Published:Updated:

எலுமிச்சை உஷார்; கான்பூரில் அதிகரிக்கும் எலுமிச்சை திருட்டு..!

எலுமிச்சை

தன்னுடைய மொத்த குடும்பத்தையும் எலுமிச்சைப் பழத் தோட்டத்தில் காவலில் வைத்துள்ளார், பங்கஜ் நிஷாத் என்ற விவசாயி.

எலுமிச்சை உஷார்; கான்பூரில் அதிகரிக்கும் எலுமிச்சை திருட்டு..!

தன்னுடைய மொத்த குடும்பத்தையும் எலுமிச்சைப் பழத் தோட்டத்தில் காவலில் வைத்துள்ளார், பங்கஜ் நிஷாத் என்ற விவசாயி.

Published:Updated:
எலுமிச்சை

வட மாநிலங்களில் காய்கறிகளின் விலை குறிப்பாக எலுமிச்சைப் பழத்தின் விலை அதிகரித்து வருவதால், எலுமிச்சைப் பழங்களை திருடும் கூட்டமும் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திருட்டுக்கு பயந்தே மக்கள் தங்கள் எலுமிச்சைத் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ள லத்தி ஏந்திய காவலாளிகளைப் பாதுகாப்புக்கு வைத்துள்ளனர். சிலர் காவல் நிலையத்தில் எலுமிச்சைப் பழங்கள் திருடப்படுவதாகப் புகார் அளித்தும் உள்ளனர். திங்கள்கிழமை, ஷாஜகான்பூரில் உள்ள தில்கார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிடங்கில் 60 கிலோ எலுமிச்சையைத் திருடி தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

எலுமிச்சை
எலுமிச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கான்பூர், சௌபேபூர், பித்தூர், பரியார், கத்ரி மற்றும் மந்தனா பகுதிகளில் எலுமிச்சை அதிகம் விளைகிறது. இங்கே எலுமிச்சை கிலோவுக்கு 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாள்களில் மட்டும் கான்பூரைச் சுற்றியுள்ள பழத்தோட்டங்களிலிருந்து சுமார் 15,000 கிலோ எலுமிச்சைப் பழங்கள் திருடப்பட்டுள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர் திருட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவரான ரமேஷ் பால், 24 மணி நேரமும் தோட்டத்தைப் பாதுகாக்க சுழற்சி முறையில் பாதுகாவலர்களை நியமித்து உள்ளார். இதற்காக ஒரு காவலருக்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 800 ரூபாய் வரை கொடுத்துப் பாதுகாக்கிறார்.

இவருடைய நிலை இப்படியென்றால் பங்கஜ் நிஷாத் என்ற விவசாயி தன்னுடைய மொத்த குடும்பத்தையும், எலுமிச்சைப் பழத் தோட்டத்தில் காவலில் வைத்துள்ளார். காரணம் தினமும் 2,000 எலுமிச்சைப் பழங்கள் இவருடைய தோட்டத்திலிருந்து களவாடப்பட்டிருக்கின்றன. எலுமிச்சைப் பழங்கள் திருட்டு குறித்து பித்தூர் காவல் நிலையத்திலும் விவசாயிகள் புகா அளித்துள்ளனர்.

 எலுமிச்சை
எலுமிச்சை

இது குறித்து பித்தூர் காவல் நிலைய அதிகாரி அமர்நாத் விஸ்வகர்மா கூறுகையில், ``சமீபத்தில் இரண்டு எலுமிச்சை விவசாயிகள் தங்கள் தோட்டங்களில், தொடர்ந்து மூன்று நாள்களாக எலுமிச்சைப் பழங்கள் திருடு போயுள்ளதாகப் புகார் அளித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism