Published:Updated:

சிறுதானியங்களை பிரபலப்படுத்த இந்தியாவுடன் மற்ற நாடுகள் இணைய வேண்டும்; பிம்ஸ்டெக் கூட்டத்தில் ஆலோசனை

சிறுதானியங்கள்

பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும், ரசாயன பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். - அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

சிறுதானியங்களை பிரபலப்படுத்த இந்தியாவுடன் மற்ற நாடுகள் இணைய வேண்டும்; பிம்ஸ்டெக் கூட்டத்தில் ஆலோசனை

பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும், ரசாயன பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். - அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

Published:Updated:
சிறுதானியங்கள்

2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சிறுதானியங்களின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிம்ஸ்டெக் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.

பிம்ஸ்டெக்(BIMSTEC)
பிம்ஸ்டெக்(BIMSTEC)
bimstec.org

மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்து பற்றியும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அமைச்சர் தோமர் விளக்கினார். மேலும், சிறுதானியங்களை உணவாக பிரபலப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் பேசினார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்

பிம்ஸ்டெக் உறுப்புநாடுகள் அனைத்தும் உகந்த வேளாண் முறைகளைக் கடைப்பிடித்து, ஆரோக்கியமான உணவை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் சிறுதானியங்களை உணவாகப் பிரபலப்படுத்தும் முயற்சியில் இந்தியாவுடன் உறுப்பு நாடுகள் இணைய வேண்டும் என்று தோமர் கேட்டுக்கொண்டார். மேலும், பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் ரசாயன பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் பேசினார்.

பிம்ஸ்டெக் கூட்டத்தில், 2023 - 2027-ம் ஆண்டுக்கான பிம்ஸ்டெக் விவசாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. BIMSTEC செயலகத்துக்கும் சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (IFPRI) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், விவசாயப் பணிக்குழுவின் கீழ், மீன்பிடி மற்றும் கால்நடை துணைத் துறைகளைக் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.