Published:Updated:

பயிற்சி: வெற்றிலை, மிளகு, உப்பு கால்நடை நோய் தீர்க்கும் அருமருந்து!

ந.புண்ணியமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ந.புண்ணியமூர்த்தி

மஞ்சள், சுண்ணாம்பு, சோற்றுக்கற்றாழை மூலம்தான் அதற்குத் தீர்வு கண்டோம்.

பாரம்பர்ய மருத்துவ அறிவோடு விளங்கிய முன்னோர்கள், அஞ்சறைப்பெட்டி பொருள்களையும், சுற்றுப்புறங்களில் கிடைக்கும் மூலிகைகளையும் கொண்டு கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்தார்கள்.காலப்போக்கில் அந்த வழக்கம் கைவிட்டுப் போனது. தற்போது கால்நடைகள் வளர்ப்பவர்கள், இதைக் கையில் எடுத்தால், பல வகைகளிலும் உறுதுணையாக இருக்கும். இதுகுறித்து வழிகாட்டும் விதமாக, பசுமை விகடன், ‘கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம்’ என்ற தலைப்பில் கடந்த ஜூலை 23-ம் தேதி நேரலைப் பயிற்சியை நடத்தியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ந.புண்ணியமூர்த்தி
ந.புண்ணியமூர்த்தி

தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர், பேராசிரியர் ந.புண்ணியமூர்த்தி ஆலோசனைகளை வழங்கினார். “பாரம்பர்ய மூலிகை மருத்துவத்தின் மீது விவசாயிகள் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். எனக்கு ஆங்கில மருத்துவத்தில் 20 ஆண்டுகளும் பாரம்பர்ய மருத்துவத்தில் 20 ஆண்டுகளும் அனுபவம் உண்டு. கால்நடைகளின் கெட்டுப்போன அவயங்களைக் கூட, மூலிகை மருத்துவத்தின் மூலம் மீட்டெடுக்க முடியும். அனைத்து நோய்களையும் இதன் மூலமாகத் தீர்க்க முடியும். ஆனால் பெரும்பாலான விவசாயிகள், தங்களது கால்நடைகளைக் காப்பாற்ற கடைசிக்கட்ட முயற்சியாக மட்டுமே இதற்கு வருகிறார்கள். இது முதல் மருத்துவமாகவும் கடைசி மருத்துவமாகவும் பயன் அளித்து உங்கள் கால்நடைகளைக் கண்டிப்பாக ஆரோக்கியத்துடன் மீட்டெடுக்கும். சளி, காய்ச்சல், கழிச்சல், வயிறு உப்புசம், மடிநோய் போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமல்ல... பெரியம்மை, கோமாரி போன்ற மிகவும் ஆபத்தான நச்சுயிரி நோய்களையும் மூலிகை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது சுயசார்பானது; செலவில்லாதது; யாருடைய உதவியும் தேவையில்லை; முதலுதவியாகவும் கைகொடுக்கிறது. கால்நடைகளுக்குத் தேள், பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்புகள் ஏற்பட்டால், நான் சொல்லப்போகும் இந்த மூன்று பொருள்கள் மூலம் கால்நடைகளுக்கு வரும் பெரும்பாலான பிரச்னைகளைத் தீர்க்கலாம். அதாவது 5 வெற்றிலை, 5 கிராம் மிளகு, 5 கிராம் உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நாக்கில் தடவினால், விஷம் முறிந்துவிடும். எந்த நோய் வந்தாலும், இந்த மூன்று பொருள்களை பயன்படுத்தலாம். மடிநோய்க்குத் தீர்வே இல்லையா என ஆரம்பகாலங்களில் உலக முழுவதும் உள்ள கால்நடைப் பண்ணையாளர்கள் தவித்துப்போனார்கள். மஞ்சள், சுண்ணாம்பு, சோற்றுக்கற்றாழை மூலம்தான் அதற்குத் தீர்வு கண்டோம்.

சமீபகாலமாகப் பெரியம்மை நோய், பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதுவும் நம்முடைய பாரம்பர்ய மருத்துவத்தின் மூலம்தான் குணப்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தவர், சிகிச்சை முறைகள் குறித்துத் தெளிவாக விவரித்தார். வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விரிவாக விடை அளித்தார்.

தொடர்புக்கு, ந.புண்ணியமூர்த்தி

செல்போன்: 98424 55833