Published:Updated:

விவசாயியை ஒருமையில் திட்டினாரா திமுக எம்.பி பழனிமாணிக்கம்? குறைத்தீர்ப்பு கூட்டத்தில் என்ன நடந்தது?

விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம்

தமிழக முதலமைச்சருக்கு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவிக்கும் விதமாக, தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வாழைப்பழமும் திராட்சையும் வழங்குகிறோம்’ என சொன்னவுடனே எம்.பி. பழனிமாணிக்கம் கடும் கோபத்துடன் என்னை பார்த்து, `உட்காரு... இல்லைனா, வெளியே போ’’என திட்டினார்.

விவசாயியை ஒருமையில் திட்டினாரா திமுக எம்.பி பழனிமாணிக்கம்? குறைத்தீர்ப்பு கூட்டத்தில் என்ன நடந்தது?

தமிழக முதலமைச்சருக்கு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவிக்கும் விதமாக, தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வாழைப்பழமும் திராட்சையும் வழங்குகிறோம்’ என சொன்னவுடனே எம்.பி. பழனிமாணிக்கம் கடும் கோபத்துடன் என்னை பார்த்து, `உட்காரு... இல்லைனா, வெளியே போ’’என திட்டினார்.

Published:Updated:
விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்புக் கூட்டத்தின்போது, தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், விவசாயியை ஒருமையில் திட்டியதாக எழுந்துள்ள சர்ச்சை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

அப்போது தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், `தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு ஆண்டுக்குள் ஒன்றரை லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து, வாழைப்பழம், திராட்சை வழங்க முற்பட்டதாகவும் அப்போது, தி,மு.க.வைச் சேர்ந்த தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விவசாயி சுவாமிமலை சுந்தர.விமல்நாதனை ஒருமையில் திட்டியதாகவும், இதனால் இவர்கள் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் எழுத்ததாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. என்னதான் நடந்தது ?

விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம்
விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய விமல்நாதன், ``கூட்ட அரங்கத்திற்கு வந்த எம்.பி. பழனிமாணிக்கம், விவசாயிகள் அமரும் பகுதியில் வந்து அமர்ந்தார். அவரை மேடையில் வந்து அமரும்படி ஆட்சியர் அழைத்தார். அவர் அங்கு உட்கார்ந்த பிறகு கூட்டம் தொடங்கியதும், வேளாண்மை தொடர்பான பல்வேறு துறையிகளின் அறிக்கையை வேளாண் இணை இயக்குநர் வாசிக்கத் தொடங்கியதும், நான் எழுந்து, `களிமேடு அப்பர் கோயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். தமிழக முதல்வரே நேரில் வந்து, அஞ்சலி செலுத்தியுள்ளார். விவசாயிகளுக்காக நடத்தப்படும் இக்கூட்டத்தில் நாமும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்' என கோரிக்கை வைத்தேன். அதனை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய பிறகு, பல்வேறு துறைகளின் அறிக்கை வாசித்து முடிக்கப்பட்டது. விவசாயிகள் பேசும் நேரம் தொடங்கியது. அப்போது நான் எழுந்து நின்று, `தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை யாருமே அறிவித்திடாத அறிவிப்பாக, தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு ஆண்டுக்குள் ஒன்றரை லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்க அறிவிப்பு வெளியிட்டதோடு, அதில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக முதலமைச்சருக்கு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவிக்கும் விதமாக, தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வாழைப்பழமும் திராட்சையும் வழங்குகிறோம்’ என சொன்னவுடனே எம்.பி. பழனிமாணிக்கம் கடும் கோபத்துடன் என்னை பார்த்து, `உட்காரு... இல்லைனா, வெளியே போ’’என திட்டினார். `விவசாயிகளுக்காக நடக்கும் கூட்டத்தில் விவசாயியான என்னை இப்படி ஒருமையில் பேசலாமா' என நான் அவரிடம் ஆதங்கப்பட்டேன். `முதல்வரின் அறிவிப்பை பாராட்டி, பழங்கள் கொடுத்து, மகிழ்ச்சி தெரிக்க கூடாதா’ என ஆட்சியரை நோக்கி நான் கேள்வி எழுப்பினேன். கூட்டம் முடிந்த பிறகு கொடுக்கலாம் என ஆட்சியர் சொன்னார். நான் அமர்ந்துவிட்டேன். அரசியலமைப்புப்படி, இந்த கூட்டத்திற்கு ஆட்சியர்தான் தலைவர்.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

அவர்தான் இந்த கூட்டத்தை வழி நடத்த முடியும். மக்கள் பிரதிநிகளாக பதவி வகிப்பவர்கள், ஒருவேளை விவசாயியாக இருந்தால், விவசாயிகள் அமரும் இடத்தில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளையோ, குறைகளையோ சொல்லலாம். அவர்களுக்கு வேறு எந்த அதிகாரமும் கிடையாது. அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சியர் தலைமையில், விவசாயிகளுக்காக நடத்தப்படும் கூட்டத்தில், அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து கொண்டு அரசியல் செய்வது அழகல்ல. இது அதிகார வரம்பு மீறல் இதனை தமிழக முதலமைச்சர் ஊக்கப்படுத்தக்கூடாது. விவசாயிகளுக்கான கூட்டத்தை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வழிநடத்தினால் என்ன ஆகும்? அரசியல் அதிகார வரம்பு எல்லை தாண்டி போகும்’’என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவரது குற்றச்சாட்டு குறித்து எம்.பி.பழனிமாணிக்கத்திடம் விளக்கம் கேட்டபோது, ``நான் ஒரு விவசாயி. இப்போதும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு விவசாயியாகவும் மக்கள் பிரநிதி என்ற அடிப்படையில்தான் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். ஜூன் மாதம் நெருங்கிவிட்டது. மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக, விவசாயிகளின் கோரிக்கைகளை பெற வேண்டிய கூட்டம் இது. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, பழங்கள் கொடுத்தால், விவசாயிகள் தங்களது குறைகளை கோரிக்கைகளை தெரிவிப்பதற்கான நேரம் பாதிக்கப்படும் என்பதால்தான் கூட்டம் முடிந்த பிறகு தரலாம் என்றேன். தஞ்சையில் நடைபெறும் விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டங்களில் பெரும்பாலான நேரங்களை விமலநாதான் போன்ற ஒரு சிலரே ஆக்கிரமித்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. மற்ற விவசாயிகள் பேசுவதற்கு நேரம் கிடைப்பதே இல்லை. சத்தீஸ்கரில் நெல் விலை உயர்த்தப்பட்டதற்கு, அந்த முதல்வரை பாராட்டி, தஞ்சை கூட்டத்தில் கடந்த முறை விமல்நாதன் பழங்கள் கொடுத்தது சரியான செயலா? யாரை அவமானப்படுத்துகிறார்.

பழநிமாணிக்கம்
பழநிமாணிக்கம்

அது ஒருபுறமிருக்கட்டும். தற்போது தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பதென்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அதை முன்கூட்டியே மாவட்ட ஆட்சியரிடம் எழுதிக் கொடுத்து பாராட்டு தீர்மானம் கொண்டு வர வேண்டும். விவசாயிகள் தங்களது ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளை வைப்பதற்கான நேரத்தை வீண்டிப்பதை தமிழக முதல்வரே விரும்பமாட்டார். விமலநாதனை நான் ஒருமையில் பேசவில்லை. இவர் சிறு வயதிலிருந்தே எனக்கு நன்கு பரிச்சயம். எப்போதுமே இந்த உரிமையில்தான் அவரிடம் பேசுவது வழக்கம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism