Published:Updated:

பஞ்சு விலையேற்றம்: வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன? ஓர் அலசல்!

நூல்

கடந்த 50 ஆண்டுகளில் பருத்தியின் விலை என்பது இந்தாண்டுதான் குவிண்டாலுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தீடீரென 11 சதவிகிதம் இறக்குமதி வரி தள்ளுபடி செய்ததால், பருத்தியின் விலை குவிண்டாலுக்கு 1500 ரூபாய் வரை குறைந்துவிட்டது.

பஞ்சு விலையேற்றம்: வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன? ஓர் அலசல்!

கடந்த 50 ஆண்டுகளில் பருத்தியின் விலை என்பது இந்தாண்டுதான் குவிண்டாலுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தீடீரென 11 சதவிகிதம் இறக்குமதி வரி தள்ளுபடி செய்ததால், பருத்தியின் விலை குவிண்டாலுக்கு 1500 ரூபாய் வரை குறைந்துவிட்டது.

Published:Updated:
நூல்

தமிழகத்தில் நூல் விலை நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் 40-வது நம்பர் ரக நூல் கிலோ ரூ.410 ஆக இருந்தது. தற்போது ரூ.440க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ரூ.485க்கு விற்ற 60வது நம்பர் ரகம் ரூ.505 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் நூல்கள் கிலோக்கு ரூ.30 அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது ஒரு கோண்டி பஞ்சு விலை 90 ஆயிரம் விற்றுவந்த நிலையில், தற்போது 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக தமிழகமெங்கும் சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட இடங்களில் நூல் வியாபாரிகள் தொடர்ந்து கடையடைப்பு போரட்டத்தில் ஈடுப்பட்டு வருவதுடன், தமிழகத்தில் பயிரிடப்படும் பஞ்சுகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சரவணன்
சரவணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணனிடம் பேசியபோது, “பஞ்சு விலை ஒரு கோண்டி ரூ.1 லட்சத்தை கடந்துவிட்டது. தமிழக நூற்பாலைகள் அனைத்து ரக நூல்கள் விலையையும் உயர்த்தி வருகின்றனர். கடந்த 18 மாதங்களாக உயர்ந்து வரும் பஞ்சு மற்றும் நூல் விலை சேலம் மற்றும் அனைத்து மாநில ஜவுளித்துறையையும் முழுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. பஞ்சு மற்றும் நூல் பதுக்கல் காரணங்களால் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தொழிலை தொடர முடியாமல் விசைத்தறி கூடங்கள், துணி உற்பத்தி தொழிற்சாலைகள் மூடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக எடுக்கப்பட்ட ஆர்டர்களின் விலையை விட உற்பத்தி விலை அதிகரிப்பதனாலும் சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகளிடம் விலையில் போட்டியிட முடியாமல் ஆர்டர்களை இழந்து வருகிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பஞ்சில் 35 சதவிகிதம் தான் தமிழக ஜவுளித்துறை பயன்படுத்துகிறது. இதனால் மற்ற மாநிலங்களை விட பஞ்சு மற்றும் நூலின் விலை உயர்வால் தமிழக ஜவுளித்துறை பாதிக்கப்படுகிறது. நாட்டில் பருத்தி பயிரிடும் பரப்பும், விளைச்சலும், குறைந்துவிட்டது. குஜராத்தில் 85 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) பருத்தி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் வெறும் 2.96 லட்சம் பேல் மட்டுமே விளைச்சல் உள்ளது. தமிழகத்தில் பருத்தி உற்பத்தி அதிகரிக்க வேண்டும். பஞ்சு மற்றும் நூல் விலையை அத்தியாவசிய தேவை பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்'' என்றார்.

நல்லா கவுண்டர்
நல்லா கவுண்டர்

இந்தப் பஞ்சு விலையேற்றம் பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சி. நல்லா கவுண்டர், “கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பருத்தி விவசாயிகள் அதிக அளவு தற்கொலை செய்துக்கொண்டு இறந்துள்ளனர். அன்றைய நிலையில் அங்கிருந்து விலை குறைவாக பஞ்சுகளை வாங்கி வந்து திருப்பூர் பகுதியை சேர்ந்த பஞ்சு மில் முதலாளிகள் பெருமளவு லாபம் சம்பாத்தித்தனர். இதுகுறித்து விவசாய சங்கத்திலிருந்து பஞ்சு மில் முதலாளிகளிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்கு உதவிட கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இந்தாண்டு தான் ஒரு குவிண்டால் பருத்தி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சாலை!
பஞ்சாலை!

இப்போது தீடீரென 11 சதவிகிதம் இறக்குமதி வரி தள்ளுபடி செய்ததால், பருத்தியின் விலை குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் வரை குறைந்துவிட்டது. இதுபோன்ற சின்ன அசைவுகளுக்கே விவசாயிகளுக்கு இவ்வளவு நஷ்டம். நாளைக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய வேண்டாம், நூல் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்றால் மேலும் பருத்தியின் விலை 2 ஆயிரம் வரை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு அதிகபட்சம் 10 குவிண்டால் வரை உற்பத்தியாகிறது அதில், உற்பத்தி செலவு 50 ஆயிரம் வரை ஏற்படும் நஷ்டத்தை யார் ஈடுக்கட்டுவது. உள்நாட்டில் சரியான விலையில் விற்பனை செய்யாததால் தான் 10 கோடிக்கு மேலான விவசாயிகளின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகையால் விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுக்கக் கூடாது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism