Election bannerElection banner
Published:Updated:

`வீட்டுத்தோட்டம் அமைப்பது மிக சுலபம்!' - வழிகாட்டும் அவள் விகடன், பசுமை விகடனின் பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பு
பயிற்சி வகுப்பு

கொட்டாங்குச்சியில் கூட செடி வளர்க்கலாம். தோட்டத்துக்காக அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. உரம் தொடங்கி, பூச்சிக்கொல்லிகள் இயற்கை ஊக்கிகள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்தே நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

நம் முன்னோர்களுக்கு இல்லாத பெரும் நோய்கள் நம் தலைமுறையினருக்குப் பரவ, நம் உணவுமுறைகளும் முக்கிய காரணம். ரசாயனங்கள் நம் உணவை நஞ்சாக்குகின்றன. இதிலிருந்து தப்பிக்க பெரும்பாலான மக்கள் இப்போது வீட்டுத்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

வீட்டுத் தோட்டம்
வீட்டுத் தோட்டம்

பலருக்கு வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் இருந்தாலும்கூட அவற்றைச் சரியாக அமைப்பதிலோ, குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப அமைப்பதிலோ மக்களுக்குத் தெளிவு இல்லை. இது குறித்த விளக்கத்தை மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

"வீட்டுத்தோட்டம் அமைக்க வேண்டும் என்றவுடன் அதற்கு பெரிய அளவில் இடம் அல்லது மாடி வேண்டும், அதிக செலவாகும் என்பதெல்லாம் மக்களின் எண்ணம். உண்மையில் ஒரு கொட்டாங்குச்சியில்கூட செடி வளர்க்கலாம். தோட்டத்துக்காக அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. உரம் தொடங்கி, பூச்சிக்கொல்லிகள், இயற்கை ஊக்கிகள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்தே நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும். அதே போன்று நம் வீட்டிலிருக்கும் இடத்திற்கு ஏற்ப செடிகளைத் திட்டமிட்டு வளத்தால் ஒரு குடும்பத்துக்குத் தேவையான ஊட்டசத்துள்ள பெரும்பாலான காய்கறிகளையும், கீரைகளையும் வீட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

பயிற்சி வகுப்பு
பயிற்சி வகுப்பு

செடியை எதில் வளர்த்தாலும், செம்மண், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள் வேப்பம் பிண்ணாக்கு போன்றவற்றிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் பொருள்களைச் சேர்த்து அடியுரமாகக் கலந்து கொடுக்க வேண்டும். இதை மண் கலவை என்று சொல்வார்கள். மண்கலவை தயாரானதும் உடனே விதைகளை விதைத்துவிடக் கூடாது. மூன்று நாள்களுக்குப் பிறகு நாம் தயார்செய்து வைத்திருக்கும் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி வேலை செய்ய ஆரம்பித்த பிறகே எந்த ஒரு விதையையும் நடவு செய்ய வேண்டும்.

காய்கறிக் கழிவுகள், அரிசி கழுவிய தண்ணீர் போன்றவற்றையே இடுபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பூச்சி விரட்டிக்கு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் தொடங்கி வீட்டிலேயே பலவிதமான பூச்சிவிரட்டிகளைத் தயார்செய்ய முடியும். பொதுவாகக் கோடை தொடங்கும் மார்ச் மாதம் புதிதாகத் தோட்டம் அமைக்க ஏற்ற மாதம் இல்லை. ஆனால், இது தயார் செய்வதற்கான மாதம்" என்கிறார்.

மண் தொடங்கி, விதை வரை ஒவ்வொன்றையும் தோட்டம் அமைக்க எப்படித் தயார் செய்யலாம், கோடையில் வீட்டுச் செடிகளைப் பாதுகாப்பது எப்படி என்பவை பற்றிய விரிவான ஆன்லைன் பயிற்சி வகுப்பு, அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் சார்பாக மார்ச் 27-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது.

1,000 ரூபாய் போதும்... அழகாய் அமைக்கலாம் வீட்டுத் தோட்டம்- கம்ப்ளீட் கைடு!

நிகழ்ச்சியில் மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் கலந்துகொண்டு வீட்டுத்தோட்டம் பற்றி தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளார். கட்டணமில்லாத இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
https://bit.ly/38WKCPg

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு