Published:Updated:

மொட்டைமாடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... அனுபவம் பகிரும் சினிமா ஒளிப்பதிவாளர்

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

இதைக் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர் பலரும் விலைக்குக் கேட்க, எங்க தேவைக்குப்போக மீதமுள்ள கோழி மற்றும் முட்டைகளை விற்க ஆரம்பிச்சோம்.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர், ராஜேந்திரன். 'காலம் மாறிப்போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்', 'பொறந்த வீடா புகுந்த வீடா' உள்ளிட்ட இயக்குநர் வி.சேகரின் ஏராளமான படங்களுக்கும், தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். 'கொண்டான் கொடுத்தான்' என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இயற்கை மீதான ஆர்வத்தில் சினிமாவிலிருந்து விலகியவர், மனைவியுடன் இணைந்து வீட்டு மொட்டைமாடியில் நாட்டுக்கோழிகளை வளர்த்து, நல்ல வருமானம் ஈட்டிவருகிறார். ஒரு மாலை நேரத்தில், சென்னை ஆலப்பாக்கத்திலுள்ள வீட்டில் ராஜேந்திரன் - ராஜேஸ்வரி தம்பதியைச் சந்தித்தோம்.

''புதுக்கோட்டை மாவட்டம், கல்லூர் என் பூர்வீகம். விவசாயக் குடும்பம். சிறுவயது முதலே இயற்கை மீதான ஆர்வம் எனக்கு அதிகம் உண்டு. ஒளிப்பதிவாளராக வேலை செய்தப்போ சினிமா படப்பிடிப்புக்காக கிராமப்புறப் பகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் விவசாயிகளைச் சந்திச்சுப் பேசுவேன். பசுமை விகடனின் தீவிர வாசகர் நான். இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சதிலிருந்து, ரசாயன விவசாயத்தின் தீமைகளைத் தெரிஞ்சுகிட்டேன். பின்னர் இயற்கை விவசாயக் காய்கறிகளையே அதிக அளவில் வாங்க ஆரம்பிச்சோம்.

இதைக் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர் பலரும் விலைக்குக் கேட்க, எங்க தேவைக்குப்போக மீதமுள்ள கோழி மற்றும் முட்டைகளை விற்க ஆரம்பிச்சோம்.

ஒருகட்டத்துல இயற்கை விவசாய ஆர்வத்தில் சினிமா துறையிலிருந்து விலகினேன். பசுமை விகடனில் இடம்பெறும் வெற்றி விவசாயிகள் பலரையும் சந்திச்சு அவங்க அனுபவங்களைக் கேட்டேன். சிறிது காலம் இயற்கை அங்காடியை நடத்தினோம். ரசாயனம் கலக்கப்பட்ட தீவனங்களைக் கொடுத்து வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் அவற்றின் முட்டைகள் உடல்நலனுக்குக் கெடுதலானவை என்பதை அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தோம். விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/37kYgYO

எங்கள் பேரக் குழந்தையின் நலனுக்காக நாட்டுக்கோழிகளை வளர்க்க முடிவு பண்ணினோம். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பசுமை விகடனில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் கோழிப் பண்ணை குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது. அவரை நேரில் சந்திச்சு அவர் அனுபவங்களைத் தெரிஞ்சுகிட்டு, அவரிடமிருந்து மூணு கடக்நாத் கோழிகளை வாங்கிட்டு வந்தேன். அவை ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான் மூணுமே சேவல்னு தெரிஞ்சுது. பிறகு வேறு ஒருவரிடம் சில பெட்டைக் கோழிகளை வாங்கினேன். எல்லாக் கோழிகளையும் வீட்டு மொட்டைமாடியிலதான் வளர்த்தோம்.

மொட்டைமாடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... அனுபவம் பகிரும் சினிமா ஒளிப்பதிவாளர்

இதைக் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர் பலரும் விலைக்குக் கேட்க, எங்க தேவைக்குப்போக மீதமுள்ள கோழி மற்றும் முட்டைகளை விற்க ஆரம்பிச்சோம். அதுவே நிலையான வருமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. தொலைக்காட்சி சேனல்ல பாரம்பர்ய சமையல் நிகழ்ச்சிகளை இயக்கி, தொகுத்து வழங்கிட்டிருக்கேன். எனவே, தினமும் கோழி வளர்ப்பில் கொஞ்ச நேரம் மேற்பார்வையிடுவதுதான் என் வேலை. மத்தபடி என் மனைவிதான் கோழிகளைப் பொறுப்பா வளர்க்கிறாங்க" என்று முன்கதையைக் கூறும் ராஜேந்திரன் மனைவியைப் பேச அழைத்தார்.

கோழிகளுக்கு மூலிகை சாதத்தையும், நறுக்கிய வாழைத்தண்டையும் கொடுத்துக்கொண்டிருந்த ராஜேஸ்வரி பணிகளை முடித்துவிட்டு வந்து பேசத் தொடங்கினார்.

800 சதுர அடி பரப்பளவுள்ள மொட்டைமாடியிலேயே மேய்ச்சல் முறையிலதான் கோழிகளை வளர்ப்பது குறித்து அவர் பகிர்ந்த அனுபவத்துடன் கூடிய வழிகாட்டுதலை பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மொட்டைமாடி கோழி வளர்ப்பு... மாதம் ரூ. 20,000 லாபம்! https://www.vikatan.com/news/agriculture/growing-chicken-on-the-terrace-yields-better-benefits

வீடியோ வடிவில்...

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு