பிரீமியம் ஸ்டோரி
விவசாய பிரச்னைகளில் முக்கியமானது நீர் உப்புத் தன்மையாக மாறி வருவதுதான். இதை எதிர்கொள்ள விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டும் விதமாகப் பசுமை விகடன் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதியில் ‘உப்பு நீரை மாற்றும் தொழில்நுட்பங்கள்’ எனும் தலைப்பில் ஆன்லைன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உப்பு நீரை மாற்றும் நுட்பங்கள்!

தமிழகத்தின் பல மாவட்டங்களைச்சேர்ந்த விவசாயிகள் பங்கேற்ற இக்கருத்தரங்கில் நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ் கலந்துகொண்டு பேசினார். “இன்றைக்கு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள தண்ணீரின் உப்பு அளவு அதிகமாகிவிட்டது. தண்ணீர் இருந்தாலும் அதை நேரடியாகக் குடிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது. இது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு நிலப்பரப்பிலிருந்து வெளியேறும் கழிவு நீர் முறைப்படி சுத்தம் செய்யாமல் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் விடப்படும்போது அது நிலத்தடி நீரை அதிகமாகப் பாதிக்கிறது. முதலில் கடலோர மாவட்டங்களில் 10 அடி முதல் 15 அடிக்குள்தான் போர்வெல் அமைப்பது வழக்கம். இப்போது 200 அடிவரை போய்விட்டது. இப்படிப் போகும்போது கடல் தண்ணீர் பூமிக்குள் வருகிறது. உள்ளே நுழையும் உப்பு நீர் ஊற்று அடுக்குகள் வழியாக உள்ளே நுழைய ஆரம்பிக்கும். உள்ளே நுழையும் உப்பு நீரின் தாக்கம் 30 கி.மீ வரை பயணிக்கும்.

உப்பு நீரை மாற்றும் நுட்பங்கள்!

இயற்கை வழியில் உப்புத்தன்மையை மாற்றும் தொழில்நுட்பத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதில் இயற்கை வழி நீரியல் தீர்வுகளைப் பின்பற்றலாம். இதில் தரைக்கு மேல் உள்ள வடிகால்கள், பூமிக்கடியில் உள்ள வடிகால்கள் என இரண்டு வடிகால் வழிகள் உள்ளன. முதல் வகையைப் பொறுத்தவரை மண்ணின் வகையைப் பொறுத்து தேவைக்கு அதிகமாக இருக்கக்கூடிய மழை நீரை, நிலப்பரப்பின் மேல் பகுதியிலிருந்து நீரை வடித்து எடுக்க வேண்டும். பூமிக்கு அடியில் உள்ள வடிகால் முறையில் அகழிகள் தோண்டுதல் மற்றும் துளையிடப்பட்ட குழாய்கள்மூலம் பூமிக்குள் செலுத்த வேண்டும். இறுதியாக மண்ணை அலசுதல் முறையில் உப்புத் தன்மையை மாற்றலாம்” என்றார்.

உப்பு நீரை மாற்றும் நுட்பங்கள்!

பிரிட்டோ ராஜ் பேசிய தகவல்களை வீடியோவாகக் காண இந்த க்யூ.ஆர்கோடை ஸ்கேன் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு