Published:Updated:

ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்! தென்னை விவசாயிகள் கோரிக்கை!

தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேங்காய் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இதனால் துயரத்துக்கு ஆளான திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சமீபத்தில் பிள்ளையாக வளர்த்த தென்னை மரங்களை வெட்டி வீசியது கண்ணீரை வரவழைத்தது.

ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்! தென்னை விவசாயிகள் கோரிக்கை!

தேங்காய் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இதனால் துயரத்துக்கு ஆளான திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சமீபத்தில் பிள்ளையாக வளர்த்த தென்னை மரங்களை வெட்டி வீசியது கண்ணீரை வரவழைத்தது.

Published:Updated:
தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் தென்னை விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து அரசு எங்களை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்னை விவசாயிகள்
தென்னை விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பகுதி விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் தென்னை இருந்து வருகிறது. கஜா புயலில் தென்னை மரங்கள் சாய்ந்ததால் அப்பகுதி விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகினர். இதையடுத்து மெள்ள அதன் பாதிப்பிலிருந்து தென்னை விவசாயிகள் மீண்டு வந்த நிலையில் தொடர்ந்து நிலவி வரும் தேங்காய் விலை வீழ்ச்சியால் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் தேங்காய் உடைத்து பல கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனாலும், தேங்காய் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான தென்னை தொழிலைக் காக்க வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேங்காய் விலை வீழ்ச்சியால் ஆர்ப்பாட்டம்
தேங்காய் விலை வீழ்ச்சியால் ஆர்ப்பாட்டம்

இது குறித்து தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் காந்தி பேசுகையில், ``தேங்காய் விலை வீச்சியால் தென்னை விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வியாபாரிகள் ஒரு தேங்காயை ரூ. 8-க்கு கொள்முதல் செய்கின்றனர். தென்னை மரங்களைக் காப்பதற்கான நடைமுறை செலவும், தேங்காய் பறித்தலுக்கான கூலி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துவிட்டன.

ஆனால், தேங்காயின் விலை உயராமல் தொடர்ச்சியாகக் குறைந்து வருவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் துயரத்துக்கு ஆளான திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சமீபத்தில் பிள்ளையாக வளர்த்த தென்னை மரங்களை வெட்டி வீசியது கண்ணீரை வரவழைத்தது. அனைத்து தென்னை விவசாயிகளின் நிலையும் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி
காந்தி

தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காயை கிலோ ரூ 130-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாமாயில் வழங்கப்படுகிறது. மத்திய அரசு பாமாயிலுக்கு மானியம் வழங்கி வருகிறது. பாமாயில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கொப்பரை தேங்காயைக் கொள்முதல் செய்து தேங்காய் எண்ணையாக மாற்றி ரேஷன் கடைகளில் வழங்கு வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிஸ்கெட் உள்ளிட்ட உணவுப் பொருள் தயாரிப்புக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக், நைலான் போன்றவற்றுக்கு மாற்றாக கயிறு பொருள்கள் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும். தேங்காய் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்காக பேராவூரணி பகுதியில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும். முடக்கப்பட்ட தென்னை நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் தென்னை விவசாயிகள் காக்கப் படுவார்கள்'' என்று கோரிக்கை வைத்தார்.