Published:Updated:

குப்பையிலிருந்து பசுமை உரம்; வெறும் 3 ரூபாய்க்கு வழங்கும் சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி

குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியால் தயாரிக்கப்பட்ட பசுமை உரமானது, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த உரத்தின் விலையை 17 ரூபாய் குறைத்து, 3 ரூபாயாக அறிவித்துள்ளது மாநகராட்சி.

குப்பையிலிருந்து பசுமை உரம்; வெறும் 3 ரூபாய்க்கு வழங்கும் சென்னை மாநகராட்சி!

குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியால் தயாரிக்கப்பட்ட பசுமை உரமானது, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த உரத்தின் விலையை 17 ரூபாய் குறைத்து, 3 ரூபாயாக அறிவித்துள்ளது மாநகராட்சி.

Published:Updated:
சென்னை மாநகராட்சி

சென்னையில், மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளநிலையில், 10 மண்டலங்களில் தனியார் நிறுவனங்களும், மீதமுள்ள ஐந்து மண்டலங்களில் மாநகராட்சியும் குப்பைகளைச் சேகரிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இப்பணிகளில், 19,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என முதலில் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை உரம் தயாரிக்கும் நிலையங்களுக்கும், மக்காத குப்பைகள் மற்றும் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இதற்காக 208 உரம் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து நாள் ஒன்றுக்கு 450 டன் மக்கும் கழிவுகள் பதனிடப்பட்டு உரமாக்கப்படுகின்றன.

Sanitary Worker (Representational Image)
Sanitary Worker (Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இப்படி சென்னை மாநகராட்சியால் தயாரிக்கப்பட்ட பசுமை உரமானது, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த உரத்தின் விலையை 17 ரூபாய் குறைத்து, 3 ரூபாயாக அறிவித்துள்ளது மாநகராட்சி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்று ரூபாய்க்கு உரம் கொடுக்கப்படுவதால் விவசாயிகள் அதிக பலனடைவதோடு, வீட்டுத்தோட்டம் வைத்துள்ளவர்களும் பயனடைவார்கள்.

Terrace Garden (Representational Image)
Terrace Garden (Representational Image)
Photo: Vikatan / Vijay.T

இவ்வாறு குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை விவசாயிகள் தங்கள் நிலத்துக்கும், மக்கள் தங்கள் தோட்டம் மற்றும் செடிகளுக்கும் வாங்கி பயன்படுத்துவதால் சென்னையைக் குப்பையில்லாத பகுதியாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் மக்களும் பயனடையலாம்; இதற்கு மக்களின் முழு ஆதரவு தேவையென அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism