‘இந்த ஆண்டு 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் தங்கமணி அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், சிறு, குறு விவசாயிகள் எந்த அளவுக்குப் பயனடைவார்கள்... `கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஐந்து மடங்கு கூடுதலாக இணைப்பு வழங்கப்படவிருப்பதால், நீண்டகாலமாகக் காத்திருக்கும் பெரும்பாலான விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைத்துவிடும் என்ற ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. ஆனால் யதார்த்தமோ கசப்பானது’ என்கிறார்கள் விவசாய சங்க பிரதிநிதிகள்.

இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கெளரவத் தலைவர் நெடார் தர்மராஜன், “கடந்த ஆண்டு 10,000 விவசாய மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. பசுமை விகடன் ஏற்பாட்டில் விவசாய சங்க பிரதிநிதிகளின் பரிந்துரைக்கு மதிப்பளிக்கும்விதமாகவே இந்த ஆண்டு தமிழக அரசு, `50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறது. இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்த 50,000 விவசாய மின் இணைப்பில், 25,000 இணைப்புகள் தட்கல் முறையில் சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. `5 ஹெச்.பி மோட்டாருக்கு ரூ.2.50 லட்சமும், 7.5 ஹெச்.பி-க்கு ரூ.2.75 லட்சமும், 10 ஹெச்.பி-க்கு ரூ.3 லட்சமும், 15 ஹெச்.பி-க்கு ரூ.4.25 லட்சமும் பணம் செலுத்த வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரண சிறு, குறு ஏழை விவசாயிகளால் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாது. விவசாயத்தைத் துணை தொழிலாகக்கொண்டிருக்கும் பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்தான் இதனால் பலனடைவார்கள்.

`மின்மிகை மாநிலம்’ எனப் பெருமை யடித்துக்கொள்ளும் தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு இப்படியோர் அவலநிலை. ஆனால் தெலங்கானாவிலும் ஆந்திராவிலும் அப்படியல்ல. இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்ததிலிருந்து அதிகபட்சம் 30 நாள்களுக்குள் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இணைப்பு பெறுவதற்கு எந்த ஒரு கட்டணமும் இல்லை. ஆந்திரா, தெலங்கானாபோல தமிழ்நாட்டிலும் விரைவாக விவசாய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பழங்கள், மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவர்களும் வேளாண் உற்பத்திக்காகத்தான் உழைக்கிறார்கள். எனவே, இவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்” என்றார்.