Published:Updated:

``பத்மஸ்ரீ விருதைவிட உயர்ந்ததாக நினைக்கிறேன்'' சிறந்த விவசாயி விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

சிறந்த விவசாயி விருது பெற்ற நடிகர் ஜெயராம்

இவர் முன்னோர்கள் பாரம்பர்யமாக விவசாயம் செய்து வந்தனர், அதைப் பெருமையாக நினைத்தனர். இவரின் மாமா மலையாட்டூர் ராமகிருஷ்ணன் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை மாட்டுத் தொழுவத்தையொட்டிய அறையில்தான் தங்கியிருந்து படித்தார்.

``பத்மஸ்ரீ விருதைவிட உயர்ந்ததாக நினைக்கிறேன்'' சிறந்த விவசாயி விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

இவர் முன்னோர்கள் பாரம்பர்யமாக விவசாயம் செய்து வந்தனர், அதைப் பெருமையாக நினைத்தனர். இவரின் மாமா மலையாட்டூர் ராமகிருஷ்ணன் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை மாட்டுத் தொழுவத்தையொட்டிய அறையில்தான் தங்கியிருந்து படித்தார்.

Published:Updated:
சிறந்த விவசாயி விருது பெற்ற நடிகர் ஜெயராம்

1980 – 1990-களில் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ஜெயராம். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் தனக்கேற்ற ரோலில் நடித்து வருகிறார்.

நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம்

சிறுவயதில் இருந்தே விவசாயத்தை அதிகம் நேசித்தவர் நடிகர் ஜெயராம். இவரின் முன்னோர்கள் விவசாயிகளாக இருந்ததால் அவரும் ஒரு சிறந்த விவசாயியாக இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர்.

நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம்

12 ஆண்டுகளுக்கு முன்பு எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் ஆனந்த் ஃபார்ம்ஸ் என்ற பால் பண்ணையை 5 மாடுகளுடன் தொடங்கினார். அதை முன்மாதிரி பண்ணையாக செயல்படுத்தியும் காட்டினார். இப்போது 8 ஏக்கர் நிலத்தில் 60 -க்கும் மேற்பட்ட பசுக்களை தன் பண்ணையில் வளர்த்து வருகிறார். இவரது விவசாய பணிகளைப் பாராட்டி கேரள மாநில அரசு கௌரவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவனந்தபுரத்தில் கேரள மாநில விவசாய துறை சார்பில் நடைபெற்ற விவசாய தின விழாவில், நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி என்ற விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கி கௌரவித்துள்ளார்.

நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம்

இவரின் முன்னோர்கள் பாரம்பர்யமாக விவசாயம் செய்து வந்தனர். அதைப் பெருமையாக நினைத்தனர். இவரின் மாமா மலையாட்டூர் ராமகிருஷ்ணன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை மாட்டுத் தொழுவத்தையொட்டிய அறையில்தான் தங்கியிருந்து படித்தார். ஜெயராமும் விரும்பித் தங்கும் இடமாக அந்த அறை இருந்தது.

``பண்ணையைத் தூய்மையா வெச்சிப்பேன். அதேநேரம் மாடுகளுக்கு அதீத கவனிப்பு கொடுத்து வந்தேன். இதனாலயே என் பண்ணை முன் மாதிரியாக விளங்கியது" என்று தெரிவித்துள்ளார். விவசாயத்திலும் பண்ணையிலும் இவருக்கு நெருக்கமான பந்தம் இருந்தது. அதனால்தான் விருது பெற்ற நடிகர் ஜெயராம், ``சிறந்த விவசாயி விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதை பத்மஸ்ரீ விருதைவிட உயர்ந்ததாக நினைக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.