Published:Updated:

எலும்பை வலுவாக்கும் காட்டுயானம்; கிராமிய திருவிழாவில் திரண்ட இயற்கை ஆர்வலர்கள்!

கிராமிய திருவிழாவில்

99 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற விகிதத்தில் கலந்து பொது விநியோக அமைப்பில் விநியோகிக்க இருக்கிறார்கள்.

எலும்பை வலுவாக்கும் காட்டுயானம்; கிராமிய திருவிழாவில் திரண்ட இயற்கை ஆர்வலர்கள்!

99 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற விகிதத்தில் கலந்து பொது விநியோக அமைப்பில் விநியோகிக்க இருக்கிறார்கள்.

Published:Updated:
கிராமிய திருவிழாவில்

பாரம்பர்ய அரிசி வகைகள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாகவும் இயற்கை விவசாயிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் கிராமிய திருவிழா நடைபெற்றது.

பாரம்பர்ய அரிசி வகைகள், மண்பாண்டங்கள், குளியல் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், பதநீர், அழகுப் பொருள்கள் என விழா கோலாகலமாக இருந்தது. நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் தலைமையில் கலைக்குழு பாடலுடன் ஆடியும் மக்களை சந்தோஷப்படுத்தினர். விழாவுக்கு விதைகளைப் பாதுகாக்கும் விதைகளுக்காக வேலை செய்யும் பல விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வந்தனர். குழந்தைகளிடம் பாரம்பர்ய உணவு வகைகள் கொண்டு செல்லும் வகையில் அவர்களுக்கு பிடித்த வகையில் கறுப்புக்கவுனி அரிசியால் செய்த ஐஸ்க்ரீம் போன்றவை விழாவில் விற்கப்பட்டன.

கிராமிய திருவிழாவில்
கிராமிய திருவிழாவில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழாவில் மண்புழு விஞ்ஞானியும் மாநில வளர்ச்சிக் குழு உறுப்பினருமான சுல்தான் இஸ்மாயில் பேசியபோது, ``குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமென்றால் தாயை ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு குழந்தைக்கு ஊசி குத்தக் கூடாது. அதுபோல நாம் சாப்பிடும் அரிசியும் பிற உணவுப் பொருள்களிலும் ஊட்டச்சத்துகள் இல்லை. ஏனென்றால், மண் வளம் குன்றிவிட்டது. மண்ணைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் அதிகமாகவே இருக்கு. இன்று மண்ணை பாக்கெட்டில் விற்கும் சூழல் உள்ளது; இது ஆபத்தானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்று அரிசியை மாவாக்குகின்றனர். மாவாக்கிய பின்பு இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி6, பி12 சேர்த்து மீண்டும் அரிசி வடிவத்தில் உருவாக்குகின்றனர். 99 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற விகிதத்தில் கலந்து பொது விநியோக அமைப்பில் விநியோகிக்க இருக்கிறார்கள். இந்த அரிசியை சாப்பிடுவதால் உடல்நலம்தான் பாதிக்கப்படும்” என்றார்.

பேச்சாளர்கள்
பேச்சாளர்கள்

காரைக்காலை சேர்ந்த இயற்கை விவசாயி பாஸ்கர் கடந்த 18 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இவர் பேசியபோது, ``பாரம்பர்ய நெல் வகைகளைச் சேமிக்கும் விதமாகப் பணியைத் தொடங்கினேன். இன்று பல நெல் வகைகளைச் சொந்த நிலத்தில் சாகுபடி செய்து வருகிறேன். பாரம்பர்ய அரிசி வகைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பாரம்பர்ய நெல் வகைகள் இயற்கையாகவே அதிக விளைச்சல் தரக்கூடியவை. அதேபோன்று அதிக மருத்துவ குணங்களும் உள்ளன. கறுப்புக்கவுனி அரிசியில் உள்ள ஆந்தோசைனின் உடலுக்கு நல்லது. கறுப்புக்கவுனி, காட்டுயானம் போன்ற பாரம்பர்ய அரிசி வகைகள் உடலில் சர்க்கரை அளவைக் குறைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காட்டுயானம் எலும்பை வலுவாக்க உதவும். மாப்பிள்ளை சம்பா நரம்புகளை வலுவாக்கும். கருங்குறுவை அரிசி உடல் கழிவுகளை வெளியேற்றும். இந்த அரிசியானது அன்னக்காதி என்னும் சித்த மருந்து தயாரிக்க பயன்படும். பெண்களுக்கு பூங்கார் அரிசி ரொம்ப நல்லது. பூங்கார் கருப்பையை சுத்தப்படுத்தும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க உதவும்.

பாரம்பர்ய நெல் வகைகள்
பாரம்பர்ய நெல் வகைகள்

காட்டுயானம் எலும்பை வலுவாக்க உதவும். மாப்பிள்ளை சம்பா நரம்புகளை வலுவாக்கும். கருங்குறுவை அரிசி உடல் கழிவுகளை வெளியேற்றும். இந்த அரிசியானது அன்னக்காதி என்னும் சித்த மருந்து தயாரிக்கப் பயன்படும். பெண்களுக்கு பூங்கார் அரிசி ரொம்ப நல்லது. பூங்கார் கருப்பையை சுத்தப்படுத்தும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவும்” என்றார்.

மண்வாசனை மேனகா பேசும்போது, ``குழந்தைக்கு நல்ல உணவைக் கொடுக்க வேண்டும் என்ற தேடல் மண்வாசனையை தொடங்கி வைத்தது. நம்மாழ்வார் ஐயாவை முதலில் சந்தித்தபோது, `பாரம்பர்ய அரிசியை கையில் எடுத்து சென்னையில் உள்ள மக்களுக்கு காட்சிப்படுத்துங்கள்; வாழ்வாதாரத்தை இயற்கை பார்த்துக்கொள்ளும்' என்றார்.

பாஸ்கருக்கு விருது வழங்கும் சுல்தான் இஸ்மாயில்
பாஸ்கருக்கு விருது வழங்கும் சுல்தான் இஸ்மாயில்

மண்வாசனை, ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் 214 பாரம்பர்ய உணவுகளை சமைத்து சாதனை படைத்துள்ளது. பாரம்பர்ய அரிசி வகைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதுதான் மண்வாசனையின் நோக்கம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism