Published:Updated:

கால்வாய்கள் கட்டப்பட்டபின் கிராமப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா? ஆய்வு கூறும் உண்மை!

Canal ( Photo: Vijay. T / Vikatan )

நகரமயமாக்கல் மற்றும் கல்விக்கான தேவையைக் கால்வாய்கள் அதிகரித்துள்ளன. ஆனால், கால்வாய்கள் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், அங்கு வேளாண்மை சாரா வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை எனவும் தொழில்மயமாக்கமும் இல்லை என 1901 - 2011 ஆண்டுக்கான ஆய்வறிக்கைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கால்வாய்கள் கட்டப்பட்டபின் கிராமப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா? ஆய்வு கூறும் உண்மை!

நகரமயமாக்கல் மற்றும் கல்விக்கான தேவையைக் கால்வாய்கள் அதிகரித்துள்ளன. ஆனால், கால்வாய்கள் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், அங்கு வேளாண்மை சாரா வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை எனவும் தொழில்மயமாக்கமும் இல்லை என 1901 - 2011 ஆண்டுக்கான ஆய்வறிக்கைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Published:Updated:
Canal ( Photo: Vijay. T / Vikatan )

இந்தியாவில் கால்வாய்களுக்கு அருகிலுள்ள ஊர்கள் மிக வேகமாக நகரமயமாயின. ஆனால், தொழில்மயமாகவில்லை என `டெவலப்மென்ட் டேடா லேப்' என்ற ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கால்வாய்கள் கட்டப்பட்ட பகுதிகளின் வளர்ச்சி காரணமாக, மக்கள் அதிகம் அங்கு இடம்பெயர்ந்ததால் அப்பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பு மட்டுமே நடந்தது. ஆனால், கால்வாய்கள் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், அங்கு வேளாண்மை சாரா வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை என 1901 - 2011 ஆண்டுக்கான ஆய்வறிக்கைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கால்வாய்ப் பாசன வசதி கொண்ட ஊர்களில் விவசாயத்துக்குப் போதுமான தண்ணீர் இருந்ததால் அங்கு குளிர்காலத்திலும் அதிகப் பயிர்களைப் பயிரிடும் வாய்ப்பு கிடைத்தது. இதன் காரணமாக, கால்வாய்ப் பாசனம் இல்லாத ஊர்களில் வசித்தவர்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளை விடவும், நில உரிமையாளர்கள் அதிக நுகர்வும், அதிக கல்வியையும் பெறும் வாய்ப்பு பெற்று பயனடைந்தனர் என ஆய்வு தெரிவிக்கிறது.

Canal (Representational Image)
Canal (Representational Image)
Image by Pascvii from Pixabay

`ஆற்றங்கரை நகரங்களே வளர்ச்சி பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன. வேளாண்மைத்துறையிலிருந்து தயாரிப்புத்துறைக்கு பணியாளர்கள் மாறியதால் தொழில்மயமாக்கத்துடன் இந்த வளர்ச்சியும் இணைந்தே நடைபெற்றுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இதுபோன்று நிகழவில்லை’ என்கிறார் டெல்லி இந்தியத் தொழில்நுட்ப நிலையப் பொருளாதார நிபுணர் ரீதிகா கேரா.

ஓடைகளின் செயற்கை வலையமவு மூலம் நதியிலிருந்து பயன்பெறும் பகுதியைௐ கால்வாய்கள் விரிவுபடுத்துகின்றன. இந்தியாவில் பாசன வசதி பெறும் நிலப் பரப்பில் 24% காய்வாய்களின் மூலமே பலனடைகின்றன. இது நிலத்தடி நீருக்கு அடுத்தபடியாக நாட்டின் வேளாண்மைக்கு உதவும் இரண்டாவது பெரிய நீர் ஆதாரமாகும் என மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கால்வாய்ப் பாசன ஊர்களில் அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்குவது விவசாயமே. கால்வாய்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் வேலை வாய்ப்புகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்வில்லை. தேசிய தொழிற்துறை வகைப்பாடு குறியீடு அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், கால்வாய்களின் மூலம் பாசனம் நடைபெற்ற ஊர்களில், வேளாண்மை சாரா வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாகவில்லை என்றும், குறைந்தபட்சம் வேளாண் பதப்படுத்துதல் தொடர்பான தொழில்கள்கூட பெருகவில்லை என்றும் தெரிகிறது.

உலகின் ஏனைய பகுதிகளில், கால்வாய்கள் அருகே வசிப்பவர்கள், வேளாண் பணியிலிருந்து தொழிற்சாலைகள் மற்றும் திறன் சார்ந்த பணிகளுக்கு மாறியதால் தொழில்மயமாக்கலுடன் இணைந்தே நகரமயமாக்கலும் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து ரீதிகா கேரா மேலும் தொடர்கையில், ``வேளாண்மையிலிருந்து தயாரிப்பு சார்ந்த தொழில்; பின்னர் சேவைகள் என்பதே வரலாற்று ரீதியாக பின்பற்றப்பட்ட முறையாகும். தயாரிப்பு தொழில் என்பது பொதுவாக நகரப்பகுதிகளில் செயல்பட்டு வந்ததால் அவ்விரண்டும் ஒன்றோடொன்று இணைந்தே வளர்ந்தன. ஆனால், இந்தியா உலக நடைமுறையிலிருந்து சற்று பிறழ்வாக, இரண்டாம் நிலைத் துறையான தயாரிப்பை தவிர்த்து, சேவைத் துறைக்குச் சென்றது" என்றார்.

வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகள் பொதுவாகவே திறன் மிக்கத் ஊழியர்களையே பணியமர்த்துகின்றன. எனவேதான், அத்துறைகளில் காணப்படும் குறைந்த அளவிலான தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

Service sector (Representational Image)
Service sector (Representational Image)
Image by Free-Photos from Pixabay

2019-20-ல் கிராமப்புற இந்தியாவுக்கு மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பு வழங்கியது வேளாண்மைதான். அரசு தரவுகளின்படி மொத்தப் பணியாளர்களில் 61.5% வேளாண்மையில் ஈடுபட்டனர்.

2017-ல் நீதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆய்வறிக்கையின்படி கிராமப்புற பகுதிகளில் தொழிற்துறை உற்பத்தி அதிகரித்தாலும், அதனால் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. ``கிராமப்புற இந்தியாவின் தொழில் வளர்ச்சி எந்த வேலை வாய்ப்பையும் உருவாக்கவில்லை. பணியாளர்கள் குறித்த ஆய்வறிக்கைத் (பிஎல்எஃப்எஸ்) தரவுகள், நாட்டிலுள்ள தொழிலாளர்கள் வேளாண்மைத் துறையிலிருந்து வேளாண்மை சாரா துறைகளுக்கு மாறுவதைக் குறிப்பிடுகின்றன" என்று சந்த் பதிவு செய்துள்ளார்.

`தயாரிப்புத் துறை வளர்ந்து, அதன் மூலதனமும் பெருகினாலும், குறைந்த வேலை வாய்ப்புகளையே அத்துறை உருவாக்கின. குறுகிய கால ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஊழியர்களை விடவும் மூலதனத்துக்கு முன்னுரிமை அளித்தது போன்ற காரணங்களால்தான் தயாரிப்புத் துறையில் வேலை வாய்ப்பு சுருங்கியது.

கிராமங்களின் கட்டமைப்பை மேம்படுத்த செய்யப்பட்ட முதலீடுகள் அங்குள்ள மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தியதுடன், உள் இடப்பெயர்வு மற்றும் வெளியிடப்பெயர்வு ஊக்குவித்தாலும், சம்மந்தப்பட்ட கிராமங்களில் தயாரிப்புத்துறை மேம்படுவதற்கான வாய்ப்புகளை அவை ஏற்படுத்தவில்லை’ என்று 2021 ஏப்ரலில் வெளியான இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறுகிறது.

கால்வாய்களுக்கு மேலேயிருந்த ஊர்களை விடக், கால்வாய்களுக்குக் கீழேயுள்ள ஊர்களில், குளிர்கால விளைச்சல் 7.4% அதிகம் காணப்பட்டது. கால்வாய்களுக்கு மேலேயுள்ள நிலங்களை விடவும் இவ்வூர்களில் பாசன நிலங்கள் 17% கூடுதலாக இருந்த காரணத்தால் அதிகப்படியான பகுதிகளில் விவசாயம் நடைபெற வழிவகுத்தது. (புவியீர்ப்பு சக்தி காரணமாக மேட்டுப் பகுதிகளை விட நீர்நிலைகளுக்குக் கீழேயுள்ள பகுதிகளுக்கு நீரோட்டம் அதிகமாக இருந்தது). செயற்கைக்கோள் சார்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் பயிர் விளைச்சல்கள் அளக்கப்பட்டன.

தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களான பருத்தி, கரும்பு மற்றும் நெல் ஆகியவை கால்வாய்த் தண்ணீர் அதிகமிருக்கும் ஊர்களில் நன்கு விளையுமென மக்கள் தொகை தரவைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். கால்வாய்க்குக் கீழேயுள்ள ஊர்களில் வசிப்பவர்கள், வேளாண் பயிர் முதலீடுகளைவிடவும் வேளாண் கருவிகளில் அதிக முதலீடு செய்து லாபம் ஈட்டுவதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

`இருப்பினும் இப்பலன்கள் அனைத்தும் குளிர்கால மாதங்களில் மட்டுமே கிடைக்கும். இரண்டாம் பயிர்ப் பருவத்துக்குத் தேவையான தண்ணீர் அணுக்கத்தை கால்வாய்கள் அதிகரிக்கின்றன. ஆனால், பருவ மழை போதிய தண்ணீரை வழங்குவதால் கோடை (கரீஃப்) பயிர்ப் பருவத்தில் கணிசமான மாற்றங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை’ என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

கால்வாய்க் கட்டுமானத்துக்குப் பிறகு ஊர்களுக்கும், கிராமங்களுக்குமான இடப்பெயர்வு அதிகரித்துள்ளது.

கால்வாய்கள் கட்டப்பட்ட பின்னர், அவ்வூர்களின் நகரமயமாக்கம் மிக வேகமாக நடைபெற்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்திக் கால்வாய் கட்டுமானத்துக்கு முந்தைய மற்றும் பிந்திய 30 ஆண்டுகளுக்கான மக்கள் தொகை வளர்ச்சி தொடர்பாக ஆய்வுகள் நடந்தன. கால்வாய் கட்டுமானத்துக்கு முந்தைய ஆண்டுகளைவிட, கால்வாய் கட்டப்பட்ட பிந்திய 30 ஆண்டுகளில். நகரங்கள் வேகமான வளர்ச்சியைப் பெற்றன என்கிறது ஆய்வறிக்கை.

விவசாயம்
விவசாயம்

கால்வாய்களுக்குக் கீழேயுள்ள ஊர்களில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் வசிக்கும் மக்கள் தொகை கால்வாய்களுக்கு மேலேயிருக்கும் ஊர்களைவிடவும் 13.1% அதிகமாகும். இருப்பினும் வேளாண்மை, தயாரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள பாணியாளர்களின் பங்களிப்பில், கால்வாய் மேலுள்ள மற்றும் கீழுள்ள ஊர்களுக்கு இடையே கணிசமான எந்த வேறுபாடும் காணப்படவில்லை.

`கால்வாய்களின் முக்கிய விளைவாகப் பாசனப் பகுதிகளில் கூடுதல் பணியாளர்களை ஈர்த்துள்ளன. ஆனால், வேளாண்மை சாரா துறையில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. வேளாண் இடங்களிருந்து நகரங்களுக்கு நகரும் மக்களை உள்ளடக்கி உலகெங்கும் நடைபெறும் கட்டமைப்பு மாற்ற இயற்கைச் சூழலில் இது ஒத்துப் போகிறது’ என்கிறது ஆய்வறிக்கை.

பாசனத் திட்டங்கள் மூலம் நில உரிமையாளர்களுக்கே அதிக பலன்:

ஊர்களில் உற்பத்தி ஆதாயங்களை அதிக எண்ணிக்கையிலான மக்கள் அனுபவிக்க இடப்பெயர்வு உதவியது. ஆனால், நில உரிமையாளர்கள் மற்றும் நிலமற்றவர்கள் இடையே நிலவும் வாழ்வியல் மாற்றங்கள், கால்வாய்கள் உருவாக்கப்பட்டு பல பத்தாண்டுகளுக்குப் பிறகும், தொடர்ந்து அப்படியே இருந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும், இவ்வூர்களில் அமைந்துள்ள கால்வாய்க்கு மேலுள்ள ஊர்களில் வசிக்கும் நில உரிமையாளர்களின் சராசரி நில அளவு சிறிது என்பதால் அவர்களின் பங்களிப்பும் கணிசமாகக் குறைந்தே காணப்பட்டது. இது இப்பகுதிகளில் வசிக்கும் நிலமற்றோர் வீடுகளின் விகிதம் அதிகரித்திருப்பதையே குறிக்கிறது.

இவ்வூர்களில் அதிக உற்பத்தி காரணமாக, நிலமற்றவர்களை விடவும், நில உரிமையாளர்கள் உயர்வான வாழ்க்கைத் தரத்தைச் சந்தோஷமாக அனுபவிக்கின்றனர். நிலமற்றவர்களை விடவும், கால்வாய்ப் பாசன நில உரிமையாளர்கள் 1.9% அதிக நுகர்வுடையவர்களாக விளங்குகின்றனர். ஊரில் வசிக்கும் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் நில உரிமையாளர்களே அதிகபட்ச கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர்.

அருகிலிருக்கும் ஊர்களின் வளர்ச்சி, நில உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் அதிக வருவாய் போன்றவற்றால் கால்வாய்ப் பாசன ஊர்களிலும், கிராமங்களிலும், அதிக அளவிலான பள்ளிகள் உட்பட வேளாண் சாராப் பொருள்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. கால்வாய்க்கு மேலே வசிப்பவர்களைவிடவும், கால்வாய்க்குக் கீழே வசிக்கும், தொடக்கம், நடுநிலை மற்றும் மேனிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த பெரியவர்களின் எண்ணிக்கை 1% அதிகம்.

`இவ்வூர்களில் அதிக அளவில் கல்வி மேம்பாடு அடைவதற்குச் சாத்தியமான விளக்கம் அங்குள்ள பணக்கார நில உரிமையாளர்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கப் போதுமான வசதி வாய்ப்புகளுடன் இருப்பதே ஆகும். அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் தேவையென வேண்டுகோள் வைத்தால், நிலமுள்ளவர்களும் நிலமற்றவர்களும், சேர்ந்தே அப்பள்ளிகள் மூலம் பயன் பெறுவார்கள்’ என்று ஆய்வறிக்கை சமர்ப்பித்தவர்களுள் ஒருவரான பால் நோவோசத் விளக்குகிறார்.

IndiaSpend
IndiaSpend

Source:- Nushaiba Iqbal/ Indiaspend.org

(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.

தமிழில் - ஜனனி ரமேஷ்