Published:Updated:

கொழுத்த வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு!

நாட்டுக்கோழி வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழி வளர்ப்பு

57 சென்ட், மாதம் 50,000 ரூபாய்...

கொழுத்த வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு!

57 சென்ட், மாதம் 50,000 ரூபாய்...

Published:Updated:
நாட்டுக்கோழி வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழி வளர்ப்பு

கால்நடை

‘நடவு செய்த பயிர் கைவிட்டாலும் வளர்த்த ஆடு, மாடு கைகொடுக்கும்’ என்ற சொலவடை உண்டு. அந்த அளவுக்கு விவசாயிகளுக்கு நிச்சய வருமானம் கொடுப்பவை கால்நடைகள். அதிலும் `ஆடு, மாடுகளைவிடக் குறைந்த முதலீட்டில் லாபம் கொடுப்பவை நாட்டுக்கோழிகள்’ என்கிறார்கள் அனுபவ விவசாயிகள். அந்த வரிசையில் நாட்டுக்கோழி வளர்த்து, நிறைவான வருமானம் பார்த்துவருகிறார் சென்னை, பல்லாவரத்தை அடுத்துள்ள திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த ஜெஷ்வின் வின்சென்ட்.

கோழிகளுக்குத் தீவனமிடும் ஜெஷ்வின் வின்சென்ட்
கோழிகளுக்குத் தீவனமிடும் ஜெஷ்வின் வின்சென்ட்

தனது பண்ணையில் கோழிகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

“மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். படிச்சு முடிச்சிட்டு நான் செய்யாத வேலை இல்லை. இங்கிலாந்துல படிக்கும்போதே சமையல் வேலை பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் நண்பர்கூட சென்னையில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். எங்க அம்மாவுக்கு மாடித்தோட்டத்துல அதிக ஆர்வம். ‘செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு செடியைப் பார்த்துக்கிட்டிருக்காங்களே’னு எனக்குக் கோபமா வரும். அப்படி என்னதான் செய்யறாங்கனு அடிக்கடி போய்ப் பார்ப்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது சிறுவிடை இல்லைன்னு தெரியும். இப்படிப் பலமுறை ஏமாந்திருக்கேன். சிறுவிடைக் கோழிகளை விற்பனை செய்யச் சுமார் 7 மாதங்கள் ஆகும்.

அப்போதான் செடிகளை வளர்க்கறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சது. எங்க மாடித்தோட்டத்துல விளைஞ்ச காய்கறிகளைச் சாப்பிடுறப்போதான் கடையில வாங்கிச் சாப்பிடும் காய்கறிக்கும், மாடித்தோட்டக் காய்கறிக்கும் அதிக வித்தியாசம் இருக்கறதை உணர முடிஞ்சது. நண்பருடைய வியாபாரத்துக்காக கோயம்பேடு காய்கறிச் சந்தைக்குப் போக வேண்டிய சூழல் வந்துச்சு. அங்கே முள்ளங்கி வாங்கிட்டு வருவேன். அது ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். ஆனா, என் மாடித்தோட்டத்துல விளைஞ்ச முள்ளங்கியை வெச்சிருந்தா காத்துப்போன பலூன் மாதிரி மாறிடும். ரசாயனத்துல விளையுறதாலதான் ஒருவாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷா இருக்குனு புரிஞ்சது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமா உணவு உற்பத்தி பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். நாம சாப்பிடுற உணவு ரசாயனங்களால நிறைஞ்சிருக்குங்கற தகவல் அதிர்ச்சி தந்துச்சு.

இன்குபேட்டர் (சிறியது), இன்குபேட்டர் (பெரியது)
இன்குபேட்டர் (சிறியது), இன்குபேட்டர் (பெரியது)

அதுக்கப்புறம் நானும் மாடித்தோட்டத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். அதிகமாகக் காய்கறிகளை விளையவெச்சேன். வெளியில இருந்து வாங்குற காய்கறிகள் எல்லாத்தையும் நல்லா வெந்நீர்ல கழுவிட்டுப் பயன்படுத்தினோம். கோழி வளர்ப்புல ஆர்வம் வந்துச்சு. மாடியில அஞ்சு கோழிகள், ஒரு சேவல் வளர்க்க ஆரம்பிச்சேன். ஆனாலும், இது எனக்குப் போதுமானதாகத் தோணலை. பண்ணை அமைச்சா நல்லா இருக்கும்னு தோணிச்சு. வீட்டுல சொன்னேன். முதல்ல யாரும் ஒத்துக்கலை. அப்புறம் அப்பாவைச் சம்மதிக்கவெச்சு, இங்கே பண்ணை வெச்சேன்” என்று நீண்ட விளக்கத்துடன் முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

“இந்த நிலம் மொத்தமும் 57 சென்ட். ஆரம்பத்துல கருவேல மரங்கள் முளைச்சுக் கிடந்தது. அப்பா அதையெல்லாம் சுத்தம் பண்ணி, பண்ணைவெச்சுக் கொடுத்தார். நானும் பல கோழிப் பண்ணைகளை நேர்ல போய்ப் பார்த்தேன். ஒவ்வொருத்தரோட அனுபவத்தையும் கேட்டேன். அதுல எனக்குத் தேவையான தகவல்களை எடுத்துக்கிட்டேன். தொடர்ந்து தேடல்லயே இருந்தேன். சிறுவிடைக் கோழிகள்தான் தமிழ்நாட்டோட பூர்வீக நாட்டுக்கோழிகள்னு தெரிஞ்சது. அதனால அந்த இனக் கோழிகளை வளர்க்கலாம்னு முடிவுக்கு வந்தேன். ஆனா, அதை வியாபாரரீதியா வளர்க்க முடியாதுன்னு பல பேர் சொன்னாங்க. ஆனாலும், நான் சிறுவிடைக் கோழிகள்தான் வளர்க்கணும்னு தீர்மானமா இருந்தேன். ஆரம்பத்துல சின்ன குஞ்சுகளா வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் பெருசாகும்போதுதான் அது சிறுவிடை இல்லைன்னு தெரியும். இப்படிப் பலமுறை ஏமாந்திருக்கேன். இப்படியே ரெண்டு வருஷம் வீணாகிடுச்சு. இப்பத்தான் 100 சிறுவிடை தாய்கோழிகளைச் சேர்த்திருக்கேன்’’ என்றவர் கோழிகள் பராமரிப்பைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோழிக்குஞ்சுகள் வளர்ப்பதில் கவனம்

“கோழிகளுக்கு கூலிங் ஷீட்லதான் கொட்டகை அமைச்சிருக்கேன். 20 அடி நீளம், 15 அடி அகலத்துல 3 ஷெட் இருக்குது. ஒவ்வொரு ஷெட்லயும், ரகம் பிரிச்சு தனித்தனியா வளர்க்கிறேன். நானே சொந்தமா இன்குபேட்டர் தயாரிச்சு வெச்சிருக்கேன். அதுல 1,500 முட்டைகளைப் பொரிக்கவைக்கலாம். முட்டைகளைச் சேகரிச்சு, இன்குபேட்டர்ல வெச்சா 18 நாள்கள்ல குஞ்சு பொரிஞ்சுடும். குஞ்சு பொரிச்சவுடனேயே ஈரம் காயுற வரைக்கும் இன்குபேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். பிறகு, அதைப் புரூடருக்கு மாத்துவோம். கோழிகளுக்குத் தண்ணீர் அதிகமா தேவைப்படும். தோல் வழியா வியர்வை வெளியேறும் சூழல் இல்லாததால, மூச்சுக்காத்து மூலமாத்தான் கோழிகள் வெப்பத்தை வெளியேற்றும்.

57 சென்ட் பண்ணை
57 சென்ட் பண்ணை

15 நாள் கோழிக்குஞ்சுகளுக்குச் சுமார் 5 முதல் 8 கிராம் வரை தீவனம் கொடுக்கலாம். 30 நாள் கோழிக்குஞ்சுகளுக்கு 10 முதல் 15 கிராம் வரை தீவனமாகக் கொடுக்கலாம். 30 அடி நீளமும் 2 அடி உயரமும் இருக்குற வட்ட வடிவக் கூண்டுல சுமார் 300 கோழிக்குஞ்சுகளை வளர்க்கலாம். 20-ம் நாள்ல கோழிக்குஞ்சுகளைத் தனியா பண்ணைக்கு மாத்திடலாம். அந்தப் பண்ணை நாலுபக்கமும் காற்றோட்டத்தோடு இருக்கணும். பண்ணையில இருக்கிற கூண்டுல கீழ்ப்புறமா நிலக்கடலைத் தோலை ரெண்டு இஞ்ச் அளவுக்குப் போட்டுவிடலாம்.

‘‘கோழிகளுக்கு கூலிங் ஷீட்லதான் கொட்டகை அமைச்சிருக்கேன். 20 அடி நீளம், 15 அடி அகலத்துல 3 ஷெட் இருக்குது.’’

வெளியிலிருந்து பெரும்பாலும் கோழிகளுக்கு உணவு வாங்குறதில்லை. பண்ணைக்குள்ளயே நேப்பியர், வேலிமசால், முருங்கைக்கீரை, அகத்திக்கீரைனு பயிர்கள் இருக்கு. அதைத்தான் கோழிகளுக்குத் தீவனமா கொடுத்துக்கிட்டு வர்றேன். நாலு நாளுக்கு ஒருமுறை கோயம்பேடு காய்கறிச் சந்தையில இருந்து காய்கறிக் கழிவுகளை வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன். பக்கத்துல இருக்குற குன்றத்தூர் சந்தையில மீன் கழிவுகளை எடுத்துகிட்டு வந்து போடுவேன். இதனால தீவனச் செலவும் குறையுது. நான் வளர்க்குற சிறுவிடைக் கோழிகளை விற்பனை செய்ய, சுமார் ஏழு மாசம் ஆகும். அப்போதான் நல்ல வருமானம் கிடைக்கும். பெரும்பாலும் குஞ்சுகளாத்தான் (அதிகபட்சமா 10 நாள்கள்) விற்பனை செய்வேன்” என்றவர், விற்பனை வாய்ப்பைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் ஜெஷ்வின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விற்பனை வாய்ப்பு

“இப்போ பண்ணையில 300 கடக்நாத் கோழிகள், 300 சிறுவிடைக் கோழிகள்னு மொத்தம் 600 கோழிகள் இருக்கு. இதுல முட்டை, குஞ்சுகள், கறிக்காகனு மூணு வகையான விற்பனை வாய்ப்பு இருக்கு. கடக்நாத் 1 கிலோ 400 ரூபாய், சிறுவிடை ஒரு கிலோ 350 ரூபாய்னு நேரடி விற்பனை செய்யறேன்.

கருங்கோழிகளுடன்
கருங்கோழிகளுடன்

இந்தக் கோழிகள்ல கறிக்காக வாரம் 15 கிலோ கடக்நாத் கோழிகளையும், 35 கிலோ சிறுவிடைக் கோழிகளையும் விற்பனை செய்யறேன். 15 கிலோ கடக்நாத் கோழிகள் மூலமா 6,000 ரூபாய், 35 கிலோ சிறுவிடை மூலமா 12,250 ரூபாய்னு வாரத்துக்கு 18,250 ரூபாய் வருமானமாகக் கிடைக்குது. வாரத்துக்கு 250 முட்டைகள் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யறது மூலமா 5,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். கோழிக்குஞ்சுகளாகவும் பொரிச்சு ஒரு நாள் குஞ்சுகள் 55 ரூபாய்னு விற்பனை செய்யறேன். வாரத்துக்கு 32 குஞ்சுகள் விற்பனையாகிடும். இது மூலமா மொத்தம் 1,760 ரூபாய் கிடைக்குது.

‘‘சிறுவிடைக் கோழிகள்தான் தமிழ்நாட்டோட பூர்வீக நாட்டுக்கோழிகள்னு தெரிஞ்சது. அதனால அந்த இனக் கோழிகளை வளர்க்கலாம்னு முடிவுக்கு வந்தேன்.’’

ஆக, கோழி, முட்டை, குஞ்சு விற்பனை மூலமா வாரத்துக்கு மொத்தமா 25,010 ரூபாய் வருமானம் கிடைக்குது. மாசத்துக்குக் கணக்குப் போட்டா 1,00,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்குது. இந்த வருமானம் ஒரே மாதிரியா இருக்காது. சில மாசங்கள்ல ஏறும், சில மாசங்கள்ல குறையும். இதுல மின்சாரம், ஆள்கூலி, போக்குவரத்துனு செலவு போக மாசத்துக்கு 50,000 ரூபாய்க்குக் குறையாம லாபம் எடுத்துக்கிட்டு இருக்கேன். ஆனா, இந்த லாபத்துக்கு கொஞ்சம் முதலீடும் பொறுமையும் தேவை. கோழிப்பண்ணை ஆரம்பிச்சவுடனேயே லாபம் பார்த்துட முடியாது” என்று எச்சரிக்கை செய்து விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ஜெஷ்வின் வின்சென்ட், செல்போன்: 70107 45813.

சிறுவிடைக் கோழிகள் எவை?

“ஒரிஜினல் சிறுவிடைக் கோழிகள் பற்றி அதிகமானோருக்குத் தெரிவதில்லை. சிறுவிடைங்குற பேருல அசில் கிராஸ் கோழிகளைத்தான் சந்தையில் விற்பனை செய்யறாங்க. உண்மையான சிறுவிடைக் கோழிகள் கறிக்கடைகளுக்கு அவ்வளவு சீக்கிரம் வராது. முக்கால்வாசி நேரடியாகத்தான் விற்பனையாகும். சிறுவிடைக்கும் மற்ற கோழிகளுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. சிறுவிடை நல்லா வளர ஏழு மாசம் ஆகும். ஆனா, நாட்டுக்கோழிகள்னு சொல்லப்படும் மற்றவை எல்லாமே ரெண்டு, மூணு மாசத்துல வளர்ந்துடும்.

கொழுத்த வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு!

சிறுவிடைக் கோழிகளோட எடையே அதிகபட்சம் 1,200 கிராம்தான் இருக்கும். மற்ற நாட்டுக்கோழிகள்னு சொல்லி விற்பனை செய்யப்படுபவை சுமார் ரெண்டு கிலோ இருக்கும். அதன் மூக்கை வெட்டி விட்டிருப்பாங்க. அந்தக் கோழிகள் அதிகமாகக் கூவாது. இதுக்கு சிறுவிடைக் கோழிகள் எதிர்மறையானவை. சிறுவிடைக் கோழிகள் நல்லா கூவும். எடை அதிகமா இருக்காது. மூக்கு வெட்டப்பட்டிருக்காது. நான் திருவான்மியூர்ல இருக்குற பிரபல அசைவ ஹோட்டலுக்கும், நேரடியா வந்து வாங்குற வாடிக்கையாளர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் கொடுக்கிறேன். அதனாலதான் எனக்கு இந்த வருமானம் கிடைக்குது” என்கிறார் ஜெஷ்வின் வின்சென்ட்.

கோழிகளுக்கு மருத்துவம்

மாதம் ஒரு முறை கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குடற்புழு நீக்கத்துக்குத் தலா 10 கிலோ குப்பைமேனி, வேப்ப இலை மற்றும் ஒரு கிலோ மஞ்சள் ஆகிய மூன்றையும் கலந்துகொள்ள வேண்டும். இதை ஐந்து கிலோ தீவனத்துக்கு ஒரு கிலோ என்ற அளவில் கலந்து 600 கோழிகளுக்கு ஒரு நாள் முழுவதும் தீவனமாகக் கொடுத்து வரலாம். குடற்புழுக்கள் இருந்தால் தானாகவே நீங்கிவிடும்.

சளிப் பிரச்னைக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை 500 கிராம் சீரகம், 500 கிராம் சுக்கு, 200 கிராம் மிளகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் முசுமுசுக்கை, துத்தி, தூதுவளை, கற்பூரவள்ளி, குப்பைமேனி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 10 கிலோ சேர்த்து கஷாயம்போலக் காய்ச்சி, அதைக் குடிக்கும் நீரில் கலந்துவிட வேண்டும். மிஞ்சும் சக்கையையும் தீவனத்துடன் கலந்துவிடலாம். இதனால் சளிப் பிரச்னை எப்போதுமே வராது. நோய் எதிர்ப்பு சக்திக்கு ஐந்து கிலோ சின்ன வெங்காயத்தோடு இரண்டு லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து இடித்து, தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம். நோய் எதிர்ப்புத் திறனுக்காகக் கோழிக்குஞ்சுகளுக்கு ஐந்து லிட்டர் தண்ணீருக்கு 300 கிராம் வசம்பைத் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism