Election bannerElection banner
Published:Updated:

தொடர் மழை... பூஞ்சை தாக்குதலுக்கு ஆளான பயிர்கள்... கண்ணீரில் தேனி விவசாயிகள்!

விவசாயிகள்
விவசாயிகள்

தொடர் மழை காரணமாக, பயிர்களில் பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டு, கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

தேனி மாவட்டம் சிவலிங்கநாயக்கன்பட்டி, கொடுவிலார்பட்டி, தாடிச்சேரி, தப்புக்குண்டு, கோட்டூர், சீலையம்பட்டி, தர்மாபுரி, அடைக்கன்பட்டி, கண்டமனூர், டி.மீனாட்சிபுரம், தேக்கம்பட்டி, சுப்புலாபுரம், மரிக்குண்டு, ஏத்தக்கோவில் ஆகிய பகுதிகளில், மானாவரி விவசாயம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். குறிப்பாக, கம்பு, சோளம், பயறு வகைகள் பயிர் செய்யப்படும்.

விவசாயிகள்
விவசாயிகள்

இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த பயிர்களில் பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டு நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகக் கூறும் விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

''அமைச்சர்  காளைக்கு நான்தான் டாக்டர்'' - மதுரை ’ஜல்லிக்கட்டுக் காளை’ ஸ்பெஷலிஸ்ட் மெரில் ராஜ்!

நம்மிடையே பேசிய தமிழக தேசிய விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவர் சீனிராஜ், ``தொடர் மழை காரணமாக மானாவரி விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கா சோளம், கம்பு போன்ற பயிர்கள் பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளானதால் வீணாகிவிட்டது. மேலும், செடியிலேயே முளைத்துவிட்டது. அதை அறுவடை செய்தாலும் எந்தப் பயனும் இருக்காது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்துதான் கலெக்டரை சந்திக்க வந்திருக்கிறோம்” என்றார்.

விவசாயிகள்
விவசாயிகள்

விவசாயிகளைச் சந்தித்த மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ், ``பாதிக்கப்பட்ட நிலத்தை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யச் சொல்கிறேன். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி பதிவு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் குறித்த தகவலும் சேகரிக்கப்பட்டு, உரிய முறையில் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என உறுதியளித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு