப்போது அதை மாற்றி, புதிதாகத் தண்ணீர் வைக்க வேண்டும். பொதுவாகவே கால்நடைகளுக்குக் கோடைக்காலத்தில் கூடுதல் அயர்ச்சி ஏற்படும். அவற்றின் உடலில் நேரடியாக வெயில் தாக்காமலிருந்தாலே வெப்பத் தாக்குதல் இல்லை என்ற தவறான புரிந்துணர்வு இருக்கிறது. அவை இருக்கக்கூடிய இடத்தில் மட்டும் நிழல் இருந்தால் போதாது. குறைந்தபட்சம் 25 அடி சுற்றளவுக்கு நிழல் பந்தல் இருந்தால்தான் கால்நடைகளை வெப்பம் தாக்காமல் பாதுகாக்க முடியும். நாட்டு மாடுகளுக்கும் இந்த அளவுக்கான நிழல் அவசியம். நன்கு நிழல் தரக்கூடிய மரங்கள் இருப்பதும் அவசியம்.

இவற்றையெல்லாம் முறையாகக் கடைப்பிடித்தாலே கோடைக்காலப் பாதிப்புகள் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். சில மாடுகளுக்கு இயல்பாகவே உடலில் உஷ்ணத்தன்மை கூடுதலாக இருக்கும். கோடைக்காலத்தில் வெப்பம் அதிகரித்து, காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதை ஆரம்பத்திலேயே கண்டுணர்ந்து, சிகிச்சை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் காய்ச்சல் தீவிரமாகி, மஞ்சள்காமாலையில் கொண்டுபோய் விட்டுவிடும்.

அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் தலா 10 கிராம் மஞ்சள்தூள், மிளகு, வெந்தயம், சீரகம், இரண்டு பல் பூண்டு, தலா ஒரு கைப்பிடி வேப்பிலை, துளசி, ஐந்து வெற்றிலை, நாட்டுச்சர்க்கரை 100 கிராம், ஒரு கைப்பிடி திருநீற்றுப்பச்சிலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து மருந்து தயார் செய்ய வேண்டும். இது ஒரு வேளைக்கு ஒரு மாட்டுக்கான அளவு. தினமும் இரண்டு வேளை வீதம் மூன்று நாள்களுக்குக் கொடுத்தால், படிப்படியாகக் காய்ச்சல் குறைந்து குணமாகிவிடும்.

‘‘மாடுகளின் உடல் உஷ்ணத்தைக் குறைக்க எளிய வழி வெந்தயத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, மாவாக அரைத்து, ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி வீதம் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.’’

கோடைக்காலத்தில் மாடுகளை மடி அம்மை நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் வந்தால் மாடுகளின் மடியில் கொப்புளங்கள் உருவாகி தொந்தரவு கொடுக்கும். இதை குணப்படுத்த ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், பூண்டு இரண்டு பல், தலா ஒரு கைப்பிடி துளசி, வேப்பிலை, திருநீற்றுப்பச்சிலை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்து, வெண்ணெயில் குழைத்து, மடியில் தடவ வேண்டும். இதை ஒரு மாட்டுக்கு மூன்று வேளை வீதம் பிரித்துத் தடவ வேண்டும். இதுபோல் மூன்று நாள்களுக்குத் தடவ வேண்டும். ஆடுகளுக்கு அம்மைநோய் வந்தால், கொப்புளங்களில் இதைத் தடவலாம்.

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் வராமல் தடுக்க ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கீழாநெல்லி ஆகியவற்றை இடித்துத் தூளாக்கி தனியாகவோ அல்லது அரிசிக் குருணையோடு கலந்தோ 10 கோழிகளுக்குக் கொடுக்கலாம். இதுபோல் மூன்று முதல் ஐந்து நாள்களுக்குக் கொடுத்தால் வெள்ளைக் கழிச்சல் நோய் வராமல் தடுக்கலாம்” என்று சொன்னவர், மேலும் சில ஆலோசனைகளை வழங்கினார்.

கால்நடை
கால்நடை

“மாடுகளின் உடல் உஷ்ணத்தைக் குறைக்க எளிய வழி வெந்தயத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, மாவாக அரைத்து, ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி வீதம் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி வீதம் பெருநெல்லிக்காயை இடித்துத் தூளாக்கி, தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.பெருநெல்லிக்காய் கிடைக்கவில்லை யென்றால், கடைகளில் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய நெல்லி வற்றலை வாங்கி, ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி வீதம் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊறவைத்தால் நன்கு பொதபொதவெனப் பெருகிவரும். இதைத் தீவனத்தோடு கலந்து கொடுக்கலாம்.

ஒரு மாட்டுக்கு தினமும் ஒரு கட்டு வீதம் அகத்திக் கீரை கொடுக்க வேண்டும். இவற்றோடு தினமும் இரண்டு மொந்தன் வாழைப்பழம் கொடுக்கலாம். இதனால் மாடுகளின் உடலில் குளிர்ச்சியான மாற்றங்கள் உருவாகும். கோடைக்காலம் முடியும் வரை தினமும் இவற்றைக் கொடுக்கலாம்.’’

தொடர்புக்கு, மருத்துவர் புண்ணியமூர்த்தி, செல்போன்: 98424 55833

காவிரி டெல்டாவில் ஹெச்.எஃப் ரக மாடுகள் வேண்டாம்!

மாடு
மாடு

ஹெச்.எஃப் ரக மாடுகள் 4 முதல் 21 டிகிரி வரைதான் வெப்பநிலையைத் தாங்கும். தமிழ்நாட்டில் மலைப்பிரதேச பகுதிகளில் மட்டும்தான் இந்த வெப்பநிலை இருக்கும். சமவெளிப் பகுதிகளில் குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் இங்கு ஹெச்.எஃப் ரக மாடுகள் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார் மருத்துவர் புண்ணியமூர்த்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism