Published:Updated:

கம்பம் பள்ளத்தாக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுப்பதில் சிக்கல்... அமைச்சர் சமரச பேச்சுவார்த்தை!

கூட்டம்

​எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் ​குழாய்களை ​அகற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு பின்னால் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இது குறித்து நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கம்பம் பள்ளத்தாக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுப்பதில் சிக்கல்... அமைச்சர் சமரச பேச்சுவார்த்தை!

​எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் ​குழாய்களை ​அகற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு பின்னால் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இது குறித்து நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Published:Updated:
கூட்டம்

​தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் நீர் வழித்தடம் இல்லாத பகுதிகளுக்கு குழாய்கள் மூலமாக தண்ணீர் எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு விவசாயிகள் பயன்படுத்திய தண்ணீர் சட்டவிரோதமாக முல்லைப் பெரியாற்றில் இருந்து எடுக்கப்படுவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் பொதுப்பணித்துறையினர் 4​7 குழாய்களை அகற்றினர். இதனால் விளை நிலங்களுக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை இன்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.​​

விவசாயிகள்
விவசாயிகள்

​இதற்காக தேனி மாவட்​ட​ ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ​5​00​ பேர் குவிந்திருந்தனர். சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் முரளீதரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் - ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் - சரவணக்குமார் உட்பட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி உடன் கட்சியினர்
அமைச்சர் ஐ.பெரியசாமி உடன் கட்சியினர்

சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்கு பின் விவசாயிகளிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தண்ணீர் எடுத்துச் செல்வதில் நிலவும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக விரைவில் முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த விவசாயிகள் கலைந்து சென்றனர். 

​இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ​நாராயணசாமியிடம் பேசினோம். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் நிலங்கள் நீர் வழித்தடம் இல்லாமல் இருக்கிறது. இதற்காக விவசாயிகள் சொந்த செலவில் வங்கிக்கடன் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தங்கள் விளை நிலங்களுக்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் முல்லைப் பெரியாற்றில் இருந்து சட்டவிரோதமாக விவசாயிகள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவர்கள் குழாய்களை அகற்றியுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த விவசாயிகள்
பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த விவசாயிகள்

அதனை ​​எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் ​குழாய்களை ​அகற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு பின்னால் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இது குறித்து நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.