பொங்கல் பண்டிகையை `அறுவடைத் திருநாள்’ என்பார்கள். அப்படித்தான், இந்தப் பொங்கலுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற டெல்டா விவசாயிகளின் நம்பிக்கையில், மண்ணை அள்ளிப்போட்டிருக்கிறது கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடர் கனமழை! இதையடுத்து, ‘கண்ணீரும் கம்பலையுமாக இக்கட்டான சூழலில் தவிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கொடுத்து அரசு கரை சேர்க்க வேண்டும்’ என்ற கோரிக்கைக் குரல்கள் எழுந்துள்ளன.

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் விவசாயிகளின் பாதிப்புகளை நம்மிடம் கண்ணீர்மல்க விவரிக்கிறார்...

‘‘டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சுமார் 10.6 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முதல் வாரத்தில், நெற்பயிர்களை அறுவடை செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தார்கள். இந்தநிலையில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால், நெற்பயிர்கள் அனைத்தும் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கிவிட்டன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அறுவடைப் பயிர்கள் மட்டுமல்லாமல், பின் பட்ட சாகுபடி நெற்பயிர்களும் பால்வைத்து பூ பூக்கிற பருவத்தில் பாதிப்படைந்துவிட்டன. கடலை, உளுந்து போன்ற தோட்டக்கலைப் பயிர்களும் அழுகிவிட்டன.

பல வயல்களில் சாய்ந்துகிடக்கும் நெல்மணிகள் முளைவிட்டுவிட்டன. பாடுபட்டு விளைவித்த பயிர் மூழ்கிக் கிடப்பதைப் பார்க்க மனம் சகிக்கவில்லை. மத்தியக்குழு வந்து பார்க்கும் என்கிறார்கள்... அதற்கெல்லாம் அவசியமே இல்லை. உடனடியாக மத்திய அரசு இதை இயற்கைப் பேரிடராக அறிவித்து, ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையைக் காப்பீட்டு நிறுவனங்கள் இன்னும் விவசாயிகளுக்கு வழங்காத நிலையில், சம்பா, தாளடி பயிர்களுக்கும் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளார்கள். எனவே, காலம் தாழ்த்தாமல் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புரெவி, நிவர் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு 600 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 6,000 விவசாயிகள், 6,000 ஹெக்டேர் மட்டுமே பாதிப்படைந்ததாக அதிகாரிகள் கணக்கீடு செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலம்வந்தோம். பட்டுக் கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ‘‘ஒரு ஏக்கருக்கு 35,000 ரூபாயை மூலதனச் செலவாக தமிழக அரசு நிர்ணயம் செஞ்சிருக்கு. அந்த அடிப்படையிலதான் நாங்களும் சாகுபடிப் பயிர்களுக்கு காப்பீடு செய்யறோம். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் இந்த மூலதனச் செலவைவெச்சே நிவாரணம், பயிர் காப்பீடு தர்றாங்க. இப்ப தொடர் மழையில 90 சதவிகித நெற்பயிர் மூழ்கி, வீணாப்போச்சு. அறுவடைக்குப் பின்னாடி வைக்கோலை வித்தா, அதுல ஒரு தொகை கிடைக்கும். இப்ப பயிரெல்லாம் அழுகிட்டதால, அதுவும் போயிடுச்சு. அதனால, எங்களோட உழைப்பு, லாபம் எல்லாத்தையும் கணக்குல எடுத்துக்கிட்டு, முழுமையான நிவாரணம் வழங்கணும்.

அதேபோல அரசு நெல் கொள்முதல் நிலையங்கள்ல, மழையில நனைஞ்சிட்டதா சொல்லி ஈரப்பதம்கொண்ட நெல்லைக் கொள்முதல் செய்ய மறுப்பாங்க. இதுலயும் அரசு தனிக்கவனம் செலுத்தணும். கடந்த 35 வருஷத்துல இல்லாத அளவுக்கு இந்தமுறைதான், விவசாயிகள் முழுமையாகச் சாகுபடி செஞ்சிருந்தோம். நல்ல விளைச்சல் கிடைச்சது. ஆனா, அதை அறுவடை செய்ய முடியலைங்க. எல்லாம் விளைஞ்சும் வீணாப்போச்சு... எங்களுக்கு இந்தப் பொங்கல் சோகப் பொங்கலாக மாறிடுச்சு. எப்படியாவது நிதி வாங்கிக் கொடுத்து இந்த அரசாங்கம்தான் எங்களை மீட்கணும்... எங்களுக்கு வேற வழி தெரியலை’’ என்றவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

தஞ்சாவூர் ஆட்சியர் கோவிந்த ராவிடம் பேசினோம். ‘‘நல்ல மகசூலை அறுவடை செய்யக்கூடிய நேரத்தில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து, கணக்கெடுத்துவருகிறோம். பயிர் பாதிப்புகளை உயரதிகாரிகள் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார்.

அறுவடை முடிந்து மகிழ்ச்சியும் உற்சாகமுமாக பொங்கலைக் கொண்டாட வேண்டிய டெல்டா விவசாயிகளுக்கு, இது கசப்பும் கண்ணீரும் நிறைந்த சோகப் பொங்கலாக மாறிப்போனது காலம் செய்த கொடுமை!

விவசாயிகள் பாதிப்பு ஒருபக்கம் என்றால்... தொடர் மழையால் குடிசைகள் பலவும் பொலபொலவென கரைந்தும் இடிந்தும் விழுந்திருப்பது சாமானிய விவசாயக் கூலிகளை ஒதுங்கக்கூட இடமில்லாமல் செய்து, கண்ணீரில் கதறவைத்திருக்கிறது. குறிப்பாக, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணிப் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம்.

மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 11-ம் தேதி வீசிய திடீர் சூறாவளிக் காற்று அப்பகுதி மக்களை மிரளவைத்தது. மரங்கள் வீடுகளின் மீது விழுந்தும், வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தும் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. எட்டு வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமடைந்தன. கிராமத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. அரசு சார்பில் கிராம மக்களுக்கு அன்றைய தினம் மட்டும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. வீடுகளையும் உடைமைகளையும் இழந்தவர்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

‘‘தொடர்ச்சியாக மழை பெய்வதாலும், பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளடங்கி இருப்பதாலும் அங்கெல்லாம் அரசு உதவிகள் போய்ச்0 சேரவில்லை. மழை நின்ற பிறகுதான் முழுமையான சேத விவரம் தெரியவரும்’’ என்று டெல்டாவிலிருந்து வரும் தகவல்கள் கவலையைக் கூட்டுவதாகவே இருக்கின்றன.