Published:Updated:

பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை எப்படி இருக்கும்? பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

வாழைப்பழம்

2022 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை, தரமான பூவன் வாழையின் பண்ணை விலை ரூ.17 முதல் 18, கற்பூரவள்ளி ரூ.20 முதல் 22, நேந்திரன் விலை ரூ. 38 முதல் 40 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை எப்படி இருக்கும்? பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

2022 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை, தரமான பூவன் வாழையின் பண்ணை விலை ரூ.17 முதல் 18, கற்பூரவள்ளி ரூ.20 முதல் 22, நேந்திரன் விலை ரூ. 38 முதல் 40 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
வாழைப்பழம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், வாழைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் வாழையை விற்பனை செய்ய இந்த முன்னறிவிப்பு வழிகாட்டுகிறது.

2021-22-ம் ஆண்டு இந்தியாவில், வாழை 9.59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 351.31 லட்சம் டன்கள் உற்பத்தியாகியுள்ளது. இந்தியாவில் ஆந்திர பிரதேசம் (11%), மகாராஷ்டிரா (13%), கர்நாடகா (11%), குஜராத் (11%), தமிழ்நாடு (11%) மற்றும் உத்தரப்பிரதேசம் (11%) ஆகியவை வாழையை பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும்.

வாழை சாகுபடி
வாழை சாகுபடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தில் பொதுவாக தேனி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங் களில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் ஆகிய ரகங்கள் அதிக அளவு பயிரிடப்படுகின்றன. இவற்றில், பூவன் மற்றும் கற்பூரவள்ளி ஆகியவை இலை நோக்கத்துக்காகவும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

கோயம்புத்தூர் சந்தைக்கு புதுகோட்டை, திருவையாறு மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்திய மங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும், நேந்திரன் மேட்டுப்பாளையத்திலிருந்தும் வருகின்றன. மேலும், கேரளாவிலிருந்து வரும் நேந்திரன் வரத்தானது ஆகஸ்ட், 2022 முதல் வரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக விலை முன்னறிவிப்புக் குழு, கடந்த 17 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தைகளில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

நேந்திரம் வாழை
நேந்திரம் வாழை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், 2022 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை, தரமான பூவன் வாழையின் பண்ணை விலை ரூ.17 முதல் 18 வரை, கற்பூரவள்ளி ரூ.20 முதல் 22 வரை, நேந்திரன் விலை ரூ. 38 முதல் 40 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது.