Published:Updated:

2 லிட்டர் டீசல், 30 நிமிடங்கள், ஒரு ஏக்கர் உழவு! செலவைக் குறைக்கும் புல்லட் டிராக்டர்

கருவியுடன் மன்சுக் பாய் ஜகானி
பிரீமியம் ஸ்டோரி
கருவியுடன் மன்சுக் பாய் ஜகானி

கழனிக்காட்டு விஞ்ஞானிகள்-6

2 லிட்டர் டீசல், 30 நிமிடங்கள், ஒரு ஏக்கர் உழவு! செலவைக் குறைக்கும் புல்லட் டிராக்டர்

கழனிக்காட்டு விஞ்ஞானிகள்-6

Published:Updated:
கருவியுடன் மன்சுக் பாய் ஜகானி
பிரீமியம் ஸ்டோரி
கருவியுடன் மன்சுக் பாய் ஜகானி

விவசாயத்தின் முதல்படி நிலத்தை உழவு செய்தல். எந்த வகைப் பயிரை, பயிரிடுவதாக இருந்தாலும் முதலில் நிலத்தை உழவு செய்து தயார் செய்துகொள்ள வேண்டும். ஒரு காலத்தில் மாடுகளைக் கொண்டு நிலத்தை உழவு செய்து சாகுபடி செய்து வந்தனர். ஆனால், இப்போது பெரும்பாலான கிராமங் களில் உழவு மாடுகள் இல்லை. அதனால் டிராக்டர் மூலம் உழவு செய்கிறார்கள்.

டிராக்டரை உபயோகிக்கக் காரணம், வேலைநேரம் மற்றும் வாடகை செலவு குறைவாக இருப்பதுதான். ஒரு மணி நேரத் துக்கு 800 ரூபாய் வாடகை வாங்குகிறார்கள். எங்கள் பகுதியில் டிராக்டரைதான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நிலத்தைச் சாகுபடி செய்ய மூன்று முறை உழவு செய்ய வேண்டி இருக்கும். நிலத்தை முதலில் உழுது விடுவது, பிறகு நீர்விட்டு பாய்ச்சுவது, கட்டிகளெல்லாம் கரைந்து போக மறுபடியும் உழவு செய்து, அதன்பிறகு நாற்று நடும் பணியைத் தொடங்குவார்கள்.

புல்லட் டிராக்டர்
புல்லட் டிராக்டர்

ஒரு டிராக்டரை சொந்தமாக வாங்க வேண்டுமென்றால் 8 முதல் 10 லட்ச ரூபாய்ச் செலவாகும். இதற்கு வங்கிக் கடன் அல்லது மார்வாடி சேட்டுகளிடம் கடன் வாங்கி டிராக்டரை வாங்குகிறார்கள். சொந்தமாக டிராக்டர் வைத்துக்கொள்வதில் சில பிரச்னைகளும் உண்டு. அது என்னவென்றால் அந்த டிராக்டரை பராமரிப்புச் செய்ய வேண்டியிருக்கும். கல், பாறை போன்ற கடுமையான நிலமாக இருந்தால் டிராக்டரின் பின்புறம் உள்ள அந்தக் கூர்மையான ‘பிளேடுகள்’ உடைந்து போய்விடும். அதை அடிக்கடி மாற்ற வேண்டி யிருக்கும். இப்படி டிராக்டரை வைத்துப் பராமரிப்பதிலும் செலவுகள் அதிகம் இருப்பதால் டிராக்டரை வாடகைக்கு எடுக்கவே பலரும் விரும்பு கிறார்கள். போதாக்குறைக்கு டிராக்டரை அந்தக் குறிப்பிட்ட பருவத்தில் உழவு செய்து நிறுத்தி வைத்துவிடுவோம். தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால் அதில் இருக்கும் ‘பேட்டரி’ செயலிழந்து போகும் வாய்ப்புகள் உண்டு.

புல்லட் டிராக்டர்
புல்லட் டிராக்டர்

பிளேடு உடைந்து போய் விட்டால் பட்டறைக்குச் சென்று அதைச் சரி செய்ய வேண்டி வரும். டீசல் அவ்வப்போது வாங்கி வந்து ஊற்ற வேண்டியிருக்கும். இப்படி டிராக்டரை வைத்திருப்பவர்கள் அதற்குச் செய்ய வேண்டிய பராமரிப்பு பட்டியல் நீளமானது. இத்தனை வேலை களைச் செய்ய விரும்பாமல் பலரும் வாடகைக்கு டிராக்டர்களை எடுத்துப் பயன் படுத்துகிறார்கள்.

பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்குச் சென்றால் அங்கே, வீட்டுக்கு வீடு டிராக்டர் கள் இருக்கும். பஞ்சாபின் விவசாயமே டிராக்டர்களை நம்பித்தான் இருக்கிறது. இப்படி டிராக்டர் பயன்பாடு நாடு முழுவதும் நிறையவே ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மாற்று ஏற்பாடாகக் குஜராத் மாநிலத்தில் இருக்கும் மன்சுக் பாய் ஜகானி (Mansukhbhai Jagani) என்பவர், விவசாயிகளுக்கு உதவும் விதமாக ஓர் எந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். மோட்டார் பைக்கை வைத்து முன்புறம் ஒரு சக்கரம், பின்புறம் இரண்டு சக்கரங்கள் பொருத்தி ஒரு கருவியை உருவாக்கி, அதில் உழவு செய்வதற்குரிய சாதனங்களைப் பொருத்திக்கொண்டார்.

புல்லட் டிராக்டர்
புல்லட் டிராக்டர்

இதற்கு ‘சாந்தி’ என்று பெயர் வைத்திருக் கிறார். ‘மோட்டார் பைக்’கை ஒருவர் ஓட்டும்போது இவர் அந்த ‘லீவர்’ மீது நின்று தள்ளுகிறார். அப்போது அதில் உள்ள ‘பிளேடு’கள் நிலத்தை உழவு செய்து வருமாறு அமைத்திருக்கிறார். இந்த எந்திரம் பயனளிக்கும் விதத்தை ‘யூடியூப்’பில் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

‘ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரை டீசலை பயன் படுத்தி இரண்டு ஏக்கர் நிலத்தில், இந்த மோட்டார் பைக் டிராக்டரை வைத்து உழவு செய்யலாம். ஒரு நாளைக்கு 8 முதல் 12 ஏக்கர் நிலத்தை இந்த மோட்டார் டிராக்டரை வைத்து உழவு செய்ய முடியும். மண்ணின் தன்மையைப் பொறுத்து இதில் மாறுபாடு இருக்கும்’ என்கிறார் மன்சுக் பாய் ஜகானி.

பின்னால் இணைக்கும் கருவிகளைக் கொண்டு, பயிர்களின் இடைவெளிக்குத் தகுந்தாற்போல் களை எடுப்பதற்கு ஏற்ப நாமே வடிவமைத்துக் கொள்ளும் விதத்திலும் அதை அமைத் திருக்கிறார். இந்த எந்திரத்தை விதை விதைப்பதற்கும், பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். டிராக்டரில் உள்ள இரும்பு பாகங்கள், கருவிகள் சற்றுக் கனமானதாக இருக்கும். ஆனால், இந்தக் கருவியில் அவை சிறிய வடிவில் எளிதாகக் கையாளும்விதமாக அமைந்திருக்கிறது.

புல்லட் டிராக்டர்
புல்லட் டிராக்டர்

இந்தக் கருவி பயன்படுத்துவதற்குச் சுலபமாகவுள்ளது. எளிதாக இதை மோட்டார் சைக்கிளுடன் பொருத்திக்கொள்ளலாம். எளிதாகக் கழற்றி வைத்துக்கொள்ளவும் முடியும். குறைவான எடை உடையதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இந்த மோட்டார் சைக்கிள் உழவு எந்திரத்தை காய்கறி வயல்களுக்கு மட்டுமல்லாமல் மா, கொய்யாத் தோப்பு களிலும் பயன்படுத்தலாம்.

1,65,000 ரூபாய் விலையில், ஒரு மோட்டார் சைக்கிள் அதன் பின்புறம் நான்கு விதமான இணைப்புக் கருவிகள் என இத்தனை வசதியான கருவியைப் பெரிய நிறுவனங்கள் கூடத் தயாரிக்கவில்லை. உழவனின் உற்றத் தோழனாக இந்த மோட்டார் சைக்கிள் டிராக்டர் திகழ்கிறது.

‘தற்போது இருக்கும் மோட்டார் சைக்கிளின் இன்ஜினை 5 ஹெச்.பி டீசல் இன்ஜினாக மாற்றி அமைத்து இருக்கிறேன். இதன் பெயர் புல்லட் டிராக்டர். இரண்டு லிட்டர் டீசலில் அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பை உழவு செய்துவிடலாம். 325 சிசி உள்ள மோட்டார் சைக்கிள் எதையும் இதேபோல் வடிவமைக்க முடியும். சம்பந்தப்பட்ட விவசாயியின் புத்திசாலித் தனத்துக்கு ஏற்ப, தேவைக்கேற்ப கருவிகளை இத்துடன் இணைத்துக்கொள்ள முடியும்’ என்று கூறுகிறார் மன்சுக் பாய் ஜகானி.

புல்லட் டிராக்டர்
புல்லட் டிராக்டர்

குஜராத் விவசாயிகள் இதைப் பெரிதும் விரும்புகிறார்கள். ஒரு நாளில் 5 ஹெக்டேர் வரை உள்ள நிலப்பரப்பில் களை எடுக்கும் வேலையை இந்த எந்திரத்தின் மூலம் செய்துவிட முடிகிறது. இதற்கு ஆகும் செலவு டீசல் மட்டும்தான். இதனால் சாகுபடி செலவு குறைகிறது. எனவே, இந்த எந்திரத்தை அங்கு உள்ளவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். புனேவில் நடந்த ‘இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ்’ கண்காட்சி, ‘சுதேசி விஞ்ஞான் நியூ டெல்லி மேளா’ அங்கெல்லாம் இவர் தன்னுடைய வாகனத்தைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில், ‘டிபார்ட்மென்ட் ஆஃப் ஸ்மால் மீடியம் அண்ட் மைக்ரோ என்டர்பிரைசஸ்’ கண்காட்சியில் இதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவரை சந்தித்தபோது 60 முதல் 70 மோட்டார் பைக் டிராக்டர்களை வடிவமைத்துத் தந்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ‘அகமதாபாத் நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன்’ நிறுவனத் தின் ஒத்துழைப்போடு அமெரிக்காவில் பாஸ்டனில் இருக்கும் ‘ஸ்லோவன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்’, மசாசுசெட்ஸில் இருக்கும் ஓர் அமைப்பிலும் காப்புரிமை பெற்றிருக்கிறார். இவருடைய இந்த டிராக்டருக்கு உலகம் முழுவதுமிருந்து பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதன் விலை 1,65,000 ரூபாய்.

மோட்டார் சைக்கிளுக்கான தொகையை (சுமார் 1,20,000) ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் டிராக்டரில் இணைக்கும் இந்த எந்திரத்தை 20,000 முதல் 40,000 ரூபாய்க்குள் உருவாக்கி இருக்கிறார்.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

உழவு மாடுகளின் விலை ஜோடி, 1 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. டிராக்டரின் விலை 8 லட்சம் ரூபாய் என்கிறபோது இந்தத் தொகை மிகவும் குறைவானதுதான்.

மன்சுக் ஜகானியைப் போலவும், புளியை யும் புளியங்கொட்டையையும் தனித் தனியாகப் பிரிக்கும் எந்திரத்தைக் கண்டுபிடித்த அப்துல் போன்ற விவசாய விஞ்ஞானிகளையும் நாம் பெருமையோடு எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள்தாம் இந்தத் தேசத்தின் சொத்துகள். எந்தப் படிப்பறிவும் இல்லாமல் தங்களின் அனுபவத் தைக் கொண்டு இப்படி வித்தியாசமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் இவர்களைப் பசுமை விகடன் சார்பாக வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே நமக்கு இருக்கும் தீராத ஆவல்.

தொடர்புக்கு,
Mansukhbhai Jagani, Mota Devaliya, Amreli - 365410, Gujarat,

Phone : 02791 276730, mobile: 99254 47400

- கண்டுபிடிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism