Published:Updated:

மக்காச்சோளம் விலை குறைய வாய்ப்பு!

மக்காச்சோளம்
பிரீமியம் ஸ்டோரி
மக்காச்சோளம்

முன்னறிவிப்பு

மக்காச்சோளம் விலை குறைய வாய்ப்பு!

முன்னறிவிப்பு

Published:Updated:
மக்காச்சோளம்
பிரீமியம் ஸ்டோரி
மக்காச்சோளம்

வ்வொரு பயிருக்கும் அறுவடைக் காலத்தில் என்ன விலை கிடைக்கும் என்பதை விவசாயிகள் தெரிந்துகொண்டால் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும். அந்த வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் பயிர்களின் எதிர்கால விலையை அறிவித்துவருகிறது. தற்போது எதிர்வரும் காலத்தில் மக்காச்சோளத்துக்கான சந்தை விலையை அறிவித்திருக்கிறது.

வேளாண் மற்றும் விவசாயநல அமைச்சகத்தின் நான்காவது முன்கூட்டிய மதிப்பீடு, `2018-19ம் ஆண்டில் மக்காச்சோளம் இந்தியாவில் 93 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 272.30 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும்’ என்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றன. வர்த்தக மூலங்களின்படி தமிழ்நாட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து மக்காச்சோளம் வருகிறது. இந்த மூன்று மாநிலங்கள் தமிழ்நாட்டின் மக்காச்சோளத் தேவையில் 30 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்கின்றன. கர்நாடகாவிலிருந்து செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 20-ம் தேதி வரை வரத்து இருக்கும். ஆந்திரா மற்றும் பீகாரிலிருந்து அக்டோபர் 19-ம் தேதி வரத்து தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், தேனி, கோவில்பட்டி, கந்தர்வகோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து டிசம்பர் முதல் அதிக வரத்து இருக்கும். மற்ற மாவட்டங்களிலிருந்து ஜனவரி 20-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை வரத்து இருக்கும் எனக் கருதப்படுகிறது.

மக்காச்சோளம்
மக்காச்சோளம்

மக்காச்சோளம், கோழித் தீவனத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால் அதன் தேவை அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மக்காச் சோளம் விளையும் முக்கிய மாநிலங்களில் படைப்புழுத் தாக்கத்தால் முந்தைய மாதங்களில் வரத்து குறைந்து, விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது பருவமழை காரணமாகப் படைப்புழுவின் தாக்கம் குறைந்திருப்பதால் பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. கர்நாடகாவிலிருந்து வரத்து ஏற்கெனவே தொடங்கியிருக்கும் நிலையில் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கிவருவது வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம். இதன் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய மக்காச்சோள விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை, அறுவடையின்போது படைப்புழுத் தாக்கம் தமிழ்நாட்டில் இல்லையென்றால் (நவம்பர் 19 முதல் ஜனவரி 20 வரை) குவிண்டாலுக்கு 1,800 ரூபாய் முதல் 2,000 ரூபாயாக இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

நிகரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் விவரங்களுக்கு: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003 தொலைபேசி: 0422 2431405.