Published:Updated:

மழைக்காலத்தில் கிணறு, ஆழ்துளைக் கிணற்று நீரை அப்படியே கால்நடைகளுக்கு கொடுக்கலாமா?

கோழி வளர்ப்பு

ஆழ்துளைக் கிணற்றிலும் மழைக்காலத்தில் நுண்ணுயிர்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் கோழிகளை வளர்க்கும் கோழிப்பண்ணையாளர்கள் அவற்றுக்குக் கொடுக்கும் தண்ணீரை பரிசோதித்துக் கொடுக்க வேண்டும்.

மழைக்காலத்தில் கிணறு, ஆழ்துளைக் கிணற்று நீரை அப்படியே கால்நடைகளுக்கு கொடுக்கலாமா?

ஆழ்துளைக் கிணற்றிலும் மழைக்காலத்தில் நுண்ணுயிர்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் கோழிகளை வளர்க்கும் கோழிப்பண்ணையாளர்கள் அவற்றுக்குக் கொடுக்கும் தண்ணீரை பரிசோதித்துக் கொடுக்க வேண்டும்.

Published:Updated:
கோழி வளர்ப்பு

வரவிருக்கும் நாள்களில் மழை அதிகமாகப் பொழிய வாய்ப்பிருக்கிறது. தற்போதும் பல இடங்களில் மழை பொழிகிறது. அதனால் கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் மழை தண்ணீர் நிரம்பியிருக்கிறது. இந்த நேரத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்கள் செய்ய வேண்டியவை குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மழை கோப்புப் படம்
மழை கோப்புப் படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில், ``வரவிருக்கும் நாள்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தரிசு நிலங்கள் மற்றும் வயல்களில் புற்கள் அதிக அளவில் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகைய புற்களை மேயும் கால்நடைகள் அதிகமாக அவற்றை உண்ணும்போது, கால்நடைகளின் செரிமானத்தில் பிரச்னை ஏற்படுவதோடு, வயிற்றில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விரைவிலேயே வயிறு உப்பி, எந்தத் தீவனத்தையும் சாப்பிடாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தகைய நோய்ப் பாதிப்பை கால்நடைகளில் கண்டறியும் பட்சத்தில், உடனடியாக தீவன மேலாண்மை உக்திகளைப் பயன்படுத்தலாம். அப்படியும் நோயின் தீவிரம் குறையவில்லை எனில் கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.

கால்நடைகள்
கால்நடைகள்
விகடன்

அதேபோல் ஆழ்துளைக் கிணற்றிலும் மழைக்காலத்தில் நுண்ணுயிர்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் கோழிகளை வளர்க்கும் கோழிப்பண்ணையாளர்கள் அவற்றுக்குக் கொடுக்கும் தண்ணீரை பரிசோதித்துக் கொடுக்க வேண்டும். மாசடைந்த நீரில் உள்ள நுண்ணுயிரிகளை ஹைட்ரஜன் பெராக்சைடு, குளோரின் போன்றவற்றைப் பயன்படுத்தி சுத்திகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.