Published:Updated:

விவசாயம் செய்ய தடை விதிப்பதா? - கொந்தளிக்கும் கிராமம்!

விவசாயம் செய்ய தடை விதிப்பதா

விவசாயிகள் அங்குள்ள நிலங்களில் விவசாயம் செய்யக் கூடாது என்று வனத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீறி அப்பகுதிக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சென்றால் வனத்துறை ஊழியர்கள் விரட்டி அடித்து வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயம் செய்ய தடை விதிப்பதா? - கொந்தளிக்கும் கிராமம்!

விவசாயிகள் அங்குள்ள நிலங்களில் விவசாயம் செய்யக் கூடாது என்று வனத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீறி அப்பகுதிக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சென்றால் வனத்துறை ஊழியர்கள் விரட்டி அடித்து வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

Published:Updated:
விவசாயம் செய்ய தடை விதிப்பதா

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது காடுவெட்டி கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இன மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வெள்ளமணல் கிராமத்திலுள்ள கொள்ளிடம் ஆற்று புறம்போக்கு நிலத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து வருகின்றனர்‌. மேலும், அந்த இடத்துக்கு பல ஆண்டுகளாக வரி செலுத்தியும் வந்துள்ளனர். காலப்போக்கில் அந்த நிலத்துக்கு வரி வசூல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக  அப்பகுதியிலுள்ள

விவசாயம் செய்ய தடை விதிப்பதா
விவசாயம் செய்ய தடை விதிப்பதா

விவசாயிகள் அங்குள்ள நிலங்களில் விவசாயம் செய்யக் கூடாது என்று வனத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீறி அப்பகுதிக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சென்றால் வனத்துறை ஊழியர்கள் விரட்டி அடித்து வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். அந்த நிலங்கள் தொடர்பாக விவசாயிகளை மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு காலி செய்யுமாறு கூறி பல்வேறு இன்னல்களைக் கொடுத்து வருவதாகவும் விவசாயிகள் சார்பில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் வெள்ளமனூர் கிராமத்துக்கு நேரில் சென்று மக்களையும் நிலப் பகுதியையும் பார்வையிட்டு அவர்கள் பிரச்னை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், ``ஏழை எளிய நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாகப் பயன்படுத்தி வந்த விவசாய நிலத்தில், அவர்களை விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வனத்துறை அதிகாரிகள் விரட்டி அடித்து வருவது கண்டனத்துக்குரியது.  

விவசாயம் செய்ய தடை விதிப்பதா
விவசாயம் செய்ய தடை விதிப்பதா

உடனடியாக அரசு தலையிட்டு அவர்களுக்கு மீண்டும் அந்த நிலங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். இந்த பிரச்னை குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகள் தொடர்ந்து நிலங்களில் பயிர் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுப்போம்" என்றார்.