Published:Updated:

திண்டுக்கல்லில் தயாராகும் களிமண் கூம்புகள்; இயற்கை உரத்துக்கு பெங்களூரூ செல்கிறது!

களிமண் கூம்புகள்

நம் முன்னோர்கள் நாட்டுமாட்டு சாணத்தை அதன் கொம்புகளைப் பயன்படுத்தி உரமாகியுள்ளனர். அதைக் குறைந்த அளவு பயன்படுத்தி அதிக பலன்களைப் பெற்றிருக்கின்றனர்.

திண்டுக்கல்லில் தயாராகும் களிமண் கூம்புகள்; இயற்கை உரத்துக்கு பெங்களூரூ செல்கிறது!

நம் முன்னோர்கள் நாட்டுமாட்டு சாணத்தை அதன் கொம்புகளைப் பயன்படுத்தி உரமாகியுள்ளனர். அதைக் குறைந்த அளவு பயன்படுத்தி அதிக பலன்களைப் பெற்றிருக்கின்றனர்.

Published:Updated:
களிமண் கூம்புகள்

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள நொச்சிஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 50). இவர் கலை டெரகோட்டா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு யானை, குதிரை, மான் உள்ளிட்ட விலங்குகளின் சிலைகள், துளசி மாடம், பூந்தொட்டிகள், விளக்கு வகைகள், மண் பானைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை விநாயகர், முருகன், கருப்பன், அய்யனார் உள்ளிட்ட கடவுள்களின் சிலைகளை களிமண் மூலம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

கஜேந்திரன்
கஜேந்திரன்

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகத் தனியார் நிறுவனம் இவரை அணுகி நாட்டுமாட்டு சாணம் மூலம் இயற்கை உரம் தயாரிப்பதற்காக களிமண் கூம்புகள் தயாரித்துக் கொடுக்கும்படி கோரியுள்ளனர். அப்போது நம் முன்னோர்கள் நாட்டுமாடுகளின் கொம்புகளை பயன்படுத்தி உரம் தயாரித்துள்ளனர். தற்போது நாட்டுமாடுகளே அருகிவிட்ட நிலையில் அதன்கொம்புகள் கிடைப்பதில்லை என்பதால் மாட்டின் கொம்பினைப் போல களிமண் கூம்புகள் தயாரித்து கொடுக்க வேண்டும் என விளக்கியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனடிப்படையில், கண்மாயில் களிமண் எடுத்து சக்கரத்தில் சுழற்றி ஒரு அடி நீளம், 4 இஞ்ச் அகலத்தில் கூம்பு வடிவமைத்து நிழலில் உலர வைத்து, சூளையில் வைத்து 8 மணி நேரம் சுட்ட பிறகு விற்பனைக்கு அனுப்பி வருகிறார் கஜேந்திரன்.

கூம்புகள்
கூம்புகள்

அவரிடம் பேசினோம். ``ரசாயன உரம், மருந்து பயன்படுத்தியதால் மண்மலடாகி விவசாயம் பாதிக்க தொடங்கியதை உணர்ந்த விவசாயிகள் மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். அதன்படி, மாட்டு, ஆட்டு சாணங்களை அதிகமாகப் பயன்படுத்த தொடங்கி யிருக்கின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் நாட்டுமாட்டு சாணத்தை அதன் கொம்புகளைப் பயன்படுத்தி உரமாக்கியுள்ளனர். அதைக் குறைந்த அளவு பயன்படுத்தி அதிக பலன்களைப் பெற்றிருக்கின்றனர். தற்போது கொம்புகளை கிடைக்காததால், இரும்பு, பிளாஸ்டிக் பயன்படுத்தி மாட்டின் கொம்புகள்போல கூம்புகள் தயாரித்து உரம் தயாரித்து பார்த்துள்ளனர். ஆனால், தரமான உரம் கிடைக்கவில்லை. இதனால் ஐம்பூதங்களை உள்ளடக்கி களிமண்ணால் செய்யப்படும் கூம்புகளைப் பயன்படுத்தி பார்த்தபோது நல்ல உரம் கிடைத்துள்ளது.

நான் எவ்வித இயந்திரங்களும் பயன்படுத்தாமல் கை மூலம் மட்டுமே கலைப்பொருள்களைத் தயாரித்து வருவதை அறிந்த உரம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தினர் என்னை அணுகி தயாரித்து கொடுக்க சொல்லினர். கடந்த 3 ஆண்டுகளாகச் செய்து கொடுத்து வருகிறேன். ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும்தான் இந்த வேலை எங்களுக்கு வரும். முதலில் குறைவாக கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், இந்த முறை 15,000 களிமண் கூம்புகள் வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

தயாரிப்பில் களிமண் கூம்புகள்
தயாரிப்பில் களிமண் கூம்புகள்

அதற்காக கடந்த ஒரு வாரமாக களிமண் கூம்பு தயாரிப்பு பணியை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம். கடந்த களிமண் கூம்புகளைக் கொண்டு சென்றபோது எவ்வாறு உரம் தயாரிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. முதலில் களிமண் கூம்புகளில் நாட்டு மாடு சாணத்தை நிரப்பி நிலத்தில் வரிசையாக அடுக்கி வைத்து விடுவார்கள். அதன்பிறகு பள்ளமான பகுதியில் தார்பாயை விரித்து அதன்மேல் களிமண் கூம்புகளை அடுக்கி வைக்கின்றனர். பிறகு அந்தக் கூம்புகள் மறையும் அளவுக்கு வைக்கோல், இலை, தழைகளை போட்டு மண்ணால் மூடிவிடுகின்றனர்.

கூம்பு தயாரிப்பில் தொழிலாளி
கூம்பு தயாரிப்பில் தொழிலாளி

மேலும் குளிர்ச்சியாக இருப்பதற்குத் தேவையான அளவு தண்ணீர் மட்டும் தெளிக்கின்றனர். இவ்வாறு 5 அல்லது 6 மாதங்கள் பராமரித்து வந்தால் கூம்புக்குள் தரமான இயற்கை உரம் தயாராகிவிடுகிறது. பிறகு, அவற்றை பெரிய மண்பானையில் சேகரித்து பதப்படுத்துகின்றனர். பின்னர் அதை விற்பனைக்கு அனுப்புவர். திரவ வடிவில் ஸ்பிரே போலவும் மாற்றிக் கொள்ளலாம். அதைப் பயன்படுத்தும் நிலத்தில் சத்து இயற்கையாகவே அதிகரிக்கும். பயிர் மகசூல் அதிகமாகும்'' என்றார்.

இதுகுறித்து இயற்கை உரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன மேலாளரிடம் பேசினோம். ``நம் முன்னோர்கள் நாட்டுமாட்டு கொம்பு உரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த முறையைக் கண்டுபிடித்தோம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட கீர், சாய்வால், காங்கேயம், வெச்சூர் நாட்டுமாடுகளை நாங்களே வளர்க்கிறோம். அதில் பால்தரக்கூடிய மாடுகளில் இருந்து சேகரிக்கப்படும் சாணங்களை வைத்துதான் உரம் தயாரிக்கிறோம். சாணம் என்பதே நல்ல உரம்தான். இருப்பினும் முறையாகப் பதப்படுத்தி நுண்ணுயிரிகளை அதிகப்படுத்தினால் நல்ல பலனைக் கொடுக்கும். இந்த முறையில் தயாரிக்கப்படும் உரத்தை ஒரு ஏக்கருக்கு 25 கிராம் 14 லிட்டர் தண்ணீரில் ஒரு மணிநேரம் இடது வலதாக வேகமாக கலக்க வேண்டும்.

களிமண் கூம்புகள்
களிமண் கூம்புகள்

அதை மாலை நேரத்தில் நிலத்தை தெளிக்க வேண்டும். நன்மை தரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாகும். மண்ணின் வளம் அதிகமாகும் பயிர் செழித்து வளரும். சாகுபடி அதிகமாக கிடைக்கும். குறைந்த செலவில் நல்ல பலனைக் கொடுக்கும் இந்த உரத்தை விவசாயிகளே தயாரிக்க பயிற்சி அளித்து வருகிறோம். குறிப்பாக, மலைவாழ் பழங்குடியின விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். அனைவரும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்ப வேண்டும் என்பதே நோக்கம்'' என்றார்.