Published:Updated:

`பயிர்கள் சேதமடைந்ததற்கு அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம்!' - வேதனையில் டெல்டா பகுதி விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீரில் மூழ்கிய நெற்பயிரை காட்டும் விவசாயிகள்
நீரில் மூழ்கிய நெற்பயிரை காட்டும் விவசாயிகள்

`` `பயிர்கள் மூழ்கியுள்ளது, இப்போதாவது வந்துப் பாருங்கள்' என அதிகாரிகளிடம் சொன்ன பிறகுதான் வந்தனர். `தூர் வாரிய பிறகும் ஏன் தண்ணீர் நிற்கிறது' எனக் கேட்டனர் அதிர்சியடைந்த நாங்க நாங்கள், ` 2019-ல் தூர் வாரினோம் என் பெயரளவிற்கு கண்துடைப்பாக பணி நடந்தது' என்று கூறினோம்."

டெல்டா மாவட்டங்களில், ஏற்கெனவே பெய்த தொடர் மழையால், 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில், தற்போது பெய்த மழையில் 70,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நடவு செய்யபட்ட ஒரு வாரம் முதல் சில வாரங்கள் வரை ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

வடிகால்கள் முறையாக தூர் வாரப்படாததே பயிர்கள் நீரில் மூழ்கியதற்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததை தொடர்ந்து திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடவு செய்யப்பட்ட நெல் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்
மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்
Tamil News Today: வேலூரில் கனமழை... வீடு இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள், 4 பெண்கள் என 8 பேர் பலி!

குறிப்பாக அம்மையகரம், பாதிரக்குடி, கழுமங்கலம், களர்பட்டி, அம்மன்குடி, அந்தலி, நடுக்காவேரி, அம்மன்பேட்டை, ஆற்காடு, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நடவு செய்யப்பட்ட 2,000 ஏக்கர் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இது குறித்து அம்மன் பேட்டையை சேர்ந்த விவசாயி சுதாகரிடம் பேசினோம். ``எங்கள் ஊரில் மட்டும் 100 ஏக்கர் அளவில் நெற்பயிர் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. நடவு செய்யப்பட்டதிலிருந்து அறுவடை வரை நெற்பயிரை நாங்க குழந்தையைப் போல பராமரிப்பது வழக்கம்.

எங்கள் பகுதியில் நடவு செய்யப்பட்ட ஒரு வாரமான பயிர்களும், சில தினங்களான பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. வயக்காடு வெள்ளக்காடாக மாறி கடல் போல் மாறிகயுள்ளது. வயலுக்குள் இறங்கினால் முட்டிக்கால் அளவிற்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. விவசாயிகள் கடன் வாங்கி நடவு செய்துள்ளதால் பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதை கண்கங்கள் கலங்க கவலையுடன் பார்த்து வருவது வேதனை.

பாதிக்கப்பட்ட விவசாயி
பாதிக்கப்பட்ட விவசாயி

எங்க ஊர் விவசாயிகள் தொடர்ச்சியாக இது போன்ற அவலத்தை சந்திப்பதுதான் கொடுமை. எங்க ஊரை கடந்து செல்லும் பஞ்சாரம் வாய்க்கால் தூரவாரப்படவில்லை. மானாமதுரை-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்றபோது வடிகால் வாய்க்கால்கள் சேதமடைந்தன. சாலைக்கு அடிப்பகுதியில் வடிகாலை இணைப்பதற்கு வைக்கப்பட்ட குழாய் வடிகாலை விட உயரத்தில் வைத்து விட்டனர். இதனால் மழைநீர் குழாய் வழியாக வடிகாலில் ஓடுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனை வேளாண்மைதுறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் அவர்கள் காட்டிய அலட்சியமே வயக்காடு வெள்ளக்காடாக மாறியதற்கு காரணமாகியிருக்கிறது. `பயிர்கள் மூழ்கியுள்ளது, இப்போதாவது வந்துப் பாருங்கள்' என அதிகாரிகளிடம் சொன்ன பிறகுதான் வந்தனர். `தூர் வாரிய பிறகும் ஏன் தண்ணீர் நிற்கிறது' எனக் கேட்டனர் அதிர்சியடைந்த நாங்கள், ` 2019-ல் தூர் வாரினோம் என் பெயரளவிற்கு கண்துடைப்பாக பணி நடந்தது. இதனை அப்போதே நாங்கள் சுட்டிகாட்டினோம்' என்று கூறியதற்கு, `அப்போதைய ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர்தான் ஒப்பந்தம் எடுத்து பணியை செய்தார்; அவர் தரமாக செய்யவில்லை என எங்களுக்கும் தெரியும் நாங்கள் என்ன செய்ய முடியும்' என்றனர். வடிகால் முறையாக தூர் வாராததே பல பகுதிகளில் மழை நீர் வயல்களில் தேங்கி நிற்பதற்கு காரணம்” என்றார் சுதாகர்.

அழுகிய நெற்பயிரை காட்டும் விவசாயி
அழுகிய நெற்பயிரை காட்டும் விவசாயி
நெல்லையில் பெய்த கனமழை: வெள்ள நீரால் சூழப்பட்ட கோழிப்பண்ணை! - உயிரிழந்த 5,500 கோழிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருக்க கூடும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதே போல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டு வருகிறது. கல்லணை வந்தடைந்த பிறகு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால், கரையோர கிராமங்களான ஆச்சனூர், சாத்தனூர், வடுககுடி, மருவூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 200 ஏக்கர் வாழை தோப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் தண்ணீர் வடியவும் வழியில்லை. இதனால் வேர் அழுகி வாழை சாயக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு