Published:Updated:

கவர்ந்திழுக்கும் விவசாய முதலீடுகளை நம்பலாமா? மக்களே உஷார்..!

விவசாயம்

விவசாயத்தைப் பொறுத்தவரையில் எவ்வளவு விளைச்சலைப் பெற முடியும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மாதத்துக்கு இவ்வளவு ரூபாய் தருவோம் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறார்கள். விவசாயத்தைப் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாத கூற்று இது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்.

கவர்ந்திழுக்கும் விவசாய முதலீடுகளை நம்பலாமா? மக்களே உஷார்..!

விவசாயத்தைப் பொறுத்தவரையில் எவ்வளவு விளைச்சலைப் பெற முடியும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மாதத்துக்கு இவ்வளவு ரூபாய் தருவோம் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறார்கள். விவசாயத்தைப் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாத கூற்று இது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்.

Published:Updated:
விவசாயம்

நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்தால் அத்தொகையைக் கொண்டு உங்களுக்கென ஒரு நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று சில நிறுவனங்கள் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்கின்றன.

நம் முதலீட்டில் அவர்கள் விவசாயம் புரிந்து விளை பொருளையோ அல்லது அதற்கான தொகையையோ தருவதாகக் கூறும் திட்டம் வெளியே இருந்து பார்ப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இருந்தாலும் இது போன்ற அறிவிப்புகளை நம்பி ஏமாந்தவர்களும் உண்டு. விவசாயம் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களை எப்படிப் பார்க்கலாம் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பியிடம் கேட்டோம்...

முதலீடு
முதலீடு

"விவசாயத்தைப் பொறுத்தவரையில் எவ்வளவு விளைச்சலைப் பெற முடியும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அது சூழலைப் பொறுத்தது. இப்படியிருக்கையில் மாதத்துக்கு இவ்வளவு ரூபாய் தருவோம் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறார்கள்.

விவசாயத்தைப் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாத கூற்று இது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். 5 லட்சம் ரூபாய் நீங்கள் அத்திட்டத்தில் செலுத்துகிறீர்கள் என்றால் அத்தொகைக்கு மதிப்புடைய நிலத்தை உங்கள் பெயரில் பதிவு செய்து கொடுக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். முதலீட்டுப் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு இன்னொருவர் நிர்வகிப்பாரெனில் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஈமு கோழி மோசடி போல ஏமாற வேண்டாம்..

விவசாயத்தைப் பொறுத்தவரை களத்தில் இறங்கி வேலை செய்கிறவர்களால்தான் நல்ல விளைச்சலைப் பெற்று வருவாய் ஈட்ட முடியும். அப்படியிருக்கையில் எங்கோ நம் பெயரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு அதன் லாபம் கைக்கு வந்து சேரும் என்று நம்பி முதலீட்டை மட்டும் போட்டு விட்டுக் காத்திருந்தால் நாம் பணத்தை இழக்க வேண்டி வரும். கடைசிக்கு, நிலம் நம் பெயரில் இருந்தால் கூட அது நமக்குச் சொத்தாக இருக்கும். நாளுக்கு நாள் அதன் மதிப்பு உயரும்.

வெறுமனே வந்து உங்கள் முதலீட்டைக் கொண்டு விவசாயம் புரிந்து பணமாகவோ, விளைபொருளாகவோ கொடுக்கிறோம் என்று சொன்னால் நம்ப வேண்டாம். அந்த இடத்தில் உங்களுக்கான பங்கு என்ன என்பதற்கான உத்தரவாதம் வேண்டும். அதே போல, உங்களுக்கு விவசாயம் குறித்த அனுபவ அறிவு இருக்க வேண்டும். நிலத்துக்கும், பருவத்துக்கும் ஏற்றவாறு லாபம் தரக்கூடிய பயிர்களை விளைவிக்கிறார்களா என்று பரிசோதிக்கக்கூட விவசாயம் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஈமு கோழி மோசடி போன்றொரு மோசடிதான் நடக்கும்.

