Published:Updated:

மாடித் தோட்டத்தில் பழ மரங்கள்; அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

மாடித் தோட்டத்தில் பழ மரங்கள்

மாடித்தோட்ட விவசாயத்தில் செடிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றக் கூடாது. செடிகள் தனக்குத் தேவையான அளவு நீரை உறிஞ்சிக்கொண்டு உபரி நீரை வெளியேற்ற பைகளின் அடியில் வடிகால் துளைகள் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் மழை பெய்து முடித்த பின் இரண்டு நாள்களுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.

மாடித் தோட்டத்தில் பழ மரங்கள்; அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

மாடித்தோட்ட விவசாயத்தில் செடிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றக் கூடாது. செடிகள் தனக்குத் தேவையான அளவு நீரை உறிஞ்சிக்கொண்டு உபரி நீரை வெளியேற்ற பைகளின் அடியில் வடிகால் துளைகள் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் மழை பெய்து முடித்த பின் இரண்டு நாள்களுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.

Published:Updated:
மாடித் தோட்டத்தில் பழ மரங்கள்

அரசுப் பள்ளி ஆசிரியரான சுமிதா பாலகிருஷ்ணன் சென்னை பள்ளிக்கரணையில் பல ஆண்டுகளாக தனது மாடியில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். குறிப்பாக, மாடித்தோட்டத்தில் பழ மரங்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார். செம்பருத்தி, அன்னாசி, ரோஜா, வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கை, மிளகாய்ச் செடி, செங்காம்பு கருவேப்பிலை, டிராகன் ஃப்ரூட், சப்போட்டா, வாழை, கொடிக்காய், கொய்யா, கீரை வகைகள், கத்திரிக்காய், அடுக்கு மல்லி, தக்காளி, மஞ்சள் எனப் பல்வேறு பூ, காய், பழ மர வகைகளை தனது மாடித் தோட்டத்தில் பயிரிட்டுள்ளார்.

சுமிதா பாலகிருஷ்ணன்
சுமிதா பாலகிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவருடைய அனுபவங்களைக் கேட்டோம்.

தோட்டம் என்பது வெறும் அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. நம்முடைய வீட்டின் சொந்த காய்கறி தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே எல்லாரும் தோட்டம் அமைக்க வேண்டும். நஞ்சில்லாத உணவை உட்கொள்வது எவ்வளவு ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை மக்கள் உணர வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிறைய பேர் மாடியில் தோட்டம் அமைக்க மிகவும் யோசனை செய்வார்கள். ஏனெனில் தண்ணீர் மாடியில் தேங்கி வீட்டின் கூரை சேதமாகிவிடும் என்ற பயம் இருக்கும். அதற்காக நாங்கள் எடை குறைவாக உள்ள சிமென்ட் கற்களை வாங்கி அதன் மேல் கடப்பா கல்லை வைத்து, சிறு மேடை உருவாக்கி , அதன் மீது பைகளில் செடிகளை வைத்தோம். எங்கள் மாடித் தோட்டத்தில் எந்தச் செடிகளும் தரையில் இல்லை.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

மாடித்தோட்ட விவசாயத்தில் செடிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றக் கூடாது. செடிகள் தனக்குத் தேவையான அளவு நீரை உறிஞ்சிக்கொண்டு உபரி நீரை வெளியேற்ற பைகளின் அடியில் வடிகால் துளைகள் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் மழை பெய்து முடித்த பின் இரண்டு நாள்களுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செடிகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது தெரியவில்லை எனில், செடி வைத்துள்ள பையில் உங்கள் கையை விட்டு அதில் உள்ள ஈரப்பதத்தை அறிந்தே தெரிந்து கொள்ளலாம். மேலும் தோட்டத்துக்கு தேவையான உரத்தையும் எங்கள் வீட்டில் சேகரமாகும் காய்கறி, பழக்கழிவுகளை வைத்தே தயார் செய்கிறோம். அரிசி, காய்கறி கழுவின தண்ணீரையும், சாதம் வடிக்கும் கஞ்சியையும் வீணாக்காமல் அதைச் சேர்த்து வைத்து தெளிப்பு உரமாக செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.

கொய்யா
கொய்யா

ஒரு டம்ளரில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூளைத் தூவி அதில் விதையை ஊறவைத்துப் பின் விதைத்தால் செடி நன்றாக வளரும். சோப்புக்காயை ஒரு லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து அந்த நுரை உள்ள தண்ணீரில் 5 மில்லி வேப்பெண்ணெய் சேர்த்து நன்றாகக் குலுக்கி அதைச் செடிகளுக்குத் தெளித்தால் மாவுப் பூச்சிகளை எளிதாக விரட்டலாம்" என்றார்.

மாடித் தோட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து 'மொட்டை மாடியில் பழ மரங்கள் வளர்க்கலாமா?' என்ற ஆன்லைன் பயிற்சியை ஜூலை 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 முதல் 5 மணி வரை நடத்தவுள்ளது. மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார். தனது மாடித்தோட்டத்திலிருந்து இந்தப் பயிற்சியை சுமிதா பாலகிருஷ்ணன் வழங்கவிருக்கிறார்.

மொட்டை மாடியில் பழ மரங்கள் அமைக்கலாமா?
மொட்டை மாடியில் பழ மரங்கள் அமைக்கலாமா?

மாடியில் பழ மரங்கள் வளர்க்கும் வழிமுறைகள், மாடியில் பழ மரங்கள் வளர்ப்பதால் வீடு சேதமாவதைத் தடுப்பது எப்படி, வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது எப்படி, பூச்சித் தொந்தரவுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இது தவிர நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கு விடையளிப்பார். பயிற்சிக்கான கட்டணம் ரூ.300. நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism