Published:Updated:

புனேவில் ₹31,000-க்கு ஏலம்போன ஒரு பெட்டி அல்போன்சா மாம்பழங்கள்; என்ன ஸ்பெஷல்?

Mango (Representational Image)

ஒரு மாம்பழப் பெட்டி இவ்வளவு விலையில் ஏலம் போகுமா என்கிறீர்களா? இதற்கு காரணம் வேறு.

புனேவில் ₹31,000-க்கு ஏலம்போன ஒரு பெட்டி அல்போன்சா மாம்பழங்கள்; என்ன ஸ்பெஷல்?

ஒரு மாம்பழப் பெட்டி இவ்வளவு விலையில் ஏலம் போகுமா என்கிறீர்களா? இதற்கு காரணம் வேறு.

Published:Updated:
Mango (Representational Image)

மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் வியாபாரி ஒருவர் அல்போன்சா மாம்பழங்களின் பெட்டியை ரூ.31,000-க்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.

ஒரு மாம்பழப் பெட்டி இவ்வளவு விலையில் ஏலம் போகுமா என்கிறீர்களா? இதற்கு காரணம் வேறு. மகாராஷ்டிர மாநிலத்தில், சீஸனில் சந்தைக்கு வரும் மாம்பழங்களை ஏலமாக எடுப்பது பாரம்பர்யம். அந்த சீஸனுக்கு வரும் முதல் அல்போன்சா மாம்பழங்களை வாங்குவதற்காகப் பல வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு, போட்டிபோடுவர். அப்படித்தான் புனே வியாபாரி ரூ.31,000-க்கு ஏலம் எடுத்திருக்கிறார்.

Representational Image
Representational Image
Pixabay

ரூபாய் ஐந்தாயிரத்தில் தொடங்கப்பட்ட ஒரு பெட்டி அல்போன்சாவின் ஏல விலை படிப்படியாக உயர்ந்து 31,000 ரூபாய் வரை சென்றது.

இதுகுறித்து ஏலத்தை எடுத்த வியாபாரி கூறுகையில், ``இந்த சீஸனுக்கான முதல் மாம்பழங்கள் இவையென்பதால், அதிக விலைக்குத்தான் ஏலம் போகும்.

எப்போதும் முதல் பெட்டிக்கான ஏலத்தில் பங்கெடுப்பது நல்லது. ஏனெனில், மொத்த விற்பனை சந்தையில் எங்கள் கை ஓங்கியிருப்பதற்கு இது உதவும். 50 ஆண்டுகளில் இல்லாத கொள்முதல் விலை இது” என்றார்.

மாம்பழங்களில் மிகச் சிறந்ததாக விளங்கும் அல்போன்சா மாம்பழம், ஹாபஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதை `மாம்பழங்களின் ராஜா' எனவும் குறிப்பிடுவர்.