Published:Updated:

மொட்டை மாடியில் தேனீ வளர்ப்பு... திகட்டாத வருமானம்... அவள் விகடனின் வழிகாட்டல் பயிற்சி!

ஜோஸ்பின்
ஜோஸ்பின்

``நிலத்திலும் மொட்டை மாடியிலும்கூட தேனீ வளர்ப்பை வெற்றிகரமா செய்ய முடியும்" என்று நம்பிக்கையூட்டுகிறார் ஜோஸ்பின்.

குடும்ப வாழ்க்கையில் அடுத்தடுத்து பெரிய இழப்புகளை எதிர்கொண்ட ஜோஸ்பினின் வாழ்க்கையை வசந்தமாக்கியது தேனீ வளர்ப்பு. அதில் கிடைத்த இனிப்பான தொழில் வளர்ச்சியையும் மற்றவர்களுக்கும் பரவச் செய்து மகிழ்ச்சியடைகிறார்.

மதுரை மாவட்டம் கடச்சனேந்தலைச் சேர்ந்தவர், தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆசைப்படுவோருக்கு வழிகாட்டிவருகிறார்.

தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு

``மலருக்கும் மலருக்கும் மணம் முடிக்கும் வேலையைத் திறம்படச் செய்பவை தேனீக்கள்!" - தேனீ வளர்ப்பு குறித்து ஜோஸ்பினிடம் பேசினால், இந்த வரிகளைச் சொல்லித்தான் முதலில் நம்பிக்கையூட்டுவார். இவரது பயிற்சி வகுப்புகள் முழுக்கவே இதுபோன்ற உற்சாக வார்த்தைகள் தித்திக்கும்.

``கல்யாணத்துக்குப் பிறகு குடும்பத்துல வறுமை. சுயதொழில் பண்ற முடிவோடு, 10 தேனீப் பெட்டிகளோடு இந்தத் தொழிலை ஆரம்பிச்சேன். தொடக்கத்துல சரியா தேன் கிடைக்கல. சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெஞ்சேன்.

இந்தத் தொழில்ல படிப்படியா வெற்றி கிடைச்சது. உடல்நிலை சரியில்லாம கணவரும் மகளும் அடுத்தடுத்து இறக்க, என் உலகமே இருண்டுடுச்சு. தொழிலைச் சரியா கவனிக்க முடியாம பெரிய நஷ்டம். என்னை நம்பியிருக்கிற மகனுக்காக வாழ்க்கை மீதான பிடிப்பை அதிகப்படுத்திகிட்டேன்.

ஜோஸ்பின்
ஜோஸ்பின்

பேங்க்ல லோன் வாங்கினேன். பல மாவட்டங்கள்ல விவசாய நிலங்கள்ல தேனீப் பெட்டிகள் வெச்சேன். நாவல் தோட்டங்கள்ல தேனீ வளர்ப்பை வெற்றிகரமா செயல்படுத்திக்காட்டினேன். பலரும் ஆச்சர்யப்பட்டாங்க. நம்மாழ்வார் ஐயாவின் பயிற்சிக் கூட்டத்துல கலந்துகிட்டது பெரிய ஊக்கம் கொடுத்துச்சு. படிப்படியா விற்பனை வாய்ப்புகளும் அதிகரிச்சது" என்பவருக்கு தேனீ வளர்ப்பே அடையாளமானது.

மலைத்தேன், கொசுத்தேன், கொம்புத்தேன் தவிர, நாவல், சூரிய காந்தி, வேப்பம் பூ, முருங்கைப் பூ உள்ளிட்ட பல வகையான தேன்களைச் சேகரித்து விற்பனை செய்கிறார். தேனில் மதிப்புக்கூட்டப்பட்ட பலவிதமான உணவுப்பொருள்களையும் விற்பனை செய்கிறார். `விபிஸ் இயற்கை தேனீப் பண்ணை' என்ற பெயரில் இயங்கும் தனது நிறுவனத்தின் மூலம் தேன் மற்றும் தேனீ வளர்ப்புக்கான பெட்டிகளை விற்பனை செய்கிறார். பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுப்பவர், இந்தத் தொழிலில் ஆண்டுக்குச் சில கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டுகிறார்.

பயிற்சி வகுப்பு
பயிற்சி வகுப்பு

``தேனீ வளர்ப்புப் பற்றி மாணவர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறேன். இது தொடர்பா மாநிலம் முழுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தறேன். தேனீ வளர்ப்பால சுற்றுவட்டாரத்துல ரெண்டு கிலோ மீட்டருக்கு விவசாயம் சிறப்பா நடக்கும். குழந்தைகள் முதல் பெரியவங்க வரை எல்லோருக்கும் அருமருந்தா பயன்படுற தேனை நம்ம வீட்டுலயே எளிய முறையில் சேகரிக்கலாம். செலவுகளும் பெரிசா தேவைப்படாது. நிலத்திலும் மொட்டைமாடியிலும்கூட தேனீ வளர்ப்பை வெற்றிகரமா செய்ய முடியும்" என்று நம்பிக்கையூட்டி முடிக்கிறார் ஜோஸ்பின்.

தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு நீங்களும் வெற்றி பெற நினைக்கிறீர்களா?

அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் `தேனீ வளர்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி' வகுப்பில் கலந்துகொள்ளுங்கள். தேனீ வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் வழிமுறைகள், நிலத்திலும் மொட்டைமாடியிலும் எளிய முறையில் தேனீ வளர்ப்பை மேற்கொள்ளும் முறைகள், பலவிதமான தேனீ வளர்ப்பு முறைகள், தேனீக்களுக்குப் பிடித்த பூச்செடிகளை வீட்டிலேயே வளர்ப்பது, எளிமையான விற்பனை வாய்ப்புகள் உட்பட இந்தத் தொழிலுக்கான அனைத்து தகவல்கள் குறித்தும் ஜோஸ்பின் வழிகாட்ட இருக்கிறார்.

ஜனவரி 23-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை பயிற்சி நடைபெறும்.

பயிற்சிக்கான கட்டணம் ரூ.100.

ஆன்லைனில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய, இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு