செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மார்ச் 1-ம் தேதி பால் பண்ணையாளர் களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பால் பண்ணை மேலாண்மை குறித்து, `கிரிஷி நியூட்ரிஷன்’ நிறுவனத்தின் பொது மேலாளர், டாக்டர் சதீஷ் பேசினார். அடுத்து, சென்னை கால்நடைக் கல்லூரியின் பேராசிரியர் பா.குமாரவேல் பேசியபோது, “பால் பண்ணையாளர்கள் பலருக்கும் சவாலாக இருப்பது கறந்த பாலை ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான். சிறு பால் பண்ணையாளர்கள் பலரும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 முதல் 200 லிட்டர் வரை மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது அவர்களுக்கு வாகனச் செலவு சுத்தமாகக் கட்டுபடியாகாது.

`உற்பத்திச் செலவு, வாகனச் செலவு போக, கையில் ஒன்றுமே இல்லை’ என்று புலம்புவோர்தான் இங்கு அதிகம். இதற்கு என்ன செய்வதென்றால், பால் உற்பத்தி அளவை அதிகரித்து, உற்பத்திச் செலவை குறைத்தாக வேண்டும். அப்போதுதான் கையில் கொஞ்சமாவது லாபம் நிற்கும். ஒரு லிட்டருக்குக் கண்டிப்பாக 25-30 ரூபாய் செலவாகிறது. செலவுகளில் முதன்மையானது தீவனச் செலவுதான். தீவனச் செலவைக் குறைக்க வேண்டுமென்றால், மாட்டுக்கு அடர் தீவனங்களைக் குறைத்து, பசுந்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். அதேபோல் இன்று பலரும் அதிக அளவு பால் உற்பத்தியை மட்டும் எதிர்பார்க்கிறார்களே தவிர, பசுக்களின் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள மறந்துவிடுகின்றனர்.

பசுவின் உடல்நிலை நன்றாக இருந்தால்தான் நமக்கு நல்ல பால் உற்பத்தி கிடைக்கும். அதனால் எப்போதும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல் வெறும் பால் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பாலிலிருந்து தயாரிக்கக்கூடிய இதர பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். நிலம் வைத்திருப்பவர்கள் முடிந்த அளவு பசுந்தீவனத்தை நீங்களாகவே விளைவித்துக்கொள்ளப் பழகுங்கள். இதன் மூலம் தீவனச் செலவுகளைச் சமாளிக்கலாம்.

பசுக்களைக் கட்டிப் போடாமல் அவற்றைச் சுதந்திரமாக மேய்ச்சலுக்குவிட்டால், பசுக்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்கும். பால் உற்பத்தியும் அதிகரிக்கும்” என்று ஆலோசனை வழங்கினார்.