Published:Updated:

ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன 1 கிலோ தேயிலைத் தூள்; அப்படியென்ன ஸ்பெஷல்?

Tea Plantations (Representational Image) ( Photo by AMIT RANJAN on Unsplash )

இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளாலேயே அரைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு கைவினைத் தேயிலை என்பதால் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன 1 கிலோ தேயிலைத் தூள்; அப்படியென்ன ஸ்பெஷல்?

இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளாலேயே அரைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு கைவினைத் தேயிலை என்பதால் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

Published:Updated:
Tea Plantations (Representational Image) ( Photo by AMIT RANJAN on Unsplash )

அசாமிலுள்ள கவுகாத்தி தேயிலை ஏல மையம் (GTAC) உலகின் பரபரப்பான தேயிலை வர்த்தக நிலையங்களில் ஒன்றாகும். இங்கு பிப்ரவரி 14-ம் தேதியன்று தேயிலை ஏலம் நடைபெற்றது. அதில் 1 கிலோ தேயிலைத்தூள் 99,999 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

அசாமின் திப்ரூகர் மாவட்டத்திலிருந்து தயாரிக்கப்பட்ட நஹோர்ச்சுக்பரி `கோல்டன் பேர்ல்' (Golden Pearl) என்ற தேயிலைதான், இந்தளவுக்கு விலை போயுள்ளது. இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளாலேயே அரைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு கைவினைத் தேயிலை என்பதால் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

Tea (Representational Image)
Tea (Representational Image)
Photo by Nishaan ahmed on Unsplash

மேலும் அசாம் மாநிலம், உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி செய்யும் பகுதி. இந்தியாவின் இந்தப் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருக்கும். பருவமழைக் காலங்களில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 250 மி.மீ முதல் 300 மி.மீ வரை இங்கு மழை பொழியும். பகல் நேரத்தின்போது இப்பகுதியின் வெப்பநிலை சுமார் 36°C (96.8°F) வரை உயரும். இந்த காலநிலை அசாம் தேயிலைக்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் அசாமில் விளையும் தேயிலைத் தூளுக்கு, சர்வதேச அளவில் புகழ் இருக்கிறது. நேற்று ஏலத்தில் கிடைத்துள்ள விலையானது, நம் நாட்டில் விற்கப்பட்ட தேயிலைக்கு கிடைத்த அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது.

Tea (Representational Image)
Tea (Representational Image)

கவுகாத்தியில் அமைந்துள்ள தேயிலை ஏல மையத்தின் முதன்மை ஏலப் பொருள் அசாம் தேயிலை. இந்தத் தேயிலை ஏல நிறுவனம் 1970-ல் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.