‘‘பசுமை விகடன் இதழ்களைப் பத்திரமா வெச்சிருக்கேன்!’’

திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த்

‘‘இயற்கை விவசாயம் மேலயும், தோட்டம் போடுறதுலயும் சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆர்வம் இருந்துச்சு. சொந்தமா தோட்டம் வாங்கின பிறகு, இயற்கை விவசாயம் எப்படிச் செய்யணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்தது பசுமை விகடன்தான். அத்தனை பசுமை விகடன்களையும் பத்திரமா வெச்சிருக்கேன். கால் ஏக்கருக்குக் கத்திரிக்கா செடி வளர்க்கணும்னாலும் சரி, நிலக்கடலை விதைக்கணும்னாலும் சரி, அது தொடர்பா பசுமை விகடன்ல யாராவது விவசாயி பேசியிருக்காரானு தேட ஆரம்பிச்சிடுவேன். ஒரு ஏக்கருக்கு, இந்தப் பயிருக்கு இவ்வளவுதான் முதலீடு, என்னென்ன இயற்கை உரங்கள் போடணும். எவ்வளவு லாபம் கிடைக்கும்னு சம்பந்தப்பட்ட விவசாயிகளே பேசறது ரொம்ப நம்பகத்தன்மையோட இருக்கும். எல்லா விவசாயிகளையும் இயற்கை விவசாயம் பக்கம் ஈர்க்கிற ஓர் இதழா பசுமை விகடன் இயங்கிகிட்டு இருக்கு வாழ்த்துகள்!’’

“பசுமை விகடன் படிச்சிட்டு விவசாயியானவங்க நிறைய பேர்!”

திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினர் (தி.மு.க)

“வேளாண் தொழிலின் பெருமைகளையும், அதனால் கிடைக்கும் நிறைவையும் எடுத்துரைக்க ஒரு இதழ் இருக்குன்னா அது ‘பசுமை விகடன்’தான். முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த விஷயங்களைப் பத்தி மட்டும் எழுதுறதுக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழ், ஒரு துணிச்சலான முயற்சி. ‘விவசாயம் பண்றவங்கள்லாம் எங்க புத்தகம் படிக்கப் போறாங்க’ன்னு பொதுவா ஒரு கருத்து இருக்கு. அதைப் பொய்யாக்கியிருக்குப் பசுமை விகடன். தமிழ்நாட்டுல இருக்குற பெரும்பாலான விவசாயிங்க இந்த இதழைப் படிக்கிறாங்க. இன்னும் சொல்லணும்னா, பசுமை விகடன் படிச்சிட்டு விவசாயியானவங்க இங்க நிறைய பேர். அந்த வரிசையில நானும் இருக்கேன். லால்குடிக்குப் பக்கத்துல எனக்குச் சொந்தமான 15 ஏக்கர்ல தென்னை, கரும்பு, நெல் பயிரிட்டு விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். விவசாயம் செய்யுறதுக்கான ஆர்வத்தை எனக்குள்ள விதைச்சது பசுமை விகடன்தான். எனக்கு மட்டுமில்ல, இன்னும் எத்தனையோ பேருக்கு வேளாண் தொழில் தொடங்குறதுக்கான ஐடியாவையும், அதுல சாதிக்கிறதுக்கான உந்துதலையும் ஏற்படுத்திட்டு இருக்கு.”

-மா.அருந்ததி

“பசுமை விகடனால பயனடையும் வாசகர்கள்ல நானும் ஒருத்தி!”

நடிகை ஊர்வசி

“இயற்கை வாழ்வியல்மீது பல வருஷத்துக்கு முன்பு எனக்கு ஆர்வம் ஏற்பட்டுச்சு. இயற்கை ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள் பலருடனும் அப்போது தொடங்கிய நட்பு இப்ப வரை தொடருது. அவங்கள்ல பலரும் பசுமை விகடன் வாசகர்கள். அவங்க மூலமாதான் பசுமை விகடன் எனக்கு அறிமுகமாச்சு. அந்த நண்பர்கள்மூலம் இயற்கை விவசாய வழிமுறைகளையும் தெரிஞ்சுக்கிறேன். என்னோட வாசிப்பு ஆர்வத்துக்கு இந்த இதழ் அறிவுத்தீனி கொடுக்குது. பசுமை விகடன் மூலம்தான் நம்மாழ்வார் ஐயாவைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். இயற்கை வாழ்வியலுக்கு நான் மாற ஆரம்பிச்சதுல நம்மாழ்வார், பசுமை விகடன் மற்றும் இயற்கை ஆர்வலர்களாக இருக்குற நண்பர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் இல்லாம, இயற்கை விவசாயத்துக்கும், இயற்கை விவசாயிகளின் நலனுக்காகவும் இந்தியாவுல மிகச் சிறப்பா வெளியாகுற ஒரே பத்திரிகை இதுதான். அதனால இந்தப் பத்திரிகைமேல எனக்குத் தனி மதிப்பு உண்டு. பசுமை விகடனால பயனடையும் வாசகர்கள்ல நானும் ஒருத்தின்னு பெருமையா சொல்வேன்.”

-கு.ஆனந்தராஜ்

“திரைப்படத் துறையில பலரும் மாடித்தோட்டம் போடுறதுல இறங்கியிருக்காங்க!”

நடிகை சீதா

“சில வருஷத்துக்கு முன்புதான் மாடித்தோட்ட விவசாயத்தில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டுச்சு. அப்போ நான் படிச்ச பத்திரிகைகளில் பசுமை விகடனும் ஒன்று. என் மாடித்தோட்டம் பத்தி முதன் முதல்ல பசுமை விகடன்லதான் பேட்டியும், அதன் யூடியூப் சேனல்ல வீடியோவும் வெளியாச்சு. அதைப் பார்த்துட்டு ஏராளமானோர் என்னைப் பாராட்டினாங்க. ‘உன்னோட மாடித்தோட்ட வீடியோவைப் பார்த்துத்தான் திரைப்படத் துறையில பலரும் மாடித்தோட்டப் பராமரிப்புல இறங்கியிருக்காங்க’ன்னு நடிகை ஜெயசுதா அக்கா பாராட்டினது மறக்க முடியாத அனுபவம். இதுக்கெல்லாம் பசுமை விகடன்தான் காரணம். அதன் யூடியூப் சேனலைப் பார்த்தும் பயனடையிறேன். அதுல வரும் வெற்றி விவசாயிகள் சிலர்கிட்ட பயனுள்ள ஆலோசனைகளையும் கேட்டிருக்கேன். இதன் மூலம் நிலத்துல விவசாயம் செய்யணும்ங்கிற என்னோட ஆர்வம் கூடிட்டே இருக்கு. பசுமை விகடனைப் படிச்சுத்தான் பஞ்சகவ்யா, மீன் அமிலம் தயாரிக்கக் கத்துகிட்டு, தொடர்ந்து தயாரிக்கிறேன். பசுமை விகடன், விவசாயிகள் அனைவரும் படிச்சுப் பயனடைய வேண்டிய முதன்மையான பத்திரிகை.”

-கு.ஆனந்தராஜ்

“ராக்கெட்டுக்குப் ‘பசுமை’னு பெயர் வைத்தேன்!”

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்

“பசுமை விகடன் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை நான் ஒரு இதழைக்கூடப் படிக்கத் தவறவிட்டதில்லை. 14 வருடங்களுக்கு முன்பு வெளியான பசுமை விகடனின் முதல் இதழிலேயே நான் எழுதிய கட்டுரை வெளியாகியிருக்கு. கஷ்டப்பட்டு வெற்றியடைந்த நிறைய விவசாயிகளைப் பசுமை விகடன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கு. ஒவ்வொரு இதழிலும் விவசாயிகள் குறித்த கட்டுரைகள் வரும். அந்தக் கட்டுரைக்குக் கீழே அவங்களுடைய அலைபேசி எண்ணையும் கொடுத்திருப்பாங்க. அதன் மூலமா நிறைய விவசாயிகளைத் தொடர்புகொண்டு பேசியிருக்கேன். நான் தொடர்ச்சியா விவசாயம் குறித்த படங்கள் எடுக்கப் பசுமை விகடனும் முக்கியக் காரணம். என்னோட ‘பேராண்மை’ படத்துல இந்தியா அனுப்புற ராக்கெட்டுக்குப் ‘பசுமை’னு பெயர் வெச்சிருப்பேன். அந்தப் பெயர் ‘பசுமை விகடன்’ படிக்கும்போது கிடைச்ச ஐடியாதான். தொடர்ந்து பசுமை விகடன் இதே மாதிரி நிறையப் பயனுள்ள கட்டுரைகளை வெளியிடணும். விவசாயத்துக்கும், விவசாயிகளுடைய உரிமைகளுக்கும் குரல் கொடுக்கணும்.”

-மா.அருந்ததி

‘‘அரசாங்கம் செய்ய வேண்டிய பணியைப் பசுமை விகடன் செய்துகொண்டிருக்கிறது!’’

இயக்குநர் மற்றும் நடிகர் பொன்வண்ணன்

‘‘ஈரோடு, மொடக்குறிச்சிதான் நான் பிறந்த கிராமம். விவசாயக் குடும்பம். நான் படிக்கிற புத்தகங்கள், நாவல்கள்கூட விவசாயம் சார்ந்ததாகவே இருக்கும். நான் இயக்கிய திரைப்படங்களில்கூட அதன் தாக்கம் இருக்கும். ஒருகட்டத்தில் நகர வாழ்க்கைக்குள்ள தவிச்சுட்டு இருந்த நேரத்தில், என்னைச் சடாரென வயல்வெளியில் இறக்கிவிட்டது பசுமை விகடன். நம் விவசாயத்தின் கடந்த கால மரபுகளை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பசுமை விகடன்.

நான் கடந்த 14 வருடங்களாகப் பசுமை விகடனைத் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். புதிய விவசாயக் கருவிகளையும் விவசாய நுணுக்கங்களையும் அறிமுகப்படுத்துவது, அதைச் சொல்பவர்களின் தொடர்பு எண்ணை வெளியிடுவது என விவசாயம் குறித்த நிறைவான புத்தகம் பசுமை விகடன். விவசாயத்துக்கும் தமிழ் மண்ணுக்கும் நம்மாழ்வார் எப்படிப் பங்களிப்பு செய்தாரோ, அதே போன்றதொரு பங்களிப்பைப் பசுமை விகடனும் செய்து வருகிறது. அரசாங்கமும், மரபு சார்ந்த அமைப்புகளும் செய்ய வேண்டிய பணியைப் சமூகத்தின் மேல் இருக்கிற அக்கறையால் பசுமை விகடன் செய்து வருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.’’

- ஆ.சாந்தி கணேஷ்

பசுமை விகடன் சேவை... பஞ்சகவ்யாவின் மகிமை!

ஹெச்.ராஜா, பா.ஜ.க மூத்த தலைவர்.

‘‘கோயம்புத்தூரில் நடைபெற்ற பசுமை விகடன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதை மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். விழாவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ‘ஜீரோபட்ஜெட்’ பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் இந்தியில் பேசியதை மொழியாக்கம் செய்தேன். அப்போதிருந்து தொடர்ந்து பசுமை விகடனைப் படித்து வருகிறேன். பசுமை விகடன் வருவதற்கு முன்பு ஏராளமான கலப்பினப் பசுக்களை வளர்த்து வந்தேன். பசுமை விகடன் படித்த பிறகுதான் நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்தேன்.

அதுமட்டுமல்லாது பசுமை விகடனைப் படித்து இயற்கை விவசாயத்தில் ஒற்றை நாற்று நடவு முறையில் நெல் சாகுபடி செய்து, ஒரு ஏக்கரில் எந்த விதமான ரசாயன உரமும் இல்லாமல் 28 மூட்டை மகசூல் எடுத்தேன். அப்போது தயாரித்து வைத்திருந்த பஞ்சகவ்யா கொஞ்சம் மிச்சமாகியிருந்தது. மீண்டும் பஞ்சகவ்யா தயாரிப்பதற்காக அந்த டிரம்மைக் கழுவி ஒரு கொய்யா மரத்தில் ஊற்றினோம். அதிசயம்... ஒரே வாரத்தில் அந்த மரம் முழுக்கப் பூ பூத்துவிட்டது. பஞ்சகவ்யாவின் மகிமையை அப்போதுதான் கண்கூடாகப் பார்த்தேன். விவசாயிகளுக்கு மிகப்பெரிய சேவையாற்றி வரும் பசுமை விகடன் மென்மேலும் வளர வேண்டும்.’’

-எம்.புண்ணியமூர்த்தி