சிறுதானியம்

இந்தியச் சிறுதானிய ஆராய்ச்சிக் கழகத்தில் சிறுதானியங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், பணிகள் குறித்து இந்தப் பகுதியில் பார்த்துவருகிறோம்.

இந்த இதழில் மதிப்புக்கூட்டல் குறித்துப் பார்ப்போம். ஹைதராபாத்திலுள்ள இந்தியச் சிறுதானிய ஆராய்ச்சிக் கழகத்திலுள்ள ஊட்டச்சத்து மையத்தின் முதன்மை நிர்வாக அலுவலர், முனைவர் தயாகர் ராவிடம் பேசினோம். “வர்த்தகரீதியாக ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்கள் சந்தையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

பெரும்பாலும் வீட்டுத் தேவைக்காக மட்டுமே விளைவிக்கப்பட்டுவந்த சிறுதானியங்கள் இன்று வாழ்க்கை முறையாலும், தேசிய அளவில் ஏற்பட்டிருக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையாலும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. நாடு முழுவதும் 50 சதவிகித மக்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

2012-ம் ஆண்டு ‘சிறுதானிய இயக்கம்’ (Millets Mission) என்ற பெயரில் சிறுதானிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்காக மத்திய அரசால் ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் 14 மாநிலங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றில் தமிழ்நாடும் ஒன்று. இந்தத் திட்டத்தைத் தமிழ்நாட்டில் சிறப்பாக எடுத்து நடத்தியவர், அப்போதைய திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்த சாந்தஷீலா நாயர். அவர் இருந்த காலகட்டத்தில் சிறுதானிய விதைத் திருவிழா, சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மதிப்புக்கூட்டலுக்குப் பயிற்சி என முன்னெடுக்கப்பட்டன. அவர் இருந்தவரைக்கும் சிறப்பாக இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. தற்போது சிறுதானிய உற்பத்தியில் கர்நாடக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலம் `சிறுதானிய இயக்கம்’ திட்டத்துக்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கி, செயல்படுத்திவருகிறது.

சிறுதானியங்களைப் பயிர் செய்து, அப்படியே விற்பவர்களுக்கு லாபம் கிடைக்காது. அவற்றுக்கு மதிப்புக்கூட்டினால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற நிலை நிலவுகிறது. உதாரணமாக, ஒரு கிலோ சோளத்தை விற்றால் 40 ரூபாய் கிடைக்கும். ஒரு கிலோ சோள மாவை 70 ரூபாய்க்கு விற்க முடிகிறது. ஒரு கிலோ சோள மாவில் ஏறத்தாழ 30 ரொட்டிகள் தயாரிக்க முடியும். ஒரு ரொட்டி 10 ரூபாய்க்கு விற்கப்பட்டால்கூட 300 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் மாவாகவும் ரொட்டியாகவும் விற்பதில் மட்டுமே கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

சிறுதானியத்தைக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உருவாக்கலாம். இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழகத்தின் மூலமாகக் குழந்தைகளுக்குப் பிடித்த வெர்மிசெல்லி, பாஸ்தா, ஃபிளேக்ஸ், பிஸ்கட், பாப்கார்ன், சேமியா, ரவா உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரிப்பதற்கு வழிகாட்டிவருகிறோம். நுகர்வோரும் சிறுதானியங்களின் பலன்களை உணர்ந்திருப்பதால், அதற்கான சந்தை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

சிறுதானியப் பொருள்களைக்கொண்டு ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனியையே தொடங்க முடியும். அந்த அளவுக்கு அதற்கான சந்தையும், உற்பத்தி செய்வதற்கான பொருள்களும் கிடைக்கின்றன. உணவு தொடர்பான சிறுதானியப் பொருள்களுக்கு உரிமமும் கொடுக்கிறோம். பயிற்சிகள், கடனுதவிக்கு ஆலோசனைகளும் இங்கு கிடைக்கின்றன. தரப் பரிசோதனை உள்ளிட்ட விஷயங்களுக்கும் வழிகாட்டுகிறோம். இங்கேயே பார்ப்கார்ன், சேமியா, ரவா, மாவரைக்கும் இயந்திரங்கள், சுத்தப்படுத்தும் இயந்திரங்கள், உமி நீக்கும் இயந்திரங்கள் ஆகியவை இருக்கின்றன. ஒரு தொகை கொடுத்து, இங்கேயே பயிற்சியெடுத்து, உங்களால் உருவாக்கப்பட்ட சிறுதானியப் பொருள்களுக்கு மதிப்புக்கூட்டலும் செய்துகொள்ளலாம்.

தற்போது சிறுதானிய உற்பத்தியில் கர்நாடக அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஒரு கிலோ சோளத்தை விற்றால் 40 ரூபாய் கிடைக்கும். ஒரு கிலோ சோள மாவை 70 ரூபாய்க்கு விற்க முடிகிறது.
.சிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள்! : வறட்சி, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற சிறு தானியங்கள்!.
கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை அதிகம் சாப்பிடும் வெளிநாட்டினர்கூட இப்போது சிறுதானியங்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அதனால், இதற்கான ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. சிறுதானியங்கள் ‘ஸ்மார்ட் க்ராப்ஸ்’ (Smart Crops) என்ற பெயரைப் பெற்றிருக்கின்றன. குறைந்த முதலீடும், வருமானப் பாதுகாப்பும் இதில் இருப்பதால், விவசாயிகள் தாராளமாகச் சிறுதானியச் சாகுபடியைத் தேர்ந்தெடுக்கலாம். சிறுதானியங்கள் விற்பனையில் தொழில்முனைவோர்கள் அதிகம் ஈடுபட்டால், மேலும் வளரும். அத்தகைய தொழில்முனைவோர்களுக்கு இங்கு பயிற்சியளிக்கிறோம். தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடனுதவி கிடைக்க வழிவகை செய்கிறோம்.

சிறுதானியம் உடலுக்கும் நல்லது, விவசாயிகளுக்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது. தமிழ்நாட்டிலேயே சிறுதானியச் சாகுபடி செய்வதற்கு நிறைய வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன. சிறுதானியம் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நிறைய பேர் எங்களை அணுகுகிறார்கள். அவர்களின் தேவைக்கும் முதலீட்டுக்கும் ஏற்ப வழிகாட்டிவருகிறோம்” என்றவர், விஞ்ஞானி சங்கப்பா என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் மதிப்புக்கூட்டும் கூடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

அப்போது பேசிய சங்கப்பா, “இங்கு சேமியா தயாரிக்கும் கருவி, பாப்கார்ன் (சோளப்பொரி) தயாரிக்கும் கருவி, பிஸ்கட் மற்றும் கேக் தயாரிக்கும் கருவி, சிறுதானிய ஃபிளேக்ஸ் தயாரிக்கும் கருவி, ஆரம்பநிலையில் பதப்படுத்தும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இது தனிக்கூடமாகச் செயல்படுகிறது. வெளிமாநிலங்களிலிருந்து பண்ணைச் சுற்றுலா வருவோர், மதிப்புக்கூட்டும் தொழிலில் ஈடுபட விரும்புவோர், புதிதாகக் கற்றுக்கொள்ள விரும்புவோர், வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் எனப் பலரும் வருகின்றனர். விவசாயிகள் குழுவாக வந்தாலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன” என்றார்.

‘‘ஒவ்வொரு மாதமும், நான்காவது சனிக்கிழமை சிறுதானிய வர்த்தகம் செய்பவர்களுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அதேபோல சிறுதானிய தொழில் சார்ந்த ஸ்டார்ட்அப் தொழில் தொடங்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது.’’

அவரைத் தொடர்ந்து பேசிய ஹேமசங்கரி, “ஒரே இயந்திரத்தின் மூலம் எட்டு வகையான சிறுதானியங்களையும் தரம் பிரித்துச் சுத்தப்படுத்தும் கருவிகள் இங்கு உள்ளன. இவற்றோடு மாவரைக்கும் இயந்திரங்கள், உமி நீக்கும் இயந்திரங்களும் உள்ளன” என்றார். முனைவர் ரவிக்குமார் பேசியபோது, “சிறுதானிய உணவின் தரத்தை அறிய, பரிசோதனை மையமும் இங்கு செயல்படுகிறது. சுமார் 50 வகையான உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பயிற்சிகளை இங்கு கொடுக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும், நான்காவது சனிக்கிழமை சிறுதானிய வர்த்தகம் செய்பவர்களுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அதேபோல சிறுதானியத் தொழில் சார்ந்த ஸ்டார்ட்அப் தொழில் தொடங்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகளுக்கான கட்டணமாக 1,600 ரூபாய் பெறப்படுகிறது. இதில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், சிறுதானிய உணவுத் தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்களும் சிறுதானிய உணவு ஆராய்ச்சி நோக்கம் உள்ளவர்களும் எங்களை அணுகலாம்” என்று அழைப்புவிடுத்தார்.

தொடர்புக்கு,

Indian Institute of Millets Research,

Rajendranagar, Hyderabad-500 030.

Telangana. 040 24599300, 2459 9301

For Training: 040 24599379

மதிப்புக்கூட்டுவதால் சத்துகள் அழியுமா?

இந்தியச் சிறுதானிய ஆராய்ச்சிக் கழகத்திலுள்ள உயிர் வேதியியல் துறை மூலம் உணவுப் பொருள்களிலுள்ள சத்துகள் குறித்துப் பரிசோதனை செய்யப்படுகிறது. இத்துறையின் முதன்மை விஞ்ஞானி வெங்கடேஸ்வரலு “விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியத்தையோ, மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள்களையோ இங்கு கொடுத்தால் அவற்றிலுள்ள ஊட்டச்சத்துகள் கலவையின் (Nutritional Composition)அளவைத் தெரிவித்துவிடுவோம். பொதுவாகச் சிறுதானியங்களில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் உள்ளன. இவை எந்தெந்த அளவில் உணவுப் பொருள்களில் கலந்திருக்கின்றன என்பதை அறிவதற்கான பரிசோதனைக் கருவிகள் இங்குள்ளன. இவற்றைக்கொண்டு துல்லியமாக அளவிட்டுச் சொல்லிவிடுவோம். இதற்கென்று கட்டணமும் உண்டு.

விவசாயிகள், சிறு தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்கள், உழவர் குழுக்கள் எனப் பலர் இங்கு பரிசோதனை செய்கின்றனர். அந்தந்தப் பொருளின் சத்துகள் அளவுகளைத் தங்களின் பொருளின் லேபிள்களில் அச்சிட்டு, ஒட்டி சந்தைப்படுத்தலாம்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

அரிசிக்கும் சிறுதானியங்களுக்கும் உள்ள சத்து வேறுபாடு என்ன?

“நெல்லின் மேற்புறத் தோலை (உமி) மட்டும் நீக்கிவிட்டுச் சாப்பிடும் அரிசியில் சத்துகள் இருக்கும். இதன் மூலம் இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்டவை கிடைக்கும். ஆனால், நாம் சாப்பிடும் பெரும்பான்மையான அரிசி முழுவதும் பாலிஷ் செய்யப்பட்டு, பார்ப்பதற்குப் பளபளவென்று வெள்ளையாக இருக்கும். அந்த அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமே உடலுக்குக் கிடைக்கும். வேறெந்தச் சத்தும் அவ்வளவாகக் கிடைக்காது. ஆனால், ராகி, கம்பு, சோளத்தை அரைத்துச் சாப்பிடும்போது அரிசியைவிட மூன்று முதல் நான்கு மடங்குச் சத்து அதிகமாகக் கிடைக்கும்.

அதாவது, 100 கிராம் அரிசியில் 5-8 பி.பி.எம் என்ற அளவில்தான் சத்து இருக்கும். சோளத்தில் 30-50 பி.பி.எம் இருக்கும். கேழ்வரகில் 200 பி.பி.எம் வரை இருக்கிறது. அதனால்தான் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு கால்சியம் அதிகம் கிடைக்கும் ராகியைச் சாப்பிடப் பரிந்துரைக்கிறோம். அதேபோல சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு உள்ளிட்ட தானியங்களில் தோல் நீக்கிப் பெறப்படும் அரிசியை மட்டுமே சாப்பிடுவது நல்லது. அதையும் பாலிஷ் செய்யும்போது சத்துகள் அழிய வாய்ப்பிருக்கிறது.”

ராகி, சோளம், கம்பை மெஷினில் அரைத்துப் பயன்படுத்தும்போது அதன் சத்துகள் அழியுமா?

“சமைக்கும்போது உணவுப் பொருள்களுக்குக் கிடைக்கும் வெப்பத்தைவிட, அரைக்கும்போது கிடைக்கும் வெப்பம் குறைவு. இந்த வெப்பத்தால் உணவுப் பொருள்களின் சத்துகளில் பெருமளவில் மாற்றம் நிகழாது. ஆனால், 100 டிகிரி சென்டிகிரேடில் சூடு செய்யும்போது வைட்டமின்களின் அளவு குறையும். அதேநேரத்தில் தாது உப்புகள், அமினோ அமிலங்களுக்கு பாதிப்பு இருக்காது.”

சிறுதானியம் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னை ஏற்படுமா?

“பொதுவாக, கோதுமையில் `குளூட்டன்’ (Gluten) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது செரிமானத்துக்குப் பிரச்னை ஏற்படுத்தும். `பரோட்டாவைச் சாப்பிடக் கூடாது’ என்று சொல்வதற்குக் காரணம், இந்த குளூட்டன் (சவ்வு போன்ற தன்மை) அதில் அதிகமாக இருப்பதால்தான். சோறு சாப்பிட விரும்புவதைப்போல இன்னும் நாம் சப்பாத்தி சாப்பிட விரும்பாததற்குக் காரணம், உடலுக்கு ஒருவித ஒவ்வாமையை இந்த குளூட்டன் கொடுக்கிறது.

சிறுதானிய உணவு வகைகளில் இது கிடையாது. பழங்கள் எடுத்துக்கொள்ளும்போது, குடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதைப்போலத்தான் சிறுதானியங்கள் எடுத்துக்கொள்ளும்போதும் இருக்கும். இன்னொன்று, சிறுதானிய உணவு வகைகளில் நார்ச்சத்து இருப்பதால் மெதுவாகச் செரிமானமாகும். அதனால் உடலில் உடனடியாகப் பசி ஏற்படாது. ரத்தத்திலும் உடனடியாக அதிக அளவு குளூக்கோஸ் சேராமல் தடுக்கும். அதனால், சர்க்கரைநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.”

சிறுதானியத்தில் என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம்?

“பேக்கரி தொடர்பான பிரெட், பிஸ்கெட், பன் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் கம்பு, கேழ்வரகு, சோளத்தைக்கொண்டு தயாரிக்கலாம். அதேபோல தினை, குதிரைவாலி, சாமை அரிசி வகைகளையும் பயன்படுத்தலாம். தற்போது ஜிங்க், இரும்புச்சத்துகள் அதிகம்கொண்ட தானியங்களை உருவாக்க ஆராய்ச்சி நடந்துவருகிறது. அவை பயன்பாட்டுக்கு வந்தால், சிறுதானியங்களின் மதிப்பு இன்னும் கூடும்” என்றார்.

தொடர்புக்கு, முனைவர் வெங்கடேஸ்வரலு, செல்போன்: 95670 33575.