Published:Updated:

கால்நடை கடன் வெற்று அறிவிப்பா? - கண்டுகொள்ளாத கால்நடை துறை பதற்றத்தில் பயனாளிகள்..!

கால்நடை
பிரீமியம் ஸ்டோரி
News
கால்நடை

பிரச்னை

‘‘மத்திய அரசு விவசாயக் கடனைப்போல ஆடு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பவர்களுக்கும் கடன் வழங்கும் திட்டத்தைக் கடந்த மே மாதம் அறிவித்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கால்நடை, கோழி, மீன் வளர்ப்பவர்கள் சுமார் 3.11 லட்சம் பேர் இக்கடன் பெற விண்ணப்பித்து இருந்தார்கள். ஆனால் அதற்கான வழிகாட்டு முறையை மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை உருவாக்காததால் பயனாளிகள் கடன் பெறுவது கேள்விக் குறியாக இருக்கிறது’’ என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

பாலாஜி, நாராயணன்
பாலாஜி, நாராயணன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாலாஜி, “மத்திய அரசின் வேளாண்மைத் துறை வழிகாட்டுதல்படி 5 ஏக்கருக்குக் கீழ் உள்ள சிறு குறு விவசாயிகளுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன் அட்டை (கிஷான் கார்டு) உள்ளவர்களுக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் ஆண்டுக்கு 1.60 லட்சம் கடன் வழங்கப்படும். பயனாளிகள் கூடுதல் கடன் பெற வேண்டுமானால் உரிய உத்தரவாதம் கொடுத்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் பெற முடியும்.

மத்திய அரசு கடந்த மே மாதம் இந்தத் திட்டத்தை மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் விரிவாக்கம் செய்தது. அதன் மூலம் ஆடு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பவர்களுக்கும் கடன் கொடுக்க உத்தரவு பிறப்பித்தது. இந்தியா முழுவதும் 1.50 கோடி பேருக்கு இக்கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை, மாவட்ட அளவிலான தொழில்நுட்ப கமிட்டியை நியமித்துப் பயனாளிகளைத் தேர்வு செய்து வங்கிக்கு அனுப்ப வேண்டும். ஆனால் மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை இதைக் கண்டுகொள்ளவில்லை. அதனால் வங்கிகள் பயனாளிகளைத் தேர்வு செய்யவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பயனாளிகளிடமிருந்து விண்ணப்பத்தைக் கால்நடை மருத்துவர்கள் பெற்று மண்டல இணை இயக்குநர்களிடம் கொடுப்போம். அவர்கள் அந்த விண்ணப்பத்தை மாவட்ட முன்னோடி வங்கிக்குக் கொடுப்பது வழக்கம். ஆனால் இத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளை உணர்ந்து மண்டல இணை இயக்குநர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். எங்களைப் பயனாளிகளிடம் விண்ணப்பத்தைப் பெற்று நேரடியாகக் கிளை வங்கிகளில் கொடுக்கச் சொன்னார்கள். நாங்கள் தமிழகம் முழுவதும் 3.11 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்று வங்கியில் கொடுத்தோம். இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் யாருக்கும் கடன் வழங்கவில்லை. இதனால் பயனாளிகளின் கோபத்திற்கு நாங்கள் ஆளாகிறோம்.

கால்நடை
கால்நடை

இதை உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றால் ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படி கடன் வழங்குமாறு வங்கிகளிடம் கூறச் சொல்கிறார்கள். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படி கொடுத்தால் விவசாயக் கடன் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். நிலம் இல்லாத ஆடு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பவர்களுக்குக் கடன் கிடைக்க வாய்ப்பில்லை. இது தொடர்பாக மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறைக்குக் கடிதம் எழுதியும் இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை’’ என்றார்.

கால்நடை
கால்நடை

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நாராயணன், “என்கிட்ட 6 மாடுக, 50 ஆடுக இருக்குது. இந்த கொரோனா காலத்துல அதுங்களை வளர்க்குறது ரொம்ப சிரமமா இருக்கு. தீவன விலை கூடிப்போச்சு. பால் விலை குறைஞ்சுபோச்சு. இந்த நிலமையில என்ன செய்றதுன்னே தெரியல. இந்தக் கஷ்டகாலத்துல கால்நடைகளை வளர்க்குறவங்களுக்குக் கடன் தர்றதாச் சொன்னாங்க. உடனே எங்க பகுதியில இருக்க கால்நடை மருத்துவர்கிட்ட விண்ணப்பம் கொடுத்தேன். ரெண்டு மாசமாச்சு. இன்னும் கடன் கிடைக்கல. கேட்டா, கிஷான் கார்டு இருக்குறவங்களுக்குத்தான் லோன் அப்படின்னு சொல்றாங்க. பெரும்பாலும் நிலம் இல்லாதவங்கதான் ஆடு, மாடு வளர்க்குறாங்க. நிலம் இருக்குறவங்களுக்கே இன்னும் பாதிபேருக்கு கிஷான் கார்டு இல்லை. இந்த லட்சணத்துல கால்நடை வளர்க்குறவங்களுக்கு எங்க கிஷான் கார்டு கொடுக்கப்போறாங்க. ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்குறவங்களுக்குக் கடன் தர்றோம்னு அறிவிச்சது வெறும் கண்துடைப்பு நாடகம்’’ என்றார்.

வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு விளம்பரம் தேடுவது ஆட்சியாளர்களுக்கு அழகில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்வு செய்து கொடுப்போம்!

கால்நடை கடன் வெற்று அறிவிப்பா? - கண்டுகொள்ளாத கால்நடை துறை
பதற்றத்தில் பயனாளிகள்..!

துபற்றித் தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “இது மத்திய அரசின் திட்டம் என்பதால் அவர்கள்தான் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கித் தர வேண்டும். மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை பயனாளிகளின் பட்டியலைத் தேர்வு செய்து கொடுப்போம். மற்றபடி மாநில அரசின் விலையில்லா கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டம், நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம் அனைத்தும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.