Published:Updated:

மாடுகளுக்கு அங்கன்வாடி - சத்தீஸ்கர் அரசின் அதிரடி!

கோட்டான் (மாட்டுப் பட்டி)
பிரீமியம் ஸ்டோரி
கோட்டான் (மாட்டுப் பட்டி)

திட்டம்

மாடுகளுக்கு அங்கன்வாடி - சத்தீஸ்கர் அரசின் அதிரடி!

திட்டம்

Published:Updated:
கோட்டான் (மாட்டுப் பட்டி)
பிரீமியம் ஸ்டோரி
கோட்டான் (மாட்டுப் பட்டி)

மாடு வளர்க்க விருப்பமிருந்தும், அதன் பராமரிப்பு யோசிக்க வைக்கிறது. சம்பளமே வாங்காமல் தினமும் நம் மாடுகளை யாராவது ஓட்டிக்கொண்டு போய், மேய்த்து, மாலையில் வீட்டில் கொண்டுவந்து விட்டால் எப்படி இருக்கும்... நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா... இது கற்பனையல்ல; உண்மை.

பூபேஸ் பாகல், பிரசன்னா
பூபேஸ் பாகல், பிரசன்னா

இந்த அதிசயம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துவருகிறது. வைக்கோல் எரிப்பு, சாகுபடிப் பரப்பு குறைவு மற்றும் கிராமப்புறப் பொருளாதாரம் ஆகியவைதான் அந்த மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகள். அந்த மூன்று பிரச்னைகளையும் ஒரே திட்டத்தில் சரிசெய்திருக்கிறார் முதலமைச்சர் பூபேஷ் பாகல். நம் ஊரைப்போல சத்தீஸ்கர் மாநிலத்தில் மாடுகளைக் கட்டிவைப்பதில்லை. கயிறு இல்லாமல் அவை தாமாக அலையும். ஒவ்வொரு கிராமத்திலும், ஊர்ப் பொது இடத்தில் மாடுகள் தங்கும். காலையில் மாட்டு உரிமையாளர்கள் அவற்றிலிருந்து பால் கறந்துகொள்வார்கள். பிறகு, மாடு மேய்ப்பவர்கள் மூலம் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் மாடு மேய்க்க நான்கு பேர் வரை இருக்கிறார்கள். அவர்கள்தான் மொத்த மாடுகளையும் மேய்ச்சலுக்கு அழைத்துப் போகிறார்கள். மாட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு விளைச்சலில் குறிப்பிட்ட அளவைக் கூலியாகக் கொடுத்துவிடுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டி
மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டி

மேய்ச்சலுக்குப் போகும் மாடுகள் பயிர்களை மேய்ந்துவிடுவது சர்வசாதாரணமான நிகழ்வு. அதனால் முதல் போகம் அறுவடை முடிந்த பிறகு பெரும்பாலும் யாரும் சாகுபடி செய்வதில்லை. நிலத்தில் வேலி இருப்பவர்களுக்கு மட்டுமே இரண்டாம் சாகுபடி சாத்தியம். அங்கு பெரும்பாலான நிலங்களில் வேலி இருக்காது. அதனால் இரண்டாவது சாகுபடி மிகவும் குறைந்த பரப்பில் மட்டுமே செய்யப்படுகிறது.

மாடுகளுக்குத் தீவனம்
மாடுகளுக்குத் தீவனம்

சத்தீஸ்கர் மாநிலம் முழுக்க முக்கியப் பயிராக இருப்பது நெல். அதனால் பார்க்கும் இடமெல்லாம் வைக்கோல் இருக்கும். பெரும்பாலான விவசாயிகள் மாடுகளுக்குத் தேவையான வைக்கோலை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை தீவைத்து எரித்துவிடுகிறார்கள். இதனால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. அதோடு பயிர் செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. இந்த இரண்டு சிக்கல்களும்தான் முக்கியப் பிரச்னைகள். தற்போது இதைத் தீர்த்துவைத்திருக்கிறது முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான `நர்வா, கர்வா, குர்வா, பாடி.’ நீர்நிலைகள் பாதுகாப்பு, கால்நடைகள் பராமரிப்பு, கிராமப்புற வருமானத்தை உயர்த்தல், வீட்டுத்தோட்டம் அமைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது அந்தத் திட்டம்.

கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பு

கால்நடைப் பராமரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டிருக்கிறது `கோட்டான்.’ அதாவது, மாட்டுப் பட்டி. ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் மிகப்பெரும் பரப்பில் வேலி அமைத்து, மாட்டுப் பட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாடுகளை உரிமையாளர்கள் பராமரிக்கத் தேவையில்லை. அரசாங்கமே மாடுகளைப் பராமரித்துக்கொள்ளும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசே மாடுகளை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலையில் பால் கறந்தவுடன் மாடுகளை அனுப்பிவிட்டால் போதும். அவற்றைக் கோட்டானில் அடைத்துவைத்து, தீவனம் போட்டு, தண்ணீர் கொடுத்துப் பராமரித்து மாலை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.

சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு
சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு

தானத்தில் சிறந்தது வைக்கோல் தானம்!

நம் ஊரில் குழந்தைகளைப் பால்வாடிக்கு (அங்கன்வாடி) அனுப்புவதுபோல், அங்கு மாடுகளைக் கோட்டானுக்கு அனுப்புகிறார்கள்.

ஊரிலுள்ள மாடுகள் முழுவதும் ஒரே இடத்தில் அடைக்கப்படுவதால், பயிர்களுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. இதனால் இந்த ஆண்டு இரண்டாம் பருவத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். `தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம்’ என்பது பொதுவான வாசகம். ஆனால் சத்தீஸ்கரில், `தானத்தில் சிறந்த தானம் வைக்கோல் தானம்’ என்று பிரசாரம் செய்கிறது அரசு.

மாடுகளுக்கு அங்கன்வாடி - சத்தீஸ்கர் அரசின் அதிரடி!

எரிக்கும் வைக்கோலை அரசு தானமாகப் பெற்றுக்கொள்கிறது. அதைக் கோட்டானில் இருக்கும் மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துகிறார்கள். பசுந்தீவனச் சாகுபடியையும் செய்கிறார்கள். வைக்கோல் தானமாகக் கொடுக்கும் விவசாயிகள் குடியரசு தினம், சுதந்திர தினம் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுகிறார்கள்.

மாடுகளை உரிமையாளர்கள் பராமரிக்கத் தேவையில்லை. அரசாங்கமே மாடுகளைப் பராமரித்துக்கொள்கிறது. இது முதலமைச்சரின் சிறப்புத் திட்டம். இதில் அதிக கவனம் செலுத்துகிறார்.

இதனால் தற்போது அங்கு வைக்கோலை எரிப்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 2,000 இடங்களில், `கோட்டான்கள்’ என அழைக்கப்படும் மாட்டுப் பட்டி அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு கோட்டானில் சராசரியாக 2,000 மாடுகள் வரை பராமரிக்கப்படுகின்றன.

சேத்தன்லால்
சேத்தன்லால்

அங்கு கிடைக்கும் சாணத்தைவைத்து மண்புழு உரம், இயற்கை இடுபொருள்கள், வறட்டி, மண்சாணத் தொட்டி போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை விற்பனை செய்வதன் மூலம் பஞ்சாயத்துக்கு வருமானம் கிடைக்கிறது.

வளாகத்தைச் சுற்றி வந்தோம். கால் ஏக்கர் நிலத்தில் வேலி அமைக்கப்பட்டு உள்ளே மாடுகள் அடைக்கப்பட்டுள்ளன. வேலிக்குள் ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டிகள், தீவனத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாடுகள் ஓய்வெடுக்க நிழலுக்காகக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நான்கு புறமும் மரங்கள் நிழல் தந்துகொண்டிருந்தன. அருமையான சூழலில், தண்ணீர்த் தொட்டிகளில் சில மாடுகள் தண்ணீர் அருந்திக்கொண்டிருந்தன. சில மாடுகள் வைக்கோலைச் சுவைத்துக் கொண்டிருந்தன. பெரும்பாலான மாடுகள் நிழலில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வளாகம் முழுவதும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்துப் பயன்படுத்தப்படுகிறது. ஒருபக்கம் பெண்கள் குழுவினர் வளர்க்கும் கோழிப் பண்ணை இருந்தது. மேலே கோழி, கீழே தொட்டியில் மீன் என்ற முறையில் தொட்டிமீது பரண் அமைத்து, கோழிகளை வளர்த்துவருகிறார்கள். முழுக்க அந்தப் பகுதியிலுள்ள நாட்டுக்கோழிகள். மற்றொரு புறம் மாட்டுச் சாணம் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. மற்றோர் இடத்தில் மாட்டுச் சாணம், மண் கலந்து நர்சரி தொட்டி தயாரிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அமைதியான முறையில், சமூக மாற்றமும் கிராமப்புற வளர்ச்சியும் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தன.

மாடுகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள்
மாடுகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள்

தம்தரி மாவட்டம், சேமராபி என்ற கிராமத்திலுள்ள மற்றொரு கோட்டானைப் பார்வையிட்டோம். அங்கிருந்த பஞ்சாயத்துத் தலைவர் சேத்தன்லால் திவாங்கரிடம் பேசினோம். ‘‘இந்தத் திட்டம் வந்த பிறகு விவசாயிகளின் வேலை குறைந்திருக்கிறது. முன்பெல்லாம் மாடுகளுக்கு பயந்து இரண்டாவது போகம் சாகுபடி செய்ய மாட்டோம். இந்த ஆண்டு அதிக பரப்பில் இரண்டாவது போகம் சாகுபடி செய்யத் தயாராகிவருகிறோம்.

இதனால் உற்பத்தி அதிகரிக்கும். கூடுதல் வைக்கோலும் கிடைக்கும். இந்தக் கோட்டானில் கிடைக்கும் சாணம் மூலமாக வறட்டி செய்கிறோம். அதுபோக மண்புழு உரம், ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரம் தயார்செய்கிறோம்.

மாடுகளுக்கு அங்கன்வாடி - சத்தீஸ்கர் அரசின் அதிரடி!

இந்தப் பணிகளுக்கு 100 நாள் பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம். சில பணிகளை மகளிர் குழுக்கள் எடுத்துச் செய்கின்றன. இதனால் பஞ்சாயத்துக்கு மாதம் ரூ.30,000 வருமானம் கிடைக்கிறது. மகளிர் குழுக்களுக்கும் கணிசமான தொகை வருமானமாகக் கிடைக்கிறது. மாடுகளுக்குக் கோட்டானில் வைக்கோல் மட்டுமல்லாமல் பசுந்தீவனமும் கொடுக்கப்படுகிறது.

இதற்காக அரசு நிலங்களில் பசுந்தீவனம் வளர்க்கும் பணி நடந்துவருகிறது. அந்தப் பணியில் 100 நாள் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்’’ என்றார். விவசாயிகளிடம் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகிவருகிறது மாநில அரசு. திட்டம் தொடர்பாக, மாநில அரசின் சிறப்புச் செயலாளரும், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநருமான பிரசன்னாவிடம் பேசினோம். “இது முதலமைச்சரின் சிறப்புத் திட்டம். இதில் முதல்வர் அதிக கவனம் செலுத்துகிறார். கோட்டானில் (பட்டி) மாடுகளைப் பராமரிக்கும் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் ஒரு கோட்டான் அமைக்கத் திட்டம். மொத்தம் 10,000 கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 2,000 கிராமங்கள் வீதம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அத்தனை பஞ்சாயத்துகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக 1,800 கிராமங்களில் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 1,600 கோட்டான்கள் அமைக்கப்பட்டு, மாடுகள் அடைக்கப்பட்டுள்ளன. கோட்டானுக்கான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டான் (மாட்டுப் பட்டி)
கோட்டான் (மாட்டுப் பட்டி)

அந்தக் குழுவில் கிராமத்தின் அனுபவமுள்ள, அதிக வயதுள்ள நபர் தலைவராகவும், பஞ்சாயத்துத் தலைவர் செயலாளராகவும் இருப்பார்கள். ஐந்து இளைஞர்கள் உறுப்பினராக இருப்பார்கள். இந்தக் குழு கோட்டான் செயல்பாடுகளைக் கண்காணிக்கும். இந்தக் குழுக்கள் தேர்வில் சில மாற்றங்கள் வரவிருக்கின்றன. அதற்கான பணி நடந்துவருகிறது.

கோட்டான் பராமரிப்புக்காக ஒவ்வொரு கோட்டானுக்கும் அரசு மூலம் மாதம் 10,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதன் மூலம் பணம் வரவு செலவு செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 7,40,000 மாடுகள் கோட்டான்களுக்கு வருகை தந்திருக்கின்றன.

‘‘ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஒரு கோட்டான் அமைக்கத் திட்டம். மொத்தம் 10,000 கிராமப் பஞ்சாயத்துகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 2,000 கிராமங்கள் வீதம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.’’

800 டன் வைக்கோல் தானமாகக் கிடைத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் பணி நடந்துவருகிறது. இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது’’ என்றார். நம் ஊரிலும் மாடுகளை அரசாங்கம் பார்த்துக் கொண்டால் எப்படியிருக்கும்... அப்படி நடந்தால் இந்தியாவில் அதிக மாடுகளுள்ள மாநிலமாகத் தமிழகம்தான் இருக்கும்.

வருமானம் கிடைக்கிறது!

ண்தொட்டியைத் தயாரிக்கும் பெண்களிடம் பேசினோம். ``இதில் மூன்று பங்கு பசுஞ்சாணம், ஒரு பங்கு மண் கலந்து இயந்திரம் மூலமாகத் தயாரிக்கிறோம். மின்சாரத்தில் இயங்கும் கருவி, கையால் இயங்கும் கருவி இரண்டும் இருக்கின்றன. கருவியின் மையத்தில் உருண்டை வடிவில் ஒரு ‘டை’ இருக்கும். கீழ்ப்பகுதியில் தொட்டி வடிவில் பள்ளம் இருக்கும். அந்தப் பள்ளத்தில் சாணம், மண் கலந்த கலவையை நிரப்பி, அதற்குள் ‘டை’யை அழுத்துவோம். அப்போது தொட்டி வடிவில் கலவை மாற்றப்படும். அதைக் காயவைத்து விற்பனை செய்கிறோம். தற்போது பிளாஸ்டிக் பைகளில் நாற்று தயாரிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக இந்தத் தொட்டிகளைப் பயன்படுத்தலாம்.

மாடுகளுக்கு அங்கன்வாடி - சத்தீஸ்கர் அரசின் அதிரடி!

ஒரு தொட்டி 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 15 ரூபாய் வரை அளவைப் பொறுத்து விற்பனை செய்கிறோம். இந்தத் தொட்டிகளில் நாற்றுகளை வளர்த்து அப்படியே நடவு செய்யலாம். செடிக்குத் தேவையான சத்துகள் தொட்டியிலேயே இருப்பதால் செடியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தேவையான சாணத்தைக் கோட்டானிலிருந்து வாங்கிக்கொள்கிறோம். இதன் விற்பனை மூலம் எங்களுக்குப் போதுமான வருமானம் கிடைக்கிறது’’ என்றனர்.

மாடுகளுக்கு குஷி!

வ்வொரு கிராமத்துக்கும் மாடு மேய்ப்பவர்கள் நான்கைந்து நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை, `சர்வாஹா’ என்று அழைக்கிறார்கள். கோட்டனில் இருந்த சர்வாஹா ஒருவரிடம் பேசினோம். ‘‘கிராமத்திலுள்ள மாடுகளை ஆளுக்கு 200 மாடுகள் எனப் பிரித்து மேய்ச்சலுக்குக் கொண்டு போவோம். பல இடங்களில் அலைந்து மேய்க்க வேண்டும்.

மாடுகளுக்கு அங்கன்வாடி - சத்தீஸ்கர் அரசின் அதிரடி!

முன்பு இருந்ததுபோல் மேய்ச்சல் நிலங்கள் இல்லை. குறைந்து வருகின்றன. இந்த நிலையில், கோட்டானில் ஒரே இடத்தில் மாடுகளை வைத்து, தீவனம் கொடுத்து பராமரிப்பதால் சிரமம் இல்லாமல் இருக்கிறது. மாடுகளும் அதிகம் அலையாமல் இருக்கின்றன. எங்களுக்குத் தங்குவதற்குத் தனியாக ஒரு அறை கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். முன்பைவிட தற்போது நாங்களும் சிரமம் இல்லாமல் இருக்கிறோம். மாடுகளும் குஷியாக இருக்கின்றன’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism