Published:Updated:

நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்; தரமற்ற விதைகளை விற்பனை செய்கிறதா வேளாண் பல்கலைக்கழகம்?

`PKM1' என்கிற முருங்கை விதை, நான்கு மாதங்களில் காப்புக்கு வந்துவிடும். ஆனால், ஓராண்டாகியும் காப்புக்கு வரவில்லை. அதுவே தனியாரிடம் நேரடியாக வாங்கிய விதைகள் நன்கு வளர்கின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமே விதைகளை உற்பத்தி செய்வதாகக் கூறி விற்பனை செய்கின்றனர்.

போலி விதைகளை விற்று ஏமாற்றியதற்காக வேளாண் பல்கலைக்கழகத்தை கண்டித்து கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் கூறுகையில், ``தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தரமற்ற, போலியான, மலட்டு தன்மையான விதைகளை விற்கின்றனர். உதாரணத்துக்கு, கிலோ ரூ.3,000 மதிப்புள்ள முருங்கை விதைகளை அங்கிருந்து வாங்கி குடிமங்கலம் அருகே உள்ள விவசாயிகள் கடுமையாக நஷ்டமடைந்துள்ளனர்.

விதைகள்
விதைகள்
சூரியகாந்தி விதை தட்டுப்பாடு தவிக்கும் விவசாயிகள்...

`PKM1' என்கிற முருங்கை விதை, நான்கு மாதங்களில் காப்புக்கு வந்துவிடும். ஆனால், ஓராண்டாகியும் காப்புக்கு வரவில்லை. அதுவே தனியாரிடம் நேரடியாக வாங்கிய விதைகள் நன்கு வளர்கின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமே விதைகளை உற்பத்தி செய்வதாகக் கூறி விற்பனை செய்கின்றனர். உண்மையில் விதைகளை வேறு நிறுவனங்களிடம் வாங்கி மோசடி செய்கின்றனர்.

அதை பல்கலைக்கழகத்தின் தயாரிப்பு என்று போட்டுக் கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் சாகுபடிக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் வரை நஷ்டமாகியுள்ளது.

விதைகள்
விதைகள்

இதற்கு பதில் கேட்டால், `ஏக்கருக்கு ரூ.6,000 தருகிறோம்' என்று அலட்சியமாக பதில் சொல்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து, சென்னை தலைமை செயலகம் சென்று வேளாண் துறை முதன்மை செயலாளர், வேளாண் விற்பனை ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவையில் உள்ள விதைகள் துறை கூடுதல் இயக்குநரை சந்தித்து பேசியுள்ளோம். மேலும் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் உப்பு சப்பு இல்லாத பதில்களையே கூறி வருகின்றனர்” என்றார்.

அதிகாரிகளிடம் மனு
அதிகாரிகளிடம் மனு
நடவு முதல் அரிசி வரை; தஞ்சாவூரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்!

இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``தரமற்ற விதைகள் விற்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து வருகிறோம். விதைகளை ஆய்வுக்குட்படுத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு