Published:Updated:

பேராண்மையும் ‘பசுமை’ ராக்கெட்டும்!

ஜனநாதன்
பிரீமியம் ஸ்டோரி
ஜனநாதன் ( திரைப்பட இயக்குநர் )

ஜனநாதன் திரைப்பட இயக்குநர்

பேராண்மையும் ‘பசுமை’ ராக்கெட்டும்!

ஜனநாதன் திரைப்பட இயக்குநர்

Published:Updated:
ஜனநாதன்
பிரீமியம் ஸ்டோரி
ஜனநாதன் ( திரைப்பட இயக்குநர் )

‘பசுமை விகடன்’ முதல் இதழிலேயே என்னுடைய பேட்டி வெளியானது. அந்த வகையில் பசுமை விகடனுக்கும் எனக்கும் முன்பிருந்தே தொடர்பு உள்ளது. இந்தியாவின் செல்வம் விவசாயம்தான். அதுதான் நம் முன்னோரை வாழ வைத்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த இங்கிலாந்து நாட்டில் நீர் வளமும் இல்லை, நில வளமும் இல்லை. அதனால், அங்கே உற்பத்தியும் இல்லை. இதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருக்கும் விவசாயத்தை லாபகரமாக்க நினைத்தது. முதலில் பருத்திக்கும் அடுத்து கரும்புக்கும் இங்கே ஆலைகள் தொடங்கப்பட்டன. இந்தியாவில் விளையும் பருத்தியை நூலாக்கி, அதை உலகச் சந்தையில் விற்பனை செய்து லாபம் பார்த்தது, பிரிட்டிஷ் அரசாங்கம். விடுதலைக்குப் பிறகு நேரடியாக இல்லாமல் மறைமுகமாக நம்முடைய பொருள்கள் உலகச் சந்தைக்குச் செல்கின்றன. இதனால், விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறதா, அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உற்பத்தியாவது பெருகியது. விடுதலைக்குப் பிறகு ஊர்த்தலைவர்களும், உள்ளூர் கட்சிக்காரர்களும் கையில் கிடைத்ததையெல்லாம் சுருட்டி லாபம் பார்க்கின்றனர். இந்த அரசியலை விவசாயிகள் புரிந்து செயல்பட வேண்டும். நம்முடைய அடிப்படை சக்தி, விவசாயம்தான். கருத்துகள் சிந்தனைகள், பொருளாதாரம் எல்லாமே விவசாயம் சார்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பேராண்மையும் ‘பசுமை’ ராக்கெட்டும்!

என்னுடைய பெற்றோர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன். நெல், சோளம், கேழ்வரகு போன்றவையெல்லாம் எப்படி விளையும் என்றே தெரியாது. அதுசம்பந்தமான தகவல்களைச் சேகரிக்கப் பசுமை விகடன்தான் உதவியாக இருக்கிறது. பசுமை விகடனில் எனக்குப் பிடித்த விஷயம் புத்தகத்தில் விவசாயிகளின் தொடர்பு எண்களைப் பிரசுரிப்பதுதான். அதன் மூலம் ஒரு விவசாயியோடு தொடர்பு உண்டாகிறது. ஒரு விவசாயியின் தொடர்புகள் உள்ளூரைத் தாண்டி வெளியுலகுக்கும் பரவுகிறது. பசுமை விகடன்மீது இருந்த மதிப்பால்தான் பேராண்மை படத்தில் ஒரு ராக்கெட்டுக்குப் ‘பசுமை’ என்று பெயர் சூட்டினேன். இன்றைக்கும் பசுமை விகடன் புத்தகத்தின் சந்தாதாரராக இருந்து வருகிறேன். பசுமை விகடன் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.