பணம்
பணம்

இத்திட்டத்தை அறிவிக்கிறவர்கள் யார்? அவர்களுக்கு விவசாயம் சார்ந்து எந்த அளவுக்கு அனுபவ அறிவு இருக்கிறது. அவர்களால் இதை வெற்றிகரமாக நடத்திக் காட்ட முடியுமா என்பதையெல்லாம் கண்டுணர்கிற தெளிவு இருந்தால் மட்டும் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

நேர்மையாகச் செய்கிறவர்கள் போலியான வாக்குறுதிகளை அளிக்க மாட்டர்கள். எல்லாவற்றையும் வணிக நோக்கோடு பார்க்கிறவர்கள் நம்மைக் கவர்வதற்காக பல்வேறு வாக்குறுதிகள் கொடுப்பார்கள். தேக்கு மரத்திட்டத்தில் முதலீடு செய்தால் நம் பெயரில் 50 மரங்களை வளர்த்து அதன் லாபத்தைக் கொடுக்கிறோம் என்று சொல்லி ஏமாற்றிய மோசடி குறித்து பலரும் அறிவர். விவசாய முதலீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் இப்படியானதாக அமையும் அபாயம் இருக்கிறது. எனவே மிகுந்த எச்சரிக்கையுட இருப்பது அவசியம்” என்கிறார் தூரன் நம்பி.

நேரடி கண்காணிப்பு அவசியம்!

”நாம் நேரடியாகச் சென்று கண்காணிப்பது போல் இருந்தால் மட்டுமே இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் ஏமாற்றப்படுவோம்” என்கிறார் பெருந்தச்சன் கீர்த்தி வர்மன்

“1999ம் ஆண்டு சென்னையில் பி.கே எஸ்டேட் என்கிற நிறுவனம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்களிடம் தின வசூல், மாத வசூல் அடிப்படையில் தொகை வசூலித்து திருச்சி அருகே சனமங்கலம் என்கிற கிராமத்தில் அவர்கள் பெயரில் இடம் வாங்கி அதில் விவசாயம் புரிந்து தினசரி காய்கறி மற்றும் அரிசி கொடுப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

மோசடி நிறுவனங்கள்
மோசடி நிறுவனங்கள்

10 ஆயிரம் சதுர அடி ஒரு யூனிட் என மொத்தம் 600 ஏக்கருக்கு 2400 யூனிட் போட்டு விற்றிருக்கிறார்கள். பணம் கட்டியவர்களுக்கு நிலத்தைப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டே ஆண்டுகளில் அந்நிறுவனம் மூடப்பட்டு அதன் நிறுவனர் தலைமறைவானார்.

இதன் பிறகு அந்த 600 ஏக்கர் நிலத்தை எந்த விவசாயிகளிடமிருந்து வாங்கினார்களோ அந்த விவசாயிகளே அதில் மானாவரி விவசாயம் புரிய ஆரம்பித்து விட்டனர். என் நண்பர் அப்படியாகி நிலம் வாங்கி விட்டு, அமெரிக்கா செல்வதால் எனக்கு அந்நிலத்தை விற்று விட்டுச் சென்று விட்டார். இன்றைக்கு இடத்துக்கான ஆவணங்கள் என்னிடம் இருந்தாலும் எது அந்த இடம் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. விவசாயத்துக்கே தொடர்பில்லாத நிலம் அது.

அளவீட்டுக்காக வைக்கப்பட்டிருந்த கல்லையெல்லாம் பிடுங்கிப் போட்டு விட்டு விவசாயம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எனது இடத்தைக் கண்டுபிடிக்க சார்பதிவாளர் அலுவலகத்தில் பணம் கட்டியும் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த இடத்துக்காக இன்றைக்கு வரைக்கும் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, விவசாய முதலீடுகளைப் பொறுத்தவரை நாம் கண்காணிக்கும் விதத்தில் இருக்க வேண்டும். வாரம் ஒரு முறையாவது சென்று மேற்பார்வை பார்க்கும் தொலைவில் இருக்க வேண்டும். இல்லையென்றால் நான் சொன்னது போலதான் ஆகும்” என்கிறார் கீர்த்தி வர்மன்.