Published:Updated:

நம்மாழ்வார் நினைவேந்தல்; இயற்கை விவசாயப் பண்ணையில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி..!

இறையழகன் மற்றும் சுல்தான் இஸ்மாயில்

நம்மாழ்வார் அய்யா, இயற்கை விவசாயப் பண்ணைகள் பயிற்சி கொடுக்கும் இடமாக மாற வேண்டும் என்று விரும்பினார். அதை செயல்படுத்திக் காட்டியுள்ளோம். பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்த பண்ணையைப் பார்வையிட வருகிறார்கள். பல தகவல்களை அறிந்து கொண்டு மகிழ்ச்சியாக செல்கின்றனர்

நம்மாழ்வார் நினைவேந்தல்; இயற்கை விவசாயப் பண்ணையில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி..!

நம்மாழ்வார் அய்யா, இயற்கை விவசாயப் பண்ணைகள் பயிற்சி கொடுக்கும் இடமாக மாற வேண்டும் என்று விரும்பினார். அதை செயல்படுத்திக் காட்டியுள்ளோம். பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்த பண்ணையைப் பார்வையிட வருகிறார்கள். பல தகவல்களை அறிந்து கொண்டு மகிழ்ச்சியாக செல்கின்றனர்

Published:Updated:
இறையழகன் மற்றும் சுல்தான் இஸ்மாயில்

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் 'நெல்' ஜெயராமன் ஆகியோரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு , நேற்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகில் அமைந்துள்ள தமிழ் நிலம் தமிழ் பண்ணையில் நடைபெற்றது. தமிழ்நாடு இயற்கை வழி வேளாண் உணவுக் காடுகளின் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, இந்நிகழ்ச்சியில் இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மரங்களுக்கு நடுவில்... நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன், இந்நிகழ்ச்சி நம்பிக்கை ஒளி ஊட்டும் விதமாக நடைபெற்றது.

நம்மாழ்வார்,  'நெல்' ஜெயராமன் நினைவேந்தல்
நம்மாழ்வார், 'நெல்' ஜெயராமன் நினைவேந்தல்

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் பங்கு பெற்று உரையாற்றினார். அவர் பேசுகையில், "இது போன்ற பண்ணைகளை, ஒரு நோடல் ஏஜென்சியாக அரசு கொண்டுவர வேண்டும்.  தோட்டக்கலை அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறைகளை, இது போன்ற பண்ணைகளில் நடத்த திட்டமிட்டுள்ளேன்.

அவர்கள் நேரில் வந்து பண்ணைகளைப் பார்த்து தெரிந்து கொண்டால் தான், அவை மக்களை சென்று சேரும். பசுமை பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் பல்லுயிர் பெருக்கம் ஏற்படும். அதே நேரத்தில் சவுக்கு, தேக்கு மரங்களை நடுவதால் பசுமை பரப்பளவு அதிகரிக்கும், ஆனால் பல்லுயிர் பெருக்கம் ஏற்படாது.

நம்மாழ்வார்,  'நெல்' ஜெயராமன் நினைவேந்தல்
நம்மாழ்வார், 'நெல்' ஜெயராமன் நினைவேந்தல்

நாம் நடவு செய்யும் மரங்கள் மண்ணுக்கு பயனுள்ள முறையில் இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றொரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். மாட்டு சாணம் இருந்தால் தான் இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்பது அல்ல. கோழி, மீன், ஆடுகள் போன்ற உயிரினங்களின் கழிவுகளை வைத்தும் இயற்கை விவசாயம் செய்யலாம். கோமியத்தை தண்ணீருடன் கலந்து பயன்படுத்துங்கள்.. அவை யூரியாவாக செயல்படும். தமிழக அரசின் ஆவின் நிறுவனம், எப்படி தினமும் பாலை நேரடியாக வாங்கி மக்களிடம் விற்பனை செய்து வருகிறதோ, அதேபோன்று ஆர்கானிக் காய்கறிகளையும் விற்பனை செய்ய ஒரு தனி நிறுவனம் அரசு சார்பில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் முன் வைத்துள்ளேன்.

இயற்கை முறையில் விளைய வைத்த காய்கறிகள் பழங்களுக்கு குறைந்தபட்ச‌ ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும், தமிழக அரசு.  மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளால் வர போகும் அபாயத்தை  நாம் அறிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில், ஐசிஆர் ன் இயக்குனர், 'மரபணு மாற்றப்பட்ட கடுகுகளை நாங்கள் சோதித்து பார்த்து விட்டோம். அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை, எனவே அதைப் பற்றிய கருத்துக்களை யாரும் வெளியிடக்கூடாது' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். நாம் விழித்துக் கொள்ள வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகள் வருவதால், விதைகளின் காப்புரிமை நம் கையை விட்டுப் போக கூடும். அதனை நாம் அனுபவிக்க கூடாது" என்று கூறி முடித்தார்.

நம்மாழ்வார்,  'நெல்' ஜெயராமன் நினைவேந்தல்
நம்மாழ்வார், 'நெல்' ஜெயராமன் நினைவேந்தல்

தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணையைச் சேர்ந்த இறையழகன் பேசும் போது, ''நம்மாழ்வார் அய்யா, இயற்கை விவசாயப் பண்ணைகள் பயிற்சி கொடுக்கும் இடமாக மாற வேண்டும் என்று விரும்பினார். அதை செயல்படுத்திக் காட்டியுள்ளோம். பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்த பண்ணையைப் பார்வையிட வருகிறார்கள். பல தகவல்களை அறிந்து கொண்டு மகிழ்ச்சியாக செல்கின்றனர்'' என்றார்.