Published:Updated:

மரபணு கடுகு சோதனைக்கு அனுமதி!

கடுகு

இந்த கடுகு களைக்கொல்லிகளை சகிக்கும்தன்மை கொண்டது ஆகும். மேலும் இதனால் உயிரியல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படலாம். இந்த ஜி.எம் கடுகு உணவில் மற்றும் மண்ணில் கொடிய அமிலங்களை ஏற்படுத்தும்.

மரபணு கடுகு சோதனைக்கு அனுமதி!

இந்த கடுகு களைக்கொல்லிகளை சகிக்கும்தன்மை கொண்டது ஆகும். மேலும் இதனால் உயிரியல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படலாம். இந்த ஜி.எம் கடுகு உணவில் மற்றும் மண்ணில் கொடிய அமிலங்களை ஏற்படுத்தும்.

Published:Updated:
கடுகு

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (GEAC), ஜி.எம் கடுகை வணிக ரீதியாகச் சாகுபடி செய்யச் சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளது.

கடுகு பயிர்
கடுகு பயிர்

கடந்த அக்டோபர் 18-ம் தேதி நடந்த கூட்டத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்(ICAR) வழிகாட்டுதலின்படி ஜி.எம் கடுகை வணிகத்திற்காகச் சாகுபடி செய்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதைச் சோதனை செய்ய மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. மேலும் 136-வது GEAC கூட்டப் பரிந்துரைப்படி, ஜி.எம் கடுகினால் தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கை உயிரினங்களின் மீது ஏற்படும் தாக்கம் குறித்தும் இரண்டு ஆண்டுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

தற்போது சோதனை சாகுபடி செய்யப்படவுள்ள ஜி.எம் கடுகு DMH-11 ரகம் ஆகும். இந்த ரகம் டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தாவர மரபணு மாற்ற மையத்தால் (CGMCP) கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

ஜி.எம் கடுகு
ஜி.எம் கடுகு
OpIndia

மத்திய அரசின் இந்த நகர்வால் அதிக விளைச்சல், உணவு உற்பத்தி செலவு குறைதல், பூச்சிக்கொல்லி தேவை குறைதல் போன்ற பல நன்மைகள் ஏற்படும் என இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கடுகு களைக்கொல்லிகளை சகிக்கும் தன்மை கொண்டது ஆகும். மேலும் இதனால் உயிரியல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படலாம். இந்த ஜி.எம் கடுகு உணவில் மற்றும் மண்ணில் கொடிய தீங்குகளை ஏற்படுத்தும் என்று இதன் எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.

மரபணு கடுகு 
சோதனைக்கு அனுமதி!

இதுவரை இந்திய அரசு bt பருத்தி வகையை மட்டுமே வணிக ரீதியாகச் சாகுபடி செய்ய அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.