Published:Updated:

வினோத எறும்புகள் கால்நடைகளின் கண்களை தின்கிறதா? திண்டுக்கல் விவசாயிகள் அதிர்ச்சி!

பாதிக்கப்பட்ட ஆடு

வனப்பகுதியை ஒட்டியப் பகுதிகளில் உள்ள கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களை கட்டெறும்பு போன்ற வினோத எறும்பு கடித்து தின்றுவிடுவதாகவும், வனப்பகுதிகளில் காட்டுமாடு, பாம்பு, முயல், ஓணான், தேள் உள்ளிட்ட வனஉயிர்கள் இந்த எறும்பு தாக்குதலால் வனத்தைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வினோத எறும்புகள் கால்நடைகளின் கண்களை தின்கிறதா? திண்டுக்கல் விவசாயிகள் அதிர்ச்சி!

வனப்பகுதியை ஒட்டியப் பகுதிகளில் உள்ள கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களை கட்டெறும்பு போன்ற வினோத எறும்பு கடித்து தின்றுவிடுவதாகவும், வனப்பகுதிகளில் காட்டுமாடு, பாம்பு, முயல், ஓணான், தேள் உள்ளிட்ட வனஉயிர்கள் இந்த எறும்பு தாக்குதலால் வனத்தைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Published:Updated:
பாதிக்கப்பட்ட ஆடு

​திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ​கரந்தமலை வனப்பகுதியை​ச்​ சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு,​ ​ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. ​​​​வ​னப்பகுதியை ஒட்டியப் பகுதிகளில் உள்ள கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களை கட்டெறும்பு போன்ற வினோத எறும்பு கடித்து திண்று விடுவதாகவும், வனப்பகுதிகளில் காட்டுமாடு, பாம்பு, முயல், ஓணான், தேள் உள்ளிட்ட வனஉயிர்கள் இந்த எறும்பு தாக்குதலால் வனத்தைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட விவசாயி
பாதிக்கப்பட்ட விவசாயி

இதுகுறித்து ​வேலாயுதம்பட்டி பகுதியை​ச்​ சேர்ந்த​ ராசுவிடம் பேசினோம். இந்த மலைப்பகுதியில் நடுவே ​2 ஆண்டுகளுக்கு முன்​பே வினோத எறும்புகள் பரவி​யது. இவை​​​​ நாளாடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும்​ ​பரவியது. தற்போது கடந்த சில நாட்களாக ​வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பரவ​த்​ தொடங்கியுள்ளது.

​இந்த வினோத வகை எறும்புகள் வனப்பகுதிக்கு சென்றவுடன் மனிதர்கள் உடலில் வேகமாக ஏறுகிறது. குறிப்பாக இந்த எறும்புகள் கண்களை மட்டுமே கடி​க்கிறது. ​இந்த எறும்புகள் மனிதர்கள் உடலில் ஏறுவதால் அலர்ஜி மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகிறது. இதனால் ​​வேலாயுதம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஆடு
பாதிக்கப்பட்ட ஆடு

மேலும் இந்த எறும்புகளால் வனப்பகுதியில் உள்ள பாம்பு, முயல் போன்ற வனவிலங்குகள் அனைத்தும் இறந்து வி​டுகின்றன. மேலும் காட்டு மாடு போன்ற பெரிய வனவிலங்குகளும்​ ​இந்த எறும்புகளின் தாக்குதலுக்கு உள்ளா​கி அப்பகுதியில் இருந்து ​வெளியேறியுள்ளன.

​விவசாயிகளின் ஆடு, மாடு போன்ற கன்றுகளில் கண்களை தின்று விடுகிறது. இதனால் எறும்புகள் பரவி உள்ள விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு குடி பெயர்கின்றனர். இதனால் மலைப்பகுதி முழுவதும் மல மல என பரவி வன விலங்குகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளையும் கொல்லும் இந்த வினோத எறும்பை​க்​ கட்டுப்படுத்த வேண்டும் என​ வலியுறுத்தியுள்ளனர்.

எறும்புகள்
எறும்புகள்

​இதுகுறித்து வனத்துறை​யினரிடம் விசாரித்தோம்.“ இது புதுவகையான எறும்பாக உள்ளது. ​கடந்த ஆண்டு மழைகாலத்தின் போது இதுபோன்ற எறும்புகள் வனப்பகுதிக்குள் இருந்தது. ஆனால் வனஉயிரினங்களின் கண்களை கடித்ததாகத் தெரியவில்லை. அதேபோல இந்த எறும்பு கடிப்பதால் கால்நடைகள் இறப்பாகவும் கூறுவதை விசாரித்துத் தான் உறுதியாக கூறமுடியும். ​கால்நடை வளர்ப்போர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கால்நடைகளை கொண்டு செல்ல முடியவில்லை என்பதற்காக தவறான தகவல்களையும் பரப்ப வாய்ப்புள்ளது” என்றனர்.