Published:Updated:

குறைந்த செலவில் மாடித்தோட்டம் வைக்க வேண்டுமா? - வழிகாட்டும் விகடனின் ஆன்லைன் பயிற்சி

மாடித்தோட்டப் பயிற்சி
மாடித்தோட்டப் பயிற்சி

``சிலர், `பல ஆயிரங்கள் செலவழித்து மாடித்தோட்டம் வைத்தேன். ஆனால் சரியான விளைச்சல் இல்லை, வளர்ச்சி இல்லை' என்பார்கள். முதலில் தோட்டம் என்பது நம் தேவைக்காக நாமே அமைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும்".

`ஆடிப் பட்டம் தேடிப் பார்த்து விதைக்கணும் கண்ணையா!'

விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல நம் வீட்டுத் தோட்டத்துக்கும் மாடித்தோட்டத்துக்கும் ஆடிப்பட்டம் முக்கியமானது. இந்தப் பருவத்தில் பலரும் புதிதாக தோட்டம் அமைப்பார்கள். மாடித்தோட்டம் ஆரம்பிப்பதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கும்.

கம்பிவலைக்குள் மாடித்தோட்டம்
கம்பிவலைக்குள் மாடித்தோட்டம்

வீட்டுத்தோட்டம் அமைக்க பல்லாயிரம் ருபாய் செல்வாகும் என்பது பலரின் கருத்து. இதுபற்றி பேசும் மாடித்தோட்ட விவசாயி ஶ்ரீபிரியா கணேஷ், ``வீட்டுத் தோட்டம் அமைக்க இடம் இல்லாதவர்கள் மாடித்தோட்டம் அமைக்கலாம். சிலர், `பல ஆயிரங்கள் செலவழித்து மாடித்தோட்டம் வைத்தேன். ஆனால் சரியான விளைச்சல் இல்லை, வளர்ச்சி இல்லை' என்பார்கள். முதலில் தோட்டம் என்பது நம் தேவைக்காக நாமே அமைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும். மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரே நேரத்தில் 50 செடிகள் வைத்துவிட வேண்டும் என்பது அவசியம் இல்லை.

தக்காளி, கறிவேப்பிலை, பாகற்காய் போன்று எளிதில் விளையக்கூடிய செடிகளை முதலில் வளர்த்துப் பார்க்கலாம். செடி என்பது குழந்தை போன்றது. தண்ணீர் ஊற்றுவது தொடங்கி, உரம் வைப்பது வரை அனைத்திலும் தெளிவு இருக்க வேண்டும். அதிகமாகக் கொடுத்தாலும், குறைவாக கொடுத்தாலும் ஆபத்துதான்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்
மாடியில் பழக்காடு; அசத்தும் மாடித்தோட்டம்!

முதலில் குறைந்த செடிகளைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம். அந்த அனுபவங்களைக்கொண்டு செடிகளின் எண்ணிக்கையையும் வகைகளையும் அதிகரிக்கலாம். தோட்டம் அமைப்பதில் மண்கலவை தொடங்கி, உரங்கள் பயன்படுத்துவது வரை அனைத்திலும் கவனம் தேவை. செடிகளை அழகான தொட்டிகளில்தான் வளர்க்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உடைந்த குடம், வாளி என எதில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். அதில் தேவையில்லாத தண்ணீர் வெளியேற சிறுதுளை இருப்பதை மட்டும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

மண் கலவை, விதை நேர்த்தி, இயற்கை உரங்கள் என அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டுக் கழிவுகளையே உரமாகத் தயாரிக்கலாம். செடிகள் வளர்ப்பதில் முழுமையான தெளிவு கிடைத்துவிட்டால் வீட்டுக் தேவைக்கான காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அனைத்து வகையான தாவரங்களும் உங்கள் வீட்டு மாடியில் செழித்து வளரும்" என்கிறார்.

மாடித்தோட்டப் பயிற்சி
மாடித்தோட்டப் பயிற்சி

அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் சார்பில் ஆடிப்பட்டத்தில் உங்கள் மாடித்தோட்டத்தில் விதைகளை நடவு செய்வது தொடங்கி, செடிகளைப் பராமரித்து, கை நிறைய விளைச்சல் எடுப்பது எப்படி என்பது வரை விரிவான ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. ஜூலை 17ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 3 முதல் 4 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.300.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3xfGlkf

அடுத்த கட்டுரைக்கு