Published:Updated:

மழைக்காலத்தில் கால்நடை பராமரிப்பு!

கால்நடை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை

கால்நடை

மழைக்காலத்தில் கால்நடை பராமரிப்பு!

கால்நடை

Published:Updated:
கால்நடை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை
தோ மழைக்காலம் வந்துவிட்டது. கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பலவிதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மழைக்கால நோய் பாதிப்புகளிலிருந்து தங்களது கால்நடைகளைப் பாதுகாக்க எல்லா நேரங்களிலும் மருத்துவமனையைச் சார்ந்திருக்க முடியாது. அதனால், சில தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, விவசாயிகள் தங்களது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருள்களையும் சுற்றுப்புறங்களில் கிடைக்கும் மூலிகைகளையும் கொண்டு கால்நடைகளுக்குச் சிறிய அளவில் வைத்தியம் பார்க்கலாம்.

இது தொடர்பாகச் சில முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார், தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை மருத்துவ மையத்தின் முன்னாள் தலைவர், பேராசிரியர் புண்ணியமூர்த்தி.

மழைக்காலத்தில் கால்நடை பராமரிப்பு!

மழைக்காலங்களில் ஆடுகளுக்குக் கால்களில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைக் குணப்படுத்த

ஒரு கைப்பிடி துளசி,

ஒரு கைப்பிடி குப்பைமேனி,

4 பல் பூண்டு,

5 கிராம் மஞ்சள்

இவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்து 100 மி.லி நல்லெண்ணெயில் வதக்கி, சூடு ஆறியதும், ஆடுகளின் குளம்பில் தடவ வேண்டும். இது 5 ஆடுகளுக்கு 2 நாள்களுக்கு புண்களில் தடவ போதுமானதாக இருக்கும். உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளம்புகளைக் கழுவி, ஈரத்தைத் துடைத்து அதன் பிறகுதான் மேற்கண்ட மூலிகை மருந்தைத் தடவ வேண்டும். மாடுகளின் கால் குளம்புகளில் புண்கள் ஏற்பட்டாலும் இதே மருந்தைத் தடவலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேற்சொன்ன அளவு ஒரு மாட்டுக்கு இரண்டு நாள்களுக்குத் தடவ போதுமானது. மழைக்காலங்களில் ஆடு, மாடுகளுக்கு சளித் தொல்லை அதிகரிக்கும். அடிக்கடி ஜுரமும் உண்டாகும். இதைக் கட்டுப்படுத்த,

மழைக்காலத்தில் கால்நடை பராமரிப்பு!

தலா 5 கிராம் மிளகு, சீரகம், வெந்தயம்,

10 கிராம் மஞ்சள்,

ஒரு பல் பூண்டு,

தலா ஒரு கைப்பிடி துளசி மற்றும் முருங்கை,

தலா 2 இலைகள் தூதுவேளை, ஆடாதொடை, ஓமவள்ளி

ஆகியவற்றை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து இவற்றோடு 50 கிராம் நாட்டுச்சர்க்கரை கலந்து நாக்கில் தடவ வேண்டும். இந்த அளவு, ஒரு மாடு அல்லது 4 ஆடுகளுக்கு ஒரு வேளைக்குப் போதுமானது. தினமும் இரு வேளை வீதம் மூன்று நாள்களுக்கு இதுபோல் கொடுக்க வேண்டும்.

மழைக்காலத்தில் கால்நடை பராமரிப்பு!

மழைக்காலங்களில் அதிகளவில் கொசுக்கள் உருவாகி மாடுகளைக் கடித்து, ஆழமான புண்களை உருவாக்கி பெரும் ஆபத்தை உருவாக்கும். இந்தப் புண்கள் புரையோடி உயிருக்கே ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, பல வகைகளிலும் கொசுக்களைக் கட்டுப்படுத்த தனி கவனம் செலுத்த வேண்டும். கொட்டகையில் ஈரம், சேறு, சகதி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் அந்தி சாயும் நேரத்தில்தான் கொட்டகைக்குள் கொசுக்கள் அதிகளவில் படையெடுக்கும். எனவே, மாலை 6 மணியளவில் இரும்புச் சட்டியில் பாதியளவு மணலை நிரப்பி அதில் சிறு துண்டுகளாகக் காய்ந்த விறகுகளைப் போட்டு நெருப்பு மூட்டி, நொச்சி, ஆடாதொடை, வேம்பு, எருக்கன் இலைகளைப் போட்டு மூட்டம் போட வேண்டும். சுமார் 2 மணிநேரம் கொட்டகையிலேயே மூட்டம் இருக்க வேண்டும். இதனால் கொசுக்கள் தடுக்கப்படும்.

பகல் நேரங்களில் மாடுகளைக் கொசுக்கள் தாக்காமல் இருக்க, 1 மடல் சோற்றுக்கற்றாழை, 10 ஓமம் இலைகளை ஒன்றாகக் கலந்து அரைத்து நீர் கரைசலாக மாடுகளின் மேல் தடவலாம். மாடுகள் தனது வால் மூலம் கொசுக்களை விரட்ட முடியாத பகுதிகளில் மட்டும் இதைத் தடவினால் போதும். மேற்சொன்ன அளவு 3 மாடுகளுக்குத் தடவுவதற்குப் போதுமானது. சோற்றுக்கற்றாழை வாசனை இருந்தால் மாடுகள் மீது கொசு, ஈக்கள் மொய்க்காது. இதை ஆடுகளுக்குத் தடவக் கூடாது. குளிர்ச்சி தாங்காது. சாரல், பனி, குளிர்ச்சி இவற்றால் கால்நடைகளுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்க, கொட்டகையைச் சுற்றிலும் தார்ப்பாய்கள் அல்லது படுதா அமைத்து கதகதப்பான சூழலை உருவாக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேள், பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்புகள் ஏற்பட்டால் 5 வெற்றிலை, 5 கிராம் மிளகு, 5 கிராம் உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்து நாக்கில் தடவினால், விஷம் முறிந்துவிடும்” என்று ஆலோசனை வழங்கினார்.