Published:Updated:

ஆங்கிலேயர் காலத்து வேளாண் இயந்திரங்கள்... காட்சிப்படுத்திய தோட்டக்கலைத் துறை... ஒரு விசிட் போலாமா?

பசுமை பூங்கா
பசுமை பூங்கா

5 கோடி ரூபாய் செலவில் பசுமை பூங்கா அமைத்து புதிய சுற்றுலா தளத்தை தோட்டக்கலைத்துறை உருவாக்கியுள்ளது. இதையடுத்து இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன் படங்கள் உள்ளே...

சென்னை வண்ணாரப்பேட்டையில் 1920-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான பணிமனை அமைக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து நாட்டில் இருந்து, கப்பலில் கொண்டு வரப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இங்கு வைக்கப்பட்டு பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நாளடைவில் நவீன இயந்திரங்களை உற்பத்தி செய்யத் தொடங்கின. இதையடுத்து பழைய இயந்திரங்களின் தேவை படிப்படியாகக் குறைந்தது. எனவே, வேளாண் பொறியியல் பணிமனை 18 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. பயன்பாடின்றிக் கிடந்த இடத்தில் 5 கோடி ரூபாய் செலவில் பசுமை பூங்கா அமைத்து புதிய சுற்றுலா தளத்தை தோட்டக்கலைத்துறை உருவாக்கியுள்ளது. இதையடுத்து இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு