Published:Updated:

சர்க்கரை வியாதி என்பது நோயே அல்ல... இனிப்புடன் வாழும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

சர்க்கரை வியாதி என்பது நோயே அல்ல... இனிப்புடன் வாழும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

‘‘நீரிழிவு என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய் என்பதே ஏமாற்று வேலைதான். இது நோயே அல்ல’’ என்று மக்கள் மருத்துவர் பி.எம்.ஹெக்டே சொல்லியதை, கடந்த இதழில் பகிர்ந்திருந்தேன். அதற்குள் நுழையும்முன், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நான் எதிர்கொண்ட ‘இனிப்பான’ அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்து விடுகிறேன்.

அண்மையில் புதுடெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். அதிகாலை 5 மணிக்கு அந்த ஏ.சி ரயில் பெட்டி முழுக்க இனிப்பு வாசனை மூக்கை துளைத்தது. தென்னிந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்த வட இந்தியக் குடும்பத்தினர்,

விதவிதமான இனிப்புகளைச் சுவைத்த வண்ணம், ஆவி பறக்கத் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் அவர்கள் இருக்கை அருகில் உறங்கிக் கொண்டிருந்தேன். இனிப்பு வாசனையும் இந்தியும் தூக்கத்திலிருந்து எழுப்பின. நானும் எழுந்து உட்கார்ந்துகொண்டேன்.

பி.எம்.ஹெக்டே
பி.எம்.ஹெக்டே

எனக்கும் கலாகந்த், ஆக்ரா பேத்தா (வெண்பூசணி மிட்டாய்) என்று கலர் கலரான இனிப்புகளையும் நம்கின் என்ற உப்பு தூக்கலான மிக்ஸரையும் தட்டு நிறைய அள்ளிக் கொடுத்து அன்பைக் காட்டினார்கள். ஜன்னலில் எட்டிப் பார்த்தேன். ரயில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடர்ந்த காடுகளைக் கடந்து வந்துகொண்டிருந்தது. சில மணி நேரங்களில் போபாலில் வண்டி நின்றது. பை நிறைய ‘லஸ்ஸி’ என்ற இனிப்பு தயிரை வங்கி வந்து ருசித்தார்கள். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவுகளுக்கு இடையிலும் எதையெதையோ கொறித்து வந்தார்கள். தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் வாயில் எதையாவது ருசித்துக் கொண்டே இருந்தார்கள், அந்த வட இந்தியப் போஜனப் பிரியர்கள்.

அதைப் பார்த்த எனக்குத்தான் அச்சமாக இருந்தது. ஒரு கட்டத்தில், இவ்வளவு இனிப்புகளைச் சாப்பிட்டால், நீரிழிவு நோய் வந்துவிடாதா? என்று வயதில் மூத்த வட இந்தியரிடம் கேட்டேவிட்டேன்.

‘‘இனிப்பைக் கண்டு பயந்தால்தான், சர்க்கரை நோயாக மாறும். நாங்கள் காலங் காலமாக இனிப்பைச் சாப்பிட்டு வருகிறோம். எங்கள் உடம்பில் சர்க்கரை அளவு, உங்களை விடக் கூடுதலாகத்தான் இருக்கும். ஆனால், உயிரைப் பறிக்காது. ஏன் தெரியுமா? உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதில்லை. கொஞ்சம், கொஞ்சமாகச் சாப்பிடுகிறோம். தேவையான அளவு நடைப்பயிற்சியும் செய்கிறோம். அப்புறம், ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதில்லை. ‘கிலோய்’ (இது தமிழில் சீந்தில் என்று அழைக்கப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் அருமருந்து) குடிக்கிறோம். இதனால், எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும், அதைச் சரி செய்யும் ஆற்றலை எங்கள் உடல் பெற்றுவிடுகிறது’’ என்று கண் சிமிட்டி, சொல்லிவிட்டு ரயில் பெட்டியிலேயே நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தார்.

இதைத்தான், பல ஆண்டுகளாக ‘மக்கள் மருத்துவர்’ பி.எம்.ஹெக்டே சொல்லி வருகிறார். இவர் எழுதிய ‘நீரிழிவு நோயின் சுயசரிதை’ (AUTOBIOGRAPHY OF DIABETES MELLITUS) என்ற ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம் இணையத்திலும்கூட கிடைக்கிறது. உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள் வாசிக்க வேண்டிய அறிவுக்களஞ்சியம் அது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

‘‘இனிப்பின் மீது அன்பு கொண்டவர்களே! என்னைச் சர்க்கரை நோய் என்கிறார்கள். உண்மையில் நான் நோயல்ல. எல்லா மனிதர்களின் ரத்தத்திலும் சர்க்கரை உண்டு. மண்ணில் வாழும் அனைவரும் இனிப்பு உள்ள மனிதர்கள்தான்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

ஆனால், சிலரிடம் சர்க்கரைச் செரிமானம் சரியாக இருக்காது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். சர்க்கரை அளவை உடம்பு கட்டுப்படுத்த முடியாத நிலையில் சர்க்கரையே நோயாகிவிட்டது என்று வாய்க் கூசாமல் பொய் சொல்கிறார்கள். உடலில் உள்ள கணையம் என்ற சுரப்பிச் சர்க்கரையைச் செரிமானம் செய்ய முடியாத நிலையில்தான், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்தச் சுரப்பி சுரக்கும் இன்சுலின் எனும் இனிப்பு கட்டுப்படுத்தும் நீர்ச்சுரப்பு கட்டுப்பாடின்றிப் போய்விட்டால் சர்க்கரை, ரத்தத்தில் சேரும் அளவும் கட்டுக்குள் இல்லாமல் போய்விடும். மனித இயக்கத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் இயக்க சக்தி தரும் சர்க்கரை இல்லாது போனால் ஆபத்து; நோய்த் தாக்கும்; உயிரிழப்பு ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உணவில் கட்டுப்பாடு, உடல் உழைப்பில் ஈடுபாடு கொண்டிருப்ப வர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடவே கூடாது. ஒருவருக்குச் சர்க்கரை நோயாவதும் அது இல்லாமல் போவதும், அவரின் வாழ்வியல் முறையில்தான் உள்ளது.

‘‘அளவான ஆரோக்கியமான உணவு, போதுமான உடல் உழைப்பு என இருந்தால் போதும். சர்க்கரை அளவு கூடவே கூடாது.’’

சர்க்கரையிலும் பிரிவுகள் உண்டு. பிறவி யிலேயே பலவீனப்பட்ட கணையம் கொண்ட குழந்தைகளுக்கு, இன்சுலின் சுரப்புக் குறைபாடு உண்டாகிறது. இது குழந்தைப்பருவ இன்சுலின் குறை நோய். குண்டான, நடுத்தர வயது, பெருந்தீனி சோம்பேறிகளுக்கு உண்டாகும் நோயைப் பெரியவர்கள் பெறும் சர்க்கரை நோய் என்கின்றனர்.

மருந்துகளுக்குள்ளும் பகை, மோதல்கள் எல்லாம் உண்டு. அனுபவமில்லா மருத்து வர்கள் தரும் மருந்துகள்கூட உடலின் சர்க்கரை அளவைக் கூட்டி, கணையத்தைக் காயப்படுத்திக் கடைசியில் சர்க்கரை பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

சிலர், அளவாக உண்பார்கள். ஓடியாடி உழைப்பார்கள். ஆனால், ‘பாவி சர்க்கரை எனக்கும் வந்துவிட்டது’ என்று அலறுவார்கள். இதற்கு மூலகாரணம் அலோபதி மருந்து என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட் டார்கள். இவர்கள் மீது பி.2 என்ற இரண்டாம் வகைச் சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரையும் குத்தப்பட்டு, வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரை செய்வார்கள்.

இந்தியாவில் இனிப்பு ஒரு பெரு நோய் (Endemic) என்று மருந்து தயாரிக்கும் நிறுவனங் கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

பேய்க் கதை சொல்லி குழந்தை களைப் பயமுறுத்துவதுபோல, சர்க்கரை அளவுகளைக் காட்டி, காசு பார்த்து வருகின்றன, பொல்லாத மருந்து நிறுவனங்கள்.

சர்க்கரையைக் காரணம் காட்டி, மருத்துவத் துறையில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இயல்பான மனிதர், தனக்குச் சர்க்கரை நோய் இருக்குமோ என்று பயத்தில் பரிசோதனை செய்தால், நிச்சயம் சர்க்கரை அளவு கூடுதலாகவே காட்டும். காரணம், இயற்கை அமைப்பில் நம் உடலில் பயம் ஏற்படும்போது, சர்க்கரை அளவைக் கூட்டுகிறது.

இனிப்புகள்
இனிப்புகள்

அதாவது, ஒரு மனிதனைப் புலி துரத்துகிறது என்றால், ஆபத்திலிருந்து தப்பிக்க அந்த மனிதனுக்குக் கூடுதல் சக்தி தேவை. அதை உடலில் சுரந்து, தற்காப்புக்கு உதவுகின்றது. நாகரிக உலகில் மருத்துவமனைகளையும் மருத்துவர்களையும் பார்த்தவுடன் உயிர் பயம் வந்துவிடுகிறது. இதனால்கூட சர்க்கரை கூடிவிடுவதுண்டு. 5 - 25 சதவிகித மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இதைப் போலி நிலை என்கிறோம் (False Positive). ஆனால், மருந்து நிறுவனங்களும் மருத்துவர்களும் விடுவார் களா? இந்தப் போலி நிலை சர்க்கரை மனிதர்களையும் சர்க்கரை நோயாளிகள் என்று சொல்லி, பணத்தைக் கறக்கிறார்கள்.

சர்க்கரை நோய் அதிகரித்துள்ளது என்பதை நான் நம்ப மாட்டேன். மாறாக மக்களில் ஒரு பகுதியினர் வசதி வாய்ப்பு பெற்றுள்ளார்கள். அவர்கள் கட்டுப்பாடின்றி அசுரத்தனமாகத் தின்று தீர்க்கிறார்கள். முன்புபோல உடல் உழைப்பு எதுவும் இல்லை. இதனால் பெருத்துப் போகிறார்கள். சர்க்கரையைச் சமன்படுத்தும் திறனை அவர்களின் கணையம் இழந்துவிடுகிறது. சர்க்கரை நோய் வர குடும்பம் சார்ந்த மற்றொரு காரணமும் உண்டு. ஒரு ஏழையின் குடும்பத்தில் கருவுற்ற பெண், முதல் சில மாதங்களில் நல்ல உணவு உண்ணாமல் போயிருந்தால், குழந்தையின் கணையம் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. சிறிய கணையம் வயதான பின்பு சரியாக இன்சுலின் சுரப்பதில்லை. இத்தகைய ஏழையின் பிள்ளைகள் வசதி வாய்ப்பு வந்து, அதிக உணவு உண்ணும்போதும், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதை மரபணு- உணவு ஒவ்வாமை சர்க்கரை நோய் என்கிறார்கள்.

இந்தக் கணிப்பொறி உலகம் உடல் உழைப்பு ஏதுமற்று சோம்பேறிகளையே உற்பத்தி செய்கிறது. இதனால், முதலில் பாதிக்கப்படுவது கணையம்தான், கண்மணி களே! சர்க்கரை உங்கள் உடலுக்கு நன்மை செய்யவே உள்ளது. அதை அறிந்துகொள்ள முயலுங்கள். அதற்கு உடல் எடையைச் சரியாக வைத்துக்கொள்வது. அளவான ஆரோக்கியமான உணவு, போதுமான உடல் உழைப்பு என இருந்தால் போதும். சர்க்கரை அளவு கூடவே கூடாது. இதற்கு எந்தச் சிறப்பு உணவு முறையும் தேவையில்லை. குண்டாக இருப்பவர்கள் குறைவாகச் சாப்பிடுங்கள். ஒல்லியாக இருப்பவர்கள் நன்றாக உண்டு இயல்பான எடைக்கு வந்துவிடுங்கள். அவசரகதியில் அள்ளிக் கொட்டிக் கொள்ளாதீர்கள். முடிந்தால், மூன்று வேளை உணவை ஆறு வேளையாகப் பிரித்து உண்ணுங்கள்.

இந்த உலகமே நம்மால்தான் இயங்குகின்றது என்று மனச் சுமையை ஏற்றிக் கொள்ளாதீர்கள். மன உளைச்சலும்கூட சர்க்கரை அளவைக் கூட்டிவிடும். ஆகை யால், மகிழ்ச்சியுடன் வாழுங்கள். இதைக் கடைப்பிடித்தால், மருந்து, மாத்திரைகள் இல்லாமல் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

இதுக்கு பின்னும்கூட ஒருவருக்குச் சர்க்கரை இருக்குமானால் அவர், நிச்சயம் நல்ல மருத்துவரின் வழிகாட்டுதலைப் பெறுவது அவசியம். ரொரம்ப சொல்லி விட்டேன். உங்களை நீங்கள்தான் காத்துக் கொள்ள வேண்டும். என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டு, நல்வாழ்வு வாழுங்கள். இனிப்பு பகையல்ல; நான் நல்ல நண்பன் என்பதைப் போகப் போக புரிந்துகொள் வீர்கள்’’ எனச் சுவைப்படச் சொல்லியிருக் கிறார் பி.எம்.ஹெக்டே.

‘‘நண்பர்களே, நான் ஆரம்ப கல்வியைப் பள்ளி சென்று கற்கவில்லை. என் கிராமமும் என்னைச் சுற்றியிருந்தவர்களிடமும் நிறையக் கற்றுக்கொண்டேன். பள்ளிச் சென்றவுடன் கற்பது நின்று போனது. படிக்கத் தொடங்கினேன். எல்லாம், ஏட்டுக் கல்வி. 1964-ம் ஆண்டு மங்களூரில் என் மருத்துவப் பணியைத் தொடங்கினேன். என் மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் என்னைச் சிறந்த மாணவன் என்பார்கள். இதனால், எனக்குத் திமிரும் கூட இருந்தது.

இதய மருத்துவ அனுபவத்தை உலகின் சிறந்த மருத்துவமனைகளில் பெறும் அரிய வாய்ப்பை பெற்றேன். லண்டனில் மிடில் செக்ஸ், ஹார்வேர்டு... போன்ற புகழ்பெற்ற மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றேன்.

உலகையே அறிந்துகொண்டதாக மங்களூரில் உலா வந்தேன். ஆனால், அது வெகு காலம் நீடிக்கவில்லை. இதய நோய் சிகிச்சைக்காகத் தேவண்ணா என்ற 30 வயது இளைஞன் என்னிடம் வந்தான். என் வாழ்க்கையை இவன்தான் மாற்றினான்...’’

பி.எம்.ஹெக்டே பேசும்போது, அவர் குரலும் முகமும் வேறு வடிவம் பெறுகின்றன.

அதை அடுத்த இதழில் பார்ப்போம்